Saturday, May 17, 2008

சொல்லாத சமையல் ரகசியங்கள் (1)

வீட்டுக்குவீடு வித்தியாசப்படும் விஷயங்களில் சமையலும் ஒண்ணுங்க...
வீட்டுச் சாப்பாட்டுக்கு ஒரு ருசி ஹோட்டல் சாப்பாட்டுக்கு ஒரு ருசின்னு வித்தியாச வித்தியாசமா ருசியெல்லாம் பார்த்திருப்பீங்க. அந்த ருசிக்குள் அடங்கியிருக்கும் பலவிஷயங்கள் சொல்லப்படாத ரகசியங்களாகவே இருக்கும்.

ஆயிரம்தான் சொல்லு. எங்கம்மா கைப்பக்குவம் உனக்கு வரவேவராதுன்னு சொல்லி மனைவியின் காதில் புகைகிளப்பிவிடும் கணவர்களின் வார்த்தைகள் நம் வீடுகளில் அன்றாட நிகழ்வுகள்.
எல்லாரும் சமைப்பதுபோலவேதான் சமைக்கிறோம் ஆனா, இறுதியில் செய்யப்படும் சில சின்ன மாற்றங்கள் சமையலுக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுப்பது மறுக்கமுடியாத உண்மைங்க...

ஒரு உறவினர்வீட்டுக் கல்யாண நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தேன்...நாகரீகம் அத்தனை பரவாத ஊர். இரவு சமையலாக, சாதம், சாம்பார், ரசம் கூட்டு, பொரியல் அப்பளம் என்று சமைச்சிருந்தாங்க.சத்தியமா சொல்றேன் அன்னைக்கி நான் சாப்பிட்ட சாம்பார் மாதிரி இதுவரை சாப்பிட்டதில்லை. சாப்பிட்டுமுடித்தும் மனசில் நின்ற அந்த சாம்பாரை பாராட்டியே ஆகணும்ங்கிற எண்ணத்தில் சமையல் கட்டுக்குப் போனேன்.

சமைத்தவரிடம் பாராட்டியபோது அவர் சொன்னார்..."சாப்பிட்டோமா கையைக்கழுவினோமான்னு போகாம உங்கமாதிரி ஒவ்வொருத்தார் பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷமே தனிம்மா" என்று சந்தோஷப்பட்டவராக,சாம்பாரில் இருந்த அந்த தனி மணத்துக்குக் காரணம் நான் தாளித்த பொருட்கள்தாம்மா என்று சொன்னார்.

அவர் சொன்ன ரகசியம் இதுதான்... உங்க முறைப்படி காயும் பருப்பும் சேர்த்து சாம்பார் வச்சுடுங்க... கடைசியா, வெந்தயம், சீரகம், கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் இதையெல்லாம் வெடிக்கவிட்டு கடைசியில கைப்பிடி நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மல்லியிலை போட்டுத் தாளிச்சு சாம்பாரில் சேர்த்துப்பாருங்க அப்புறம் உங்கவீட்டு சாம்பாரும் ஊருக்கே மணக்கும்னு சொன்னார்.இன்னைக்கு வரைக்கும் என் வீட்டிலும் அதேமணம்தான்.

9 comments:

 1. அப்படிப்போடு அருவாளை:-))))


  எங்க மாமியார் சொன்ன ரகசியம் இது.

  சாம்பார், ரசம் தாளிக்கும்போது வெந்தயம் சேர்த்து வெடிக்கவிட்டுத் தாளிக்கணுமாம்.

  ஏங்க, இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிறக்கூடாதா?

  ஏர்கெனவே உங்க பதிவு சிலதை வந்து பார்த்துட்டு இந்த வெரிஃபிகேஷனைப் பாத்துட்டு ஓடிப்போனவள்தான் நான்.

  இன்னிக்குச் சமையலா ஆகிப்போச்சேன்னுப் பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பின்னூட்டறேன்.

  அதான் மாடரேஷன் இருக்க என்ன பயம்?:-)))

  ReplyDelete
 2. oops......

  ஏர்கெனவே= ஏற்கெனவேன்னு இருக்கட்டும்.

  ReplyDelete
 3. நன்றி துளசி கோபால்...

  சமையல் ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
  word verification தொல்லை இனி இல்லவே இல்லை :)
  பயமெல்லாம் எதுவுமில்லை...இது என்னையறியாமல் நிகழ்ந்துபோனது.

  அடிக்கடி வந்து உங்க கருத்தை சொல்லிட்டுப்போங்க.

  ReplyDelete
 4. சாம்பார் சரியில்லை என்று அடிக்கடி மனைவியுடன் ஊடல் கொள்வேன். அடடா.. அருமையான யோசனை...

  ReplyDelete
 5. ஊடல் வந்தா அடுத்து சந்தோஷம்தான்...ஆனா,இனிமே சாம்பாருக்காக ஊடல் கொள்ளுவதை மட்டும் தவித்துவிடுங்கள். :)

  ReplyDelete
 6. அட இப்படிக்கூட ஒருமுறை இருக்கா ஆ!! நன்றி சுந்தரா.

  ReplyDelete
 7. உங்களுக்குத் தெரியாததா வல்லிம்மா...

  இது அந்த சமையல்காரரின் கைப்பக்குவம். ஆனால் இதுபோலச் செய்தால் கல்யாண சாம்பார் வாசனை நிச்சயம் வரும் :)

  ReplyDelete
 8. சமையல் ரகசியங்கள் அருமை, சாம்பார், நான் பூண்டு கருவேப்பிலை கொத்து மல்லி சேர்த்து தான் தாளிப்பது, சமையத்துக்கு தகுந்தார் போல் முதலில் தாளித்தும் வேக வைப்பேன், இல்லை வேக வைத்து கடைசியிலும் தாளித்து விடுவேன், என் பையனுக்கு, சரவனா பவாவை விட என் சாம்பார் தான் ரொம்ப பிடிக்கும், பூரிக்கு கூட சாம்பார் விட்டு தான் சாப்பிடுவான்.

  ReplyDelete
 9. பின்னே, அம்மா சமையல்ன்னா சும்மாவா ஜலீலா :)

  நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails