Tuesday, June 23, 2009

கண்முன்னே அழியும் கலையொன்று...


அப்பல்லாம், விடுதியிலேயிருந்து வீட்டுக்குக் கடிதம்போடும்போது, அப்பா, அம்மா, அக்கா, தம்பி, ஆடு,மாடு,அக்கம்பக்கத்துக்காரங்கன்னு அத்தனைபேரையும் விசாரிச்சு எழுதுவேன்.

அம்மா உன்னைப் பாக்காம, உன்னோட சமையலை சாப்பிடாம ரொம்ப கஷ்டமா இருக்கும்மான்னு எழுதினதுக்காக எங்கம்மா ரெண்டுமூணுநாள் கண்ணீர்விட்டதா சொல்லி, "மவனே உன் பாசத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திட்டுக் கடிதம் எழுதுப்பான்னு அப்பா அடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

ஆனா, இப்ப என் மகன் அனுப்பின மெயிலைப் பார்த்தபிறகு, இந்தக்காலத்தில பாசம்தான் குறைஞ்சுபோச்சா இல்லே, யாருக்கும் அதை வெளிப்படுத்தத் தெரியலியான்னு புரியவே இல்லேன்னு அநியாயத்துக்கு வருத்தப்பட்டார் அந்த பாவப்பட்ட அப்பா.

அவர், பிரிண்ட் எடுத்து வைத்திருந்த கடிதத்திலிருந்த விஷயம் இதுதான்...

hi dad,

h r u?

I have some urgent expenses here. Send Rs 2000 immedietly.

tc

Ganesh

கொஞ்சமா எழுதினாலும் பையன் விஷயத்தில தெளிவாத்தான் இருக்கான்னு நான் நினைச்சுக்கிட்டேன்.

இன்லண்ட் லெட்டரிலும் ஏர் மெயிலிலும் இதயத்தைப் பரிமாறிக்கொண்ட காலம் அது...முன்னெல்லாம்,படிப்புக்காக விடுதியில இருந்தாலோ,வேலைக்காக வெளியூர்ல இருந்தாலோ வாரத்துக்கு ஒரு கடிதமாவது வீட்டுக்கு எழுதுவாங்க. கல்யாணமான புதுசுல மனைவியை விட்டு வேற ஊர்ல இருந்தா சொல்லவே வேண்டாம்... தினம்தினம் கடித மழைதான்.இந்தக்காலத்தில் செல்போனும், கணினியும் வந்து ஆக்ரமிச்சுகிட்டதால,கடிதம் எழுதுகிற அந்தக்கலையை நாம கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டுதான் வரோம்.

கணினியில தட்டித்தட்டி நிறையபேருக்குக் கையெழுத்தே மறந்துபோச்சுங்கிறது தனிக்கதை.
எனக்கெல்லாம் இ கலப்பையில எழுதிப் பழகிட்டு, எங்கேயாவது கையால் எழுத நேர்ந்தா ஏகப்பட்ட எழுத்துப்பிழைவேற...

கல்லூரிக்காலத்தில கடிதம் எழுதும்போது இன்லாண்ட் லெட்டரில் ஒட்டும் இடம் தவிர எல்லா இடத்திலும் எழுதி நிறைத்ததுண்டு. எங்கம்மா எங்கிட்ட சொல்லுவாங்க, எல்லாரும் கடிதம் எழுதும்போது அன்புள்ள அம்மா அப்பாவுக்குன்னு ஆரம்பிப்பாங்க. ஆனா, உனக்கு அங்கேயும் அப்பாதான் முதல்ல, அம்மா அடுத்ததுதான்" என்று ஆதங்கப்படுவாங்க.அந்த அளவுக்கு கடிதங்கள் பாசத்தின் பிரதிபலிப்புகளாக இருக்கும்.

பல வருஷங்கள் முன்னால் எழுதிய கடிதங்களை எடுத்துத் திரும்பப் படித்துப்பார்ப்பதன் சுவாரசியமே தனிதான். முன்னெல்லாம் வீடுகளில், ஓட்டுச்சரிவிலோ அல்லது ஜன்னல் கம்பியிலோ ஒரு கனத்த கம்பியைத் தொங்கவிட்டு அதில அப்பப்போ வர்ற கடிதங்களை அழகா குத்தி அடுக்கி வச்சிருப்பாங்க.அன்புக்கு மட்டுமல்லாமல் பல அத்தியாவசியமான விஷயங்களில் சாட்சியாகவும் இருக்கும் இந்தக்கடிதங்கள்.எழுதியதை இல்லேன்னு சொல்லமுடியாதில்ல...

கடிதத்தில் எழுதும் விஷயங்கள் கல்வெட்டு மாதிரி.சிலர் எழுதும் கடிதங்களை பலமுறை படித்துப்பார்க்கத்தோன்றும்.உதாரணமா என் தோழி ஒருத்தி எழுதிய கடிதங்களை நான் ஒன்றுக்குப் பத்துதடவை படித்ததுண்டு. புரியாம இல்லீங்க, அவ எழுதும் விதத்தில் எல்லா வார்த்தைகளும் அழகாகிவிட்டதுபோல ஒரு பிரமை தோன்றும் அப்போது.

"சின்னதொரு வட்டத்திற்குள் சிலையாக நிற்காம, அந்த வட்டத்தை விட்டு வெளியே வாங்க"ன்னு இருபது வருஷங்களுக்குமுன்னால் அவ எழுதிய அந்த பொருள்பொதிந்த வார்த்தைகளை இன்னும் மனசிலிருந்து அழிக்கத்தான் முடியல...

r78muskh9b

6 comments:

  1. உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


    உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

    இதில் குறிப்பாக
    1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
    2-ஓட்டளிப்புப் பட்டை
    3-இவ்வார கிரீடம்
    4-சிறப்புப் பரிசு
    5-புத்தம்புதிய அழகிய templates
    6-கண்ணை கவரும் gadgets
    ஒரு முறை வந்து பாருங்கள்
    முகவரி http://tamil10.com/tools.html

    ReplyDelete
  2. உண்மைதான். அதுவும், தொலைபேசி அழைப்புக்கான கட்டணங்கள் குறையக் குறைய கடிதம் எழுதுவதே குறைந்து, தற்பொழுது இல்லை என்றே ஆகி விட்டது (இது என் அனுபவம்). தமிழ் ஸ்டுடியோ இணைய தளம், 'மடல் போட்டி' ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். முக்கிய விதி, கையால் எழுத வேண்டும் என்பதே.

    சித்ரா

    ReplyDelete
  3. திகழ்மிளிர் said...
    உண்மை தான்

    நன்றி திகழ்மிளிர்!

    ReplyDelete
  4. தமிழினி said...
    //உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்..........//

    நன்றி தமிழினி! நிச்சயம் பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. //உண்மைதான். அதுவும், தொலைபேசி அழைப்புக்கான கட்டணங்கள் குறையக் குறைய கடிதம் எழுதுவதே குறைந்து, தற்பொழுது இல்லை என்றே ஆகி விட்டது (இது என் அனுபவம்). தமிழ் ஸ்டுடியோ இணைய தளம், 'மடல் போட்டி' ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். முக்கிய விதி, கையால் எழுத வேண்டும் என்பதே.

    சித்ரா//

    வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி சித்ரா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails