Wednesday, May 21, 2008

சொல்லாத சமையல் ரகசியங்கள் (4) தண்ணி ரகசியங்கள்

தண்ணின்னதும் முண்டியடிச்சிட்டு வந்து எட்டிப்பார்த்தவங்க ஏமாந்து போயிட்டீங்களோ... :-) தண்ணின்னா அந்ந்தத் தண்ணி இல்லீங்க...

நீர்நிலைகளை உறிஞ்சி, மேகமாய் மாறி, மழையாய்ப் பொழிஞ்சு, அருவியாய், ஆறாய், குளமாய்,கிணறாய், அக்வாஃபினாவாய், பிஸ்லேரியாய் எங்கும் நிறைந்திருக்கும் நம்ம குடிதண்ணீர் தாங்க...

தண்ணீர் இல்லாம சமையலே இல்லையே...அளவா தண்ணீர் வச்சு, மல்லிகைப்பூவாய் சாதம் செய்து, திட்டமா தண்ணீர் விட்டு காய்களை வேகவிட்டு, அளவான நீரில் புளியைக் கரைத்து, தண்ணீர் வற்றி அடிபிடிக்காமல் கறி சமைத்துப் பரிமாறினால் அந்த உணவு நிச்சயம் சுவையாகத்தான் இருக்கும்.

பருப்பு வேகவைக்கும்போது கொஞ்சம் தண்ணீர் அதிகமா வச்சா, ரசத்துக்கு உதவும். ஆனா,கூட்டுக்குக் காய் வேகவைக்கும்போது அதிகமா தண்ணீர் வச்சிட்டா, தேவையில்லாத தண்ணீரை வடிக்கும்போது காயோட சத்தும் சுவையும் குறைஞ்சு போயிடும். எண்ணெயில் வதக்கும் பொரியல் வகைகளுக்கு(பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக்காய்) காய்களை நறுக்கி சிறிது நீர் தெளித்து மைக்ரோவேவில் முக்கால்வாசி வேகவிட்டு எடுத்துட்டா கொஞ்சம் எண்ணெயிலேயே தாளிச்சு மசாலாப்பொடி, தேங்காய் சேர்த்து பிரட்டி எடுத்துடலாம்.புளியைக்கூட மூழ்குமளவுக்கு நீர்விட்டு மைக்ரோவேவில் முப்பதே செகண்ட் வச்சு எடுத்துட்டா பலமுறை நீர்விட்டுக் கரைக்கவேண்டிய அவசியமில்லாம சுலபமா கரைக்கவரும்.

குழம்புக்குக் காய்களை வேகவைக்க, காய்கள் மூழ்குமளவு நீர் சேர்த்து மூடியிட்டு, தீயையும் கொஞ்சம் குறைத்துவைத்து வேகவைத்தால் போதும். அதிகமா தண்ணீர்விட்டால் அதை வத்தவைக்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்டநேரம் கேஸ் வீணாகத்தான்போகும்.

கோஸ், குடைமிளகாய், கத்தரிக்காய் போன்ற காய்களுக்குத் தண்ணீரே தேவையில்லை. சிறிதளவு எண்ணெயில் சிறுதீயில் உப்பு சேர்த்து வதக்கினாலே போதும்.

இன்னமும், தண்ணீர் சிக்கனமா செலவழிக்கணும்னா மைக்ரோவேவில் சமைப்பது ரொம்பவே சுலபம். ஒரே பாத்திரத்திலேயே தாளித்து,வதக்கி,சமைத்துப் பரிமாறியும் விடலாம். பாத்திரம் கழுவும் தண்ணீர் செலவும்கூட மிச்சமாகும்.

12 comments:

 1. ஒரு"நாலு வருசத்துக்கு முன்னே நானே யோசிச்சு(???!!!)

  கொஞ்சமா இதைச் சொல்லி இருக்கேன்.

  இங்கெ

  ReplyDelete
 2. கொஞ்சம் இல்ல...நிறையவேஎ சொல்லியிருக்கீங்க...
  உங்க அனுபவத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஜுஜுபி டீச்சர்...உங்கள் வருகையும் பின்னூட்டமுமே இதற்கு சிறப்புச் சேர்க்கும் விஷயங்கள்.

  ReplyDelete
 3. சுந்தரா,

  கொஞ்சம் கடல் தாண்டினாலே இந்த மைக்ரோவேவ் அனுபவம் சிறப்பாக் கிடைக்கிறது. நினைவு படுத்தியதற்கு நன்றி. நேரமும் தண்ணியும் மிச்சப்பட்டால் வேளைப் பளுவும் குறைகிறது இல்லையா.

  இந்தத் துளசி இருக்கு பாரு... அது டச் பண்ணாத டாபிக்கே இருக்காது:)

  ReplyDelete
 4. வாங்க வல்லி அம்மா...உங்கள் வருகைக்கு நன்றி.
  அமீரகத்தில் உங்களைச் சந்திக்கும் ஆவல் அதிகமாகிறது. :-)

  ReplyDelete
 5. வல்லி,

  ஆமாம்ப்பா..... அதான் துளசிதளத்தின் தலையிலேயே


  நினைத்தது, கண்டது, கேட்டது என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுவேன்:-)  அப்படின்னு போட்டுருக்கேன்:-)))

  ReplyDelete
 6. தலையில எழுதியது என்னவா இருந்தாலும் சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாம இருக்குதே...அதுபோதும் எங்களுக்கு :-))

  ReplyDelete
 7. சுந்தரமான தகவல்கள்..சுந்தரா!
  புதிதாக கரண்டி பிடிப்போர்க்கு தேவையான தகவல்கள்.
  துள்சி, வல்லி, போன்ற
  கொல்லன் பட்டறைகளுக்கு......?

  இதுபோல் எல்லோருக்கும் தெரிந்த
  கிட்சன் ஸீக்ரட்ஸ் எல்லாம் வெளிப்படுத்துங்கள்!!வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 8. வருகைக்கு நன்றி நானானி அம்மா.

  சமையலில் நானே இன்னும் ஒண்ணாம் வகுப்புதான் :-(... என்னைவிடப்புதிய கே.ஜி லெவல் ஸ்டூடண்ட்ஸ்க்குதான் இதெல்லாம்...

  ReplyDelete
 9. ரொம்ப நல்ல டிப்ஸ்கள்.

  ReplyDelete
 10. நன்றி ஜலீலா.

  உங்க அட்டகாசமான சமையல் குறிப்புகளைப் பார்த்து நான் பலமுறை வியந்திருக்கிறேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails