Saturday, September 12, 2009

துபாய் மெட்ரோ (Dubai Metro) புதிய இலக்கினை நோக்கி..

இந்த ஊர் (துபாய்)ராஜாவுக்கு புதுமையும் பிரம்மாண்டமுமான விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் கொஞ்சம் அதிகம்.பொருளாதார நெருக்கடி, வெளியேறும் மக்கள் என எத்தனையோ இடர்ப்பாடுகளை துபாய் சந்தித்தாலும் சொன்னமாதிரியே 9/9/2009 இரவு 9 மணி 9 நிமிடத்தில் துபாயின் கனவு ரயில் முதலில் அரசகுடும்பத்தினரைமட்டும் சுமந்துகொண்டு புறப்பட்டது.மறுநாள் காலைமுதல் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது துபாய் மெட்ரோ சேவை.

கடந்த இரண்டு நாட்களாக மெட்ரோ நிலையங்கள் முழுக்கக் கூட்டமோ கூட்டம். இதுவரை ரயிலில்லாத ஊரில் புதிதாக ரயிலைப் பார்த்த சந்தோஷம்.காரில் வந்து, காரை நிலையத்தில் நிறுத்திவிட்டு, ரயிலில் ஏறிச் சென்றுவிட்டுத் திரும்பும் உற்சாக மக்கள்கூட்டம். இந்த ரயில் ஓட்டுனர் இல்லாத,முழுக்கமுழுக்க கணினியின் கட்டுப்பாட்டில் இயங்குவதென்பதால் எப்படித்தான் இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆர்வம். அதே ஆர்வத்துடன்தான் புறப்பட்டோம் நாங்களும்.

முதல் கட்டமாக இப்போது பத்து ரயில்நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன.
முதல்நாளில் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 67,000 என்றும் இரண்டாம் நாள் வெள்ளியன்று அரைநாள் மட்டுமே இயக்கப்பட்டதால் அன்று பயணித்தவர்கள் 47,000 என்றும் அறிவித்துள்ளனர்.

நாங்கள் போகும்போது,இரவு நேரமானதால் விளக்கொளியில் மின்னியது மெட்ரோ ஸ்டேஷன்.



இதோ, ரயில்நிலையத்தின் உட்புற வேலைப்பாடுகளை,வியப்போடு பார்க்கும் மக்கள்...




உதவிக்கென்று ஊழியர்கள் பலர்...




நாங்கள் ஸ்டேஷனை அடைவதற்குச் சற்றுமுன்தான் ரயிலின் எமர்ஜென்சி வாயிலின் ((emergency exit)பட்டனை யாரோ தவறுதலாக அழுத்தியதால் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக ரயிலில் கிட்டத்தட்ட 4 மணிநேரம் வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் ரயில் சேவையைத் தொடங்கியிருந்தார்கள்.

ரயிலில் பயணம் செய்ய கோல்ட் கார்ட்,சில்வர் கார்ட்,ப்ளூ கார்ட், ரெட் கார்ட் என வித்தியாசமான வசதிகளுடன் கூடிய நுழைவு அட்டைகள் விற்பனையாகிறது. நமக்கேற்ற ஒன்றினைத் தெரிவுசெய்து வாங்கிக்கொள்ளலாம்.

டிக்கெட் வாங்கியதும் அதை அங்குள்ள தானியங்கிக் கருவியில் காட்டியதும் நமக்கான பாதை திறந்து உள்ளே அனுமதிக்கிறது.




மேலே சென்று ரயில் வந்துநிற்கும் இடத்தினை அடைந்தோம். கண்ணாடியால் முழுவதும் மூடப்பட்டுள்ளது ரயில் வந்துநிற்கும் பகுதி. ரயில் வந்து நின்றதும் அந்தப்பகுதியின் வாயில்கள் திறந்துகொள்கிறது.



ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் வந்தவாறே இருக்க நாங்களும் ஒன்றில் ஏறினோம்.
ஏறியதும் ஒரு ஆப்பிரிக்கப் பெண் ஊழியர் வந்து யாரும் வாசல் பட்டனை அழுத்திவிடக்கூடாதென்று எச்சரிக்கை செய்துவிட்டுப்போக, தொடங்கியது ரயில் பயணம்.

ரயிலில் கோல்ட் கார்ட் கஸ்டமர்களுக்கு அதாவது வி ஐ பி க்களுக்கான முதல் வகுப்புப் பெட்டி ஒன்று,அதனையடுத்து பெண்கள் குழந்தைகளுக்கான பெட்டி,அதனையடுத்து நான்கு பொதுப் பெட்டிகள் ஆக மொத்தம் ஆறு. எந்தப்பெட்டியில் ஏறினாலும் கடைசிவரை சென்றுவரலாம்.

உள்ளேயும் வெளியேயும் முழுக்கமுழுக்க நீலநிற வேலைப்பாடுகளுடன்
அழகாகவே இருந்தது ரயில்.

இது ரயிலின் நுழைவாயிலில்...







உயரத்தில் போகும் ரயிலிலிருந்து துபாயின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களைப் பார்த்தவாறே செல்வது சுவாரசியமாகத்தான் இருந்தது.ரயில்முழுக்க வயர்லெஸ் இணைய இணைப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால் ஆளாளுக்கு அவர்களுடைய செல்ஃபோனைச் சோதித்தவாறே இருந்தனார்.



இறுதி ஸ்டேஷன் வரை சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பிய ரயிலில் புறப்பட்ட இடத்துக்கே வந்துசேர்ந்தோம். ரயிலில் வந்து பஸ்சில் வேறு இடத்துக்குச் செல்லவேண்டியவர்களுக்கு வசதியாக, நிலையத்திற்குள்ளேயே தொலைக்காட்சித் திரையில் அறிவிப்பு வருகிறது. பஸ் வர எவ்வளவு நேரமாகும் என்று அறிந்துகொண்டு நிலையத்தைவிட்டு வெளியில் சென்றால்போதும்.



இதோ, இருளில் அடுத்த இலக்கை நோக்கி வேகமாக விரைகிறது துபாய் ரயில்...

13 comments:

  1. அருமையான தகவல்கள்.

    அற்புதமான படங்கள்.

    அழகான விவரிப்பு.

    (துபாய்)ராஜாவின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. :) துபாய் ராஜாவுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. இந்த கூட்டத்திலயும் போய்ட்டு வந்தது சாகசம்தான் :)

    burjman Station ஐ மட்டும் பாத்துட்டு நடைய கட்டியாச்சி.

    ReplyDelete
  4. போகும்போது கூட்டம் ஒண்ணும் அதிகமில்ல. திரும்பி வரும்போது சென்னை எலெக்ட்ரிக் ட்ரெயின் தோத்துது போங்க :)

    ReplyDelete
  5. மதியமே போயிருந்தா துண்ட போட்டு இடத்த பிடிச்சிருக்கலாம்தான் நாங்க போனது சாயந்திரம் ஏழு மணி கூட்டம் நிறைஞ்சி burjman mall வரை மக்கள்ஸ்.போனதுக்கு ரெண்டு போட்டோ எடுத்தமா face book la போட்டமான்னு திரும்பி வந்தாச் :)

    ReplyDelete
  6. இனிமேல் பேருந்துக்காக காத்திருப்பது குறையும் என்று நினைக்கிறேன்.துபாயை மகிழுந்து இல்லாமல் சுற்றிப்பார்க்க இந்த ரயில் சேவை உதவும்.
    மற்றபடி சிங்கையை பார்த்து அப்படியே செய்துள்ளார்கள் அந்த 3 வகை அட்டையை தவிர.இங்கு ஒரே அட்டை தான் எல்லோருக்கும்(பெண்களுக்கும் சேர்த்து).

    ReplyDelete
  7. நன்றி வடுவூர் குமார் அவர்களே!

    நன்றி சென்ஷி!

    ReplyDelete
  8. சில நாள்களுக்கு முன் செய்தித்தாளில் படித்தேன்.
    விரிவாக விளக்கமாக இன்னும் அறிந்துக் கொள்ள முடிந்தது.

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  9. ம்ம் சூப்பரா படத்துடன் சொல்லி இருக்கீங்க‌
    நாங்க அதான் எல்லாம் போய் முடிக்கட்டும் மெதுவா போகலாம் என்று பத்து கழித்து தான் போனோம் ரொம்ப அருமை அதுவும் இரவில் போனால் துபாய் சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  10. சூப்பரா படத்துடன் சொல்லி இருக்கீங்க‌ ரொம்ப அருமை அதுவும் இரவில் போனால் துபாய் சூப்பரா இருக்கு இனிமேல் பேருந்துக்காக காத்திருப்பது குறையும் என்று நினைக்கிறேன்.துபாயை மகிழுந்து இல்லாமல் சுற்றிப்பார்க்க இந்த ரயில் சேவை உதவும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails