Tuesday, February 9, 2010

கடி..... தாங்க முடியல!!!!

நான் கேட்டு அனுபவிச்சதை,நீங்க படிச்சு அனுபவிக்க...


1)ரஷ்யால கொசுவே கிடையாது...

ஏன்?

ஏன்னா, அங்கே அதுக்கு வேற பேரு (பெயர்)

*****************************************************
2)கோலமாவை வச்சு கோலம் போடலாம்...ஆனா,

கடலைமாவை வச்சு கடலைபோடமுடியுமா?

*****************************************************
3)சுதந்திரதினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் என்ன வித்தியாசம்?

????

பெருசா ஒண்ணுமில்ல,கிட்டத்தட்ட அஞ்சரை மாசம்.

*****************************************************
4)என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும்,......

அவனை துப்பாக்கியிலபோட்டு சுடமுடியுமா???

*****************************************************
5)வாழை மரம் தார் போடும்....

ஆனா, அதைவச்சு நாம ரோடுபோடமுடியுமா?

*****************************************************
6)என்னதான் நாய்க்கு நாலுகால் இருந்தாலும்,

அதால, லோக்கல் கால்,எஸ் டி டி கால், ஐ எஸ் டி கால்,ஏன் மிஸ்ட் கால்

கூடப்பண்ணமுடியாது....

*****************************************************
7)பல்வலி வந்தா பல்லைப் பிடுங்கலாம்,

அதேமாதிரி, தலைவலி வந்தா தலையைப்பிடுங்கமுடியுமா???

*****************************************************
8)சண்டேல சண்டை போடமுடியும்...ஆனா,

மண்டே ல மண்டையைப்போட முடியுமா?

*****************************************************
9)ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்...

காலேஜ் டெஸ்ட்லயும் பிட் அடிக்கலாம்...

ஆனா, ப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்கமுடியுமா????

*****************************************************
10)ஒரு அண்ணனும் தங்கையும் ஓடிவராங்க...

நின்னதும் அண்ணன் மேல்மூச்சு வாங்கறான்...

தங்கை என்ன பண்ணுவா...?

female மூச்சு வாங்குவா...

13 comments:

  1. அய்யா சாமி தாங்க முடியலாட

    ReplyDelete
  2. போதும் போதும்........ எப்படி இப்படி........

    ReplyDelete
  3. //7)பல்வலி வந்தா பல்லைப் பிடுங்கலாம்,
    அதேமாதிரி, தலைவலி வந்தா தலையைப்பிடுங்கமுடியுமா???//

    ஹா..ஹா.... போதும்..போதும்..இத்தோட நிப்பாட்டிக்குங்க முடியல.......

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு:))!

    ரசித்தேன் சுந்தரா!

    அடிக்கடி தரலாம் இப்புடி:)!

    ReplyDelete
  5. கடி, சரியான கடி
    5,7,8,9
    சூப்பர்.

    ReplyDelete
  6. அச்சச்சோ துபை கடியா சூப்பர். இங்கு கொசுவர்த்தி கிடைக்குமா?

    சும்மாதான் சுந்தராக்கா. துபையிலா இருக்கீங்க.

    இப்படியே நம்மவீட்டுபக்கமும் எட்டிப்பாருங்க..

    ReplyDelete
  7. //nanrasitha said...

    அய்யா சாமி தாங்க முடியலாட//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  8. // Sangkavi said...

    போதும் போதும்........ எப்படி இப்படி........//

    நன்றி சங்கவி!

    //க.பாலாசி said...
    ஹா..ஹா.... போதும்..போதும்..இத்தோட நிப்பாட்டிக்குங்க முடியல.......//

    நன்றி பாலாசி!

    ReplyDelete
  9. நன்றி கண்ணகி!

    நன்றி ராமலக்ஷ்மியக்கா!

    நன்றி அம்பிகா!

    ReplyDelete
  10. //அன்புடன் மலிக்கா said...

    அச்சச்சோ துபை கடியா சூப்பர். இங்கு கொசுவர்த்தி கிடைக்குமா?

    சும்மாதான் சுந்தராக்கா. துபையிலா இருக்கீங்க.

    இப்படியே நம்மவீட்டுபக்கமும் எட்டிப்பாருங்க..//

    நீங்களும் துபாய்தானா?

    வந்துடுவோம் மலிக்கா :)

    ReplyDelete
  11. haha......mudiyala sundara

    good post.

    ReplyDelete
  12. பகிர்வு மிக கலக்கல்..... அந்த வானொலியை நிறுத்தி வைக்கலாமே.

    திடீர்ன்னு சத்த போட்டு ஊரகூட்டுது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails