Wednesday, October 22, 2008

பாலைவனப் பசுஞ்சோலை நகரம் அல்அய்ன்

ரமதான்( நம்ம ஊரில் ரம்ஜான்) விடுமுறைக்காலம்...வேலை வேலையென்று தேனிகளாய்த் திரிந்த மக்கள் கொஞ்சம் ஓய்வாய் உல்லாசம்தேடி நிமிரும் காலம். ஐக்கிய அரபுக்குடியரசின் அத்தனை சுற்றுலாத்தலங்களும் அநேகமாய் நிரம்பி வழியும் நேரம். முதல்நாள் முழுக்க மணக்க மணக்க ரமதான் பிரியாணி சாப்பிட்டுவிட்டு அடுத்தநாள் விடுமுறையை அபுதாபியின் ஒருபகுதியான அல் அய்னில்(Al Ain) கழிக்கலாமென்று புறப்பட்டோம்.

இதோ,தூரத் தெரியும் மலைத்தொடரின் கோலம்...



நகருக்குள் நுழைகையில் நம்மை வரவேற்கும் பாரம்பரிய தேநீர் ஜாடியின் அமைப்பு...



நேரம் குறைவாக இருந்தபடியால் அங்குள்ள பாலைவனச் சோலைகளுக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்துவிட்டு, திரும்பிவந்து அங்குள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்தோம்.குழந்தைகளின் விளையாட்டுக்கு ஏற்றதாக இருந்தது பூங்கா.

இதோ, அதன் வாயிலில்...
அல் ஃபோஹ் பூங்கா...முதல் எழுத்தைக் காணவில்லை.



பூங்காவின் நுழைவாயில்...



எங்கே திரும்பினாலும் அழகிய பசுமை. வெயில் சாயும் வேளையின் இதமான காற்று. பறந்து திரிந்த பறவைகளின் மெல்லிசை. பூத்துச்சிரித்த மலர்களின் புன்னகையென மொத்தத்தில் பூங்காவின் அத்தனை திசையிலும் அழகு படர்ந்திருந்தது.



இதோ,செயற்கையாய் அழகுற அமைக்கப்பட்ட இயற்கை ஓவியங்கள்...



2 comments:

  1. நானும் துபைவந்ததிலிருந்து 50 தடவைகளுக்குமேல் சென்றுள்ளேன் சூப்பர் இடம் பசுமையும் குளுமையும்
    அதேசமயம் வெயிலில்தாக்கமும்
    மொத்தில் அழகோ அழகு

    புகைப்படங்கள் அழகாயிருக்கு

    ReplyDelete
  2. வாங்க மலிக்கா, நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails