Thursday, November 26, 2009

வயல்காட்டு போதை!!!
போச்சு...போச்சு...பார்த்துப்பார்த்து பயிர்செஞ்சு, இப்ப விளைஞ்ச பயிரெல்லாம் வீணாப் போச்சு!

ஐயோ...அப்படியா? நானும் இன்னும் ரெண்டுநாள்ல அறுவடை பண்ணனும்... இல்லேன்னா என்னோட பயிரும் பாழாப்போயிடும்.

ம்ம்...என்னோட வயல்ல இந்தத்தடவை பூச்செடிகள் நட்டிருக்கேன்.வருமானம் அதிகமாவரும்ன்னு நினைக்கிறேன். கிடைக்கிற காசில எப்படியும் ஒரு டிராக்டர் வாங்கி நிப்பாட்டிரணும்.

சீக்கிரமா விளையணும், அதேசமயம் வருமானமும் நிறைய கிடைக்கணும். அப்படி ஏதும் பயிரிருந்தா சொல்லேன். நானும் போட்டுப்பார்க்கிறேன்.

ஆமா, உன்னோட வயல்ல கொஞ்ச செடிங்க மட்டும் ரொம்ப அதிகமா வளர்ந்திருக்கே எப்பிடி?

பக்கத்து வயல்காரப்பய வந்து எனக்குத்தெரியாம ஏதோ உரத்தைக் கொட்டிட்டுப் போயிட்டான். அதான்...

வயலுக்கு ஓரத்தில பழமரங்களை நட்டாலும் நிறைய காசு கிடைக்கும். செஞ்சு பாரேன்...

நேத்து எங்கம்மா எனக்கு ஒரு பசுமாடு அனுப்பிவச்சாங்க. அதோட இன்னும் ரெண்டுமூணு மாடு வாங்கிவிட்டா அதுவும் வருமானம்தான்...

அஞ்சாறு விவசாயிங்க பேசிக்கிட்டிருந்தப்ப ஒட்டுக்கேட்டதில்லைங்க இது...அறைக்குள்ள உக்கார்ந்து எங்க வீட்டுச் சின்னதுங்க பேசிக்கிட்டதுதான்... என்ன, அவுங்க இங்கிலீஷில பேசினாங்க, நான் மொழிமாத்தி எழுதியிருக்கேன் அவ்வளவுதான்...

பள்ளிவிட்டு வந்தா, சாப்பாட்டுக்கு முன்னாடி வயலைப்போய் பார்க்கிறதும், உன்னோடதைவிட என்னோட வயல் பெருசுன்னு போட்டிபோட்டுக்கிறதும், அவங்கவங்க அனுபவத்தை அள்ளிவிடுறதும், அவங்க போதாதுன்னு என்னோட பேர்லயும் அவங்களே ஒரு கணக்கு ஆரம்பிச்சு, அங்கேயிருந்து ஆளாளுக்கு ஆடு, மாடு, கோழி, குதிரைன்னு பரிசுகள் கொடுத்துக்கிறதும்கூட நடக்குதுன்னா பாருங்களேன்.

பேசிக்கொண்டிருந்த விஷயம், facebook ல் இருக்கும் farmville விளையாட்டைப்பற்றி

என்னடா தம்பி இது... படிக்கிறநேரத்தில் லேப்டாப்பை வச்சுட்டு விளையாடிட்டிருக்கேன்னு கேட்டா, இதை விளையாடினா, டென்ஷனெல்லாம் தீர்ந்து,மனசு ரிலாக்ஸ் ஆகுதாம். என்ன டென்ஷனோ, என்ன ரிலாக்சேஷனோ இந்த வயசில...

பம்பரம், குச்சிக்கம்பு,கோலின்னு பசங்களும், பல்லாங்குழி, தாயம், பாண்டின்னு பொண்ணுங்களும் நம்ம ஊர்ல கூடிச்சேர்ந்து விளையாடின காலமெல்லாம்போய், கணினிக்கு முன்னாலும் தொலைக்காட்சிக்கு முன்னாலும் கண்ணைக் கெடுத்துக்கிட்டு மணிக்கணக்கில் உட்கார்ந்து வீடியோ கேமும், கணினி விளையாட்டுக்களும் விளையாடுறாங்க பிள்ளைங்க.

பிள்ளைகள் மட்டுமில்ல, அம்மா அப்பாக்கள் நிறையப்பேரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாயிருக்காங்களாம்...சொல்லிக்கிறாங்க.

உங்களுக்கும் ரொம்ப டென்ஷனா?

பணம்செலவில்லாம பயிர் பண்ணனும்னு ஆசையா?

நீங்களும் விளையாடிப்பாருங்க.

ஆனா, ஒரு விஷயம்...ஒரேயடியா விளையாடி, வீட்ல ஏதும் விவகாரமானா அதுக்கு நான் பொறுப்பில்லை...சொல்லிட்டேன் :)

3 comments:

 1. //
  ஆமா, உன்னோட வயல்ல கொஞ்ச செடிங்க மட்டும் ரொம்ப அதிகமா வளர்ந்திருக்கே எப்பிடி?

  பக்கத்து வயல்காரப்பய வந்து எனக்குத்தெரியாம ஏதோ உரத்தைக் கொட்டிட்டுப் போயிட்டான். அதான்...//

  ரசித்தேன் சுந்தரா:))!

  எனக்கும் பக்கத்துல தோட்டம் போடுங்கன்னு பல அழைப்பு வந்தது. போகலையாக்கும்:)!

  ReplyDelete
 2. u know, i have a bigggggggggg farm...

  nice post sundara :D

  ReplyDelete
 3. நன்றி ராமலஷ்மியக்கா :)

  நன்றி அனு :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails