Monday, May 26, 2008

கைமணம் -(1) ஜீரக சாதம்

தினமும் அதே சாதம்தானா என்று வீட்டில் சலிப்பாய்க் குரல் எழும்புகிறதா? ஒரு மாறுதலுக்காய் மிகச் சுலபமான ஜீரகசாதம் செய்து அசத்துங்க...

தேவையான பொருட்கள்
______________________

பாஸ்மதி அரிசி - 1 கப்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
__________

1. அரிசியைக் கழுவி, நீரை வடித்து வைக்கவும்.

2. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகத்தைப் போட்டு பொரியவிடவும். ஜீரகம் வெடித்ததும் அதில் அரிசியை இட்டு 2 நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த அரிசியில் தேவையான அளவு நீரைஊற்றி, அளவாக உப்புச்சேர்த்துக் கலந்துவிடவும்.

3. குக்கரை மூடி சிறுதீயில் வைத்து 3 விசில் விட்டதும் இறக்கிவிடலாம்.

மிக எளிதான இந்த ஜீரக சாதத்தை எந்தவகை காய்கறி குருமாவுடனோ அல்லது அசைவ உணவுவகைகளுடனோ சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள வடகமோ, அப்பளமோ இருந்தால் மிக நன்றாக இருக்கும்.

4 comments:

  1. இன்னும் சுலபமாச் சமைக்கணுமுன்னா
    மைக்ரோவேவ் பயன்படுத்தலாம்.

    இல்லைன்னா இருக்கவே இருக்கு ரைஸ் குக்கர்.

    ப்ரெஷர்குக்கர் தேய்க்கும் வேலை மிச்சம்:-)

    எல்லா வேலையும் இங்கே 'தாமாய்' என்பதால் கூடியவரை ப்ரெஷர் குக்கர்
    வெளியில் எடுக்கறதே இல்லை:-)))

    ReplyDelete
  2. //இன்னும் சுலபமாச் சமைக்கணுமுன்னா
    மைக்ரோவேவ் பயன்படுத்தலாம்.

    இல்லைன்னா இருக்கவே இருக்கு ரைஸ் குக்கர்.//

    வாங்க டீச்சர்...எல்லோருக்கும் தெரியிறமாதிரி இருக்கட்டுமேன்னுதான் குக்கர்ன்னு எழுதினேன்.

    //ப்ரெஷர்குக்கர் தேய்க்கும் வேலை மிச்சம்:-)//
    இன்னும் கொஞ்சம் நாள் வேலை செஞ்சுக்கிறேனே... :)

    ReplyDelete
  3. உங்களின் அனுமதி எதிர்பார்த்து தங்களின் பதிவை வலைசரத்தில் கோர்த்துள்ளேன்.

    Thanks in advanace

    http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_27.html

    ReplyDelete
  4. நன்றி அம்பி...என்னுடைய பதிவைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டதற்கு.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails