Monday, March 16, 2009

ரமணா எனக்கு உறவுக்காரரில்லை...

நம் இந்திய நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு,

அரசு வழங்கும் சம்பளம் மற்றும் இதர சலுகைகளின் விபரம் இதோ...


மாதச் சம்பளம் : 12,000

தொகுதிச் செலவுக்காக வழங்கப்படும் தொகை: 10,000 (மாதமொன்றுக்கு)

அலுவலகச் செலவினங்களுக்கு : 14,000

பயணங்களுக்காக வழங்கப்படும் தொகை : ( 1 கிலோமீட்டருக்கு ரூபாய் 8), ஒருமுறை டெல்லி சென்று திரும்ப உத்தேசமாக 48,000

பாராளுமன்றக் கூட்ட நாட்களில் வழங்கப்படும் TA, DA : ரூ 500/நாளொன்றுக்கு

முதல் வகுப்பு (A/C) ரயிலில் செல்ல( இந்தியா முழுவதும்) : இலவசம்

விமானத்தில் (business Class) செல்ல(இந்தியா முழுவதும்) : வருடத்திற்கு 40 பயணங்கள் இலவசம்(மனைவி அல்லது உதவியாளருடன்)

தலைநகரிலுள்ள எம். பி ஹாஸ்டலில் தங்கும் கட்டணம் : இலவசம்

வீட்டிற்கான மின்சாரக் கட்டணம் : 50,000 யூனிட்டுகள் வரை இலவசம்

தொலைபேசிக் கட்டணம் : 1, 70,000 அழைப்புகள் வரை இலவசம்

ஆக, (எந்தக் கல்வித் தகுதியுமே அவசியமில்லாத) ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்திய அரசு செலவுசெய்யும் தொகை : 32,00,000 (வருடத்திற்கு)

அதாவது மாதமொன்றுக்கு : 2.66 லட்சம்

ஐந்து வருடத்திற்கு : 1 கோடியே 60 லட்சம்!!!

ஆக மொத்தம் 534 எம். பி க்களுக்கு, 5 வருடத்திற்கு ஆகும் செலவு : 8,54,40,00,000

(ஏறக்குறைய 855 கோடிகள்)

இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலைமை இதுதான்...

மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் செலவாகுது பாருங்க மக்களே...

செலவாகும் பணத்தில் செய்யப்படும் மக்கள்பணி என்னன்னு இனியாவது யோசியுங்க...

வாழ்க இந்தியா! வாழ்க ஜனநாயகம்!!

(கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள்,எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை)

LinkWithin

Related Posts with Thumbnails