Sunday, April 4, 2010

மிஸ்டு கால்களும் மாறிவந்த அஞ்சு திர்ஹாமும்!வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். இங்கே அமீரகத்தில் அநேகரிடம் பேசும்போது, இந்த ஆதங்கம் அடிக்கடி வார்த்தைகளில் வெளிப்படும்.

ஊரிலிருந்து உறவுக்காரங்க யாராவது இங்கே பேசணும்னா,அவங்க ஃபோனிலிருந்து ரெண்டு மூணு ரிங் குடுத்துட்டு, அவசர அவசரமா 'கட்' பண்ணிடுவாங்க. கொஞ்சம் தாராள மனசுக்காரங்கன்னா, call me immediately... ன்னு சொல்லி, மிரட்டுரமாதிரி சின்னதா ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ் குடுப்பாங்க.(இத்தனைக்கும் நம்ம ஊர்லதான் சார்ஜ் கம்மி)

அதுவும், ஊருக்கு வருகிறோம்னு சொல்லிட்டோம்னா அந்த சீசன்ல, இதுபோல நிறைய மிஸ்டு கால்களை எதிர்பார்க்கலாம். இது வாங்கிட்டுவா அது வாங்கிட்டுவான்னு சொல்றவங்ககூட, அவங்க காசில் பேசமாட்டாங்க. நாம கூப்பிட்டோம்னா, நாய்க்குட்டிக்கு சுகமில்லைங்கிறது வரைக்கும் நேரம் ஓடுதேன்னு கவலைப்படாம பேசிட்டுதான் வைப்பாங்க.இங்கே பேரீச்சை மரமெல்லாம் பணமாகக் காய்க்கிதுன்னு யாரும் சொல்லியிருப்பாங்களோ என்னவோன்னு சொல்லி வயித்தெரிச்சல் படுவாங்க தோழிகள் பலர்.காசிருக்கிறவங்களுக்காவது பரவாயில்லை. ஆனா, மிகக் குறைவான சம்பளத்தில் வேலைபார்க்கிறவங்களுக்கு இந்தச் செலவு சமாளிக்கமுடியாததாகத்தான் இருக்கும்.

போன வெள்ளிக்கிழமை... விடுமுறை நாளென்பதால் சாவகாசமா உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டிருந்தேன். ஏதோ ஒரு மெஸேஜ் வந்ததை குக்கூன்னு கூவிச்சொன்னது என்னுடைய ஃபோன். அடிக்கடி etisalat(இங்குள்ள தொலைத் தொடர்புத்துறை)இல் இருந்தும், மற்ற வியாபார நிறுவனங்களிலிருந்தும் அடிக்கடி ஆஃபர் மெஸேஜ்கள் வருமென்பதால் அலட்டிக்கொள்ளவில்லை நான். அடுத்தபடியாக ரெண்டுமூணு நிமிடத்தில், ரிலையன்ஸ் ரிங்டோனில் கத்தி அழைத்தது ஃபோன்.

எடுத்துப்பார்த்தேன், உள்ளூர் நம்பர்தான்...ஆனால் எனக்குத் தெரியாத நம்பர். சரி எடுப்போம்னு எடுத்து ஹலோ சொன்னேன். அங்கிட்டு இருந்து கிடைச்சதோ சுந்தரத் தெலுங்கு..."மேடம், ஃபைவ் திர்ஹாம்" இந்த ரெண்டு வார்த்தையைத்தவிர எதிர்முனையிலிருந்து பேசிய எதுவும் புரியல எனக்கு. 'Sorry, i don't know telugu,Please,speak in english ன்னு நான் சொல்ல, என்னன்னு புரிஞ்சுதோ தெரியல,உடனே ஹிந்திக்கு மாறியது எதிர்பக்கம். என்னடா இது சோதனைன்னு, இந்தியும் தெரியாதுன்னு இறக்கமான குரலில் சொல்லிட்டு வச்சிட்டேன்.

அடுத்தும் உடனே அதே நம்பரிலிருந்து அழைப்பு. இதுக்குமேல நம்மால முடியாதுன்னு ஃபோனை என் கணவர்கிட்ட கொடுத்தேன். அவங்க இந்தியில் பேச அப்புறம்தான் விளங்கியது விஷயம். ஊருக்குப் பேசணும்னு நண்பர்கிட்ட அவரோட ஃபோனுக்கு அஞ்சு திர்ஹாம் பணம் அனுப்பச்சொன்னாராம். அந்த நண்பர் அனுப்பின பணம்தான் ஏதோ ஒரு நம்பர் மாறினதால என்னோட நம்பருக்கு வந்திருக்குன்னு சொல்ல, சட்டுன்னு ஃபோனை வாங்கி மெஸேஜ்களைப் பார்த்தேன். அஞ்சு திர்ஹாம் வந்ததற்கான மெஸேஜ் ஒண்ணு இருந்தது.

ஐயோன்னு ஆகிப்போச்சு எனக்கு...முதலிலேயே மெஸேஜைப் பாத்திருந்தா அதை உடனே திருப்பி அனுப்பியிருக்கலாமேன்னு தோண, உடனடியாக அந்த அஞ்சு திர்ஹாமை அவரோட நம்பருக்கு அனுப்பினேன். காசு போய்ச் சேர்ந்துடுச்சு. ஆனா,அஞ்சு திர்ஹாம்...வெள்ளிக்கிழமை...யார் மிஸ்டு கால் குடுத்தாங்களோ, என்ன அவசரத்தில் நண்பர்கிட்ட பணம்கேட்டாரோ என்ற எண்ணம் ரொம்ப நேரமாக மனசைவிட்டுப்போகவில்லை.

9 comments:

 1. //ஊரிலிருந்து உறவுக்காரங்க யாராவது இங்கே பேசணும்னா,அவங்க ஃபோனிலிருந்து ரெண்டு மூணு ரிங் குடுத்துட்டு, அவசர அவசரமா 'கட்' பண்ணிடுவாங்க. கொஞ்சம் தாராள மனசுக்காரங்கன்னா, call me immediately... ன்னு சொல்லி, மிரட்டுரமாதிரி சின்னதா ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ் குடுப்பாங்க.(இத்தனைக்கும் நம்ம ஊர்லதான் சார்ஜ் கம்மி)//

  நம்மூர்ல இருந்து அழைப்பதுதான் பொருளாதார சிக்கனம்.அதென்னமோ தெரியலை,காசு கொடுக்கிறேன்,அங்கிருந்து பேசுங்கன்னு சொன்னாலும் யாரும் கேட்கிறபடியா இல்லை.

  ReplyDelete
 2. இந்த மிஸ்டு கால் வசதியை கண்டம் விட்டு கண்டம் பயன்படுத்துறதுல நம்ம ஆள்கள்தான் முதலிடம்.... :((

  ReplyDelete
 3. என் புலம்பலையும் சேர்த்து பதிவு செஞ்சதுக்கு நன்றி.. :) ஹிஹி...

  ReplyDelete
 4. ராஜ நடராஜன் said...

  //காசு கொடுக்கிறேன்,அங்கிருந்து பேசுங்கன்னு சொன்னாலும் யாரும் கேட்கிறபடியா இல்லை.//

  முன்பணமே கொடுத்தாலும் இந்த மிஸ்டுகால் வழக்கம் மாறாதுன்னு நினைக்கிறேன் :)

  வருகைக்கு நன்றி ராஜநடராஜன்!

  ReplyDelete
 5. //துபாய் ராஜா said...
  இந்த மிஸ்டு கால் வசதியை கண்டம் விட்டு கண்டம் பயன்படுத்துறதுல நம்ம ஆள்கள்தான் முதலிடம்....
  :(( //

  ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்...

  எதுக்கும், எகிப்து ராஜான்னு பேரை மாத்திப்பாருங்க :)

  நன்றி துபாய் ராஜா!

  ReplyDelete
 6. //நாஸியா said...
  என் புலம்பலையும் சேர்த்து பதிவு செஞ்சதுக்கு நன்றி.. :) ஹிஹி...//

  நன்றில்லாம் வேண்டாம் நாஸியா,

  நான் மிஸ்டுகால் பண்ணும்போது கூப்பிட்டாப்போதும் :)

  ReplyDelete
 7. நல்ல பதிவு சுந்தரா.
  \\இந்த மிஸ்டு கால் வசதியை கண்டம் விட்டு கண்டம் பயன்படுத்துறதுல நம்ம ஆள்கள்தான் முதலிடம்.... :((\\

  நன்றில்லாம் வேண்டாம் நாஸியா,

  நான் மிஸ்டுகால் பண்ணும்போது கூப்பிட்டாப்போதும் :)
  அப்படி போடுங்க.

  ReplyDelete
 8. நல்லவேளை நான் ரொம்ப பாதிக்கப்படலை இந்த மிஸ்டு காலால!!

  அஞ்சு திர்ஹம் - எனக்கும் இதே நடந்துது. அஞ்சு திர்ஹம் என்பது இறையருளால் நமக்கு ஒரு negligible amount. ஆனால், அந்த அஞ்சு திர்ஹம் ஒருவருக்கு எவ்வளவு அவசியமாக இருந்தால், அழைத்துத் தரும்படிச் சொல்வார்? ரொம்ப வருத்தமா இருந்துது.

  ReplyDelete
 9. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails