Sunday, October 11, 2009

மீசை வச்ச ஆண்களுக்கு ஒரு நற்செய்தி!!!


உங்கள் பதவிக்கேற்ற சம்பளம், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கலியா?
மீசை வச்சுக்கிட்டா உடனே உங்களுக்கு யோகம் அடிக்கலாம்!!!
இதை நான் சொல்லலீங்க... அமெரிக்காவில் மீசையைப் பற்றிய ஆய்வு நடத்திய குயிக்கென்(Quicken)நிறுவனமும்,அமெரிக்க மீசைக் கழகமும்தான் இப்படிச் சொல்லியிருக்காங்க.

அந்த ஆய்வு முடிவின்படி, மீசை வச்ச ஆண்கள், தாடி வைத்துக்கொண்ட ஆண்களைவிட 8.2% அதிகமாகவும்,சுத்தமாக ஷேவ் செய்துகொண்டவர்களைவிட 4.3% அதிகமாகவும் சம்பளம் வாங்குகிறார்களாம்.அதனால சம்பளம் அதிகமான வேலை கிடைக்கணும்னா சங்கடம் பார்க்காம சின்னதாவோ பெரிசாவோ மீசை வச்சுக்கிறது நல்லதுன்னு அமெரிக்காவில் பேசிக்கிறாங்களாம் :)

ஆனா, மீசைவச்சவங்களோட ஒரு மைனஸ் பாயிண்டையும் இந்த ஆய்வை நடத்தினவங்க வெளியிட்டிருக்காங்க. அது என்னன்னா,இவங்க சம்பாதிக்கிறதில் மட்டுமில்ல செலவழிக்கிறதிலயும் முதலில்தான் இருப்பாங்களாம். மத்தவங்களைவிட 11% அதிகமா செலவழிப்பதால, சேமிக்கிறதில மீசை வச்ச ஆண்கள் மத்தவங்களைவிட 3% பின்னாடி தான் இருக்காங்களாம்.இது எப்படியிருக்குது!

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுறதுன்னு எங்க ஊர்ப்பக்கம் முதுமொழி ஒண்ணு சொல்லுவாங்க. இந்தச் செய்தியைப் படிச்சப்போ எனக்கு அந்தப் பழமொழிதான் ஞாபகம் வந்தது :)

4 comments:

  1. <<<
    மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுறதுன்னு எங்க ஊர்ப்பக்கம் முதுமொழி ஒண்ணு சொல்லுவாங்க. இந்தச் செய்தியைப் படிச்சப்போ எனக்கு அந்தப் பழமொழிதான் ஞாபகம் வந்தது :)
    >>>

    ஹிஹி... சொல்லுறதுல்லாம் சொல்லீட்டு இதுவேறா???

    ReplyDelete
  2. சொல்லாம விட்டிருந்தா எப்படியெல்லாம் முடிச்சுப்போடுறாங்கன்னு ஒருவேளை உங்களுக்குத் தெரியாம போயிருக்கலாமில்ல... :)

    ReplyDelete
  3. அழகான பகிர்வு.

    எனக்கும் விதவிதமா மீசை வைக்கப் பிடிக்கும். பணமும் கையில நிக்கிறது இல்லை. என்னைப் பொறுத்தவரை ஆய்வுகருத்து உண்மையாத்தான் இருக்கு.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails