Sunday, May 9, 2010

நம்மளப்பத்தி என்னல்லாம் பேசிக்கிறாங்க பாருங்க...(பெண்களுக்கு மட்டும்)

மனைவி : ஜன்னலுக்கு திரை போடணும். எதிர்விட்டு முரடன் என்னையே பார்க்கிற மாதிரி தெரியுது.

கணவன்: ஒரு முறை பார்க்கட்டும் விடு... அப்புறம் அவனே திரை வாங்கிப் போட்டுக்குவான்.

_____________________________________________________________________________________

மனைவி: எங்கே தேடினாலும் என்னைப்போல மனைவி உங்களுக்கு கிடைக்க மாட்டாள்.

கணவன்: உன்னைப்போல மனைவியை இனிமேலும் நான் ஏன் தேடப்போறேன்?
நேர்மாறா தான் தேடுவேன்.

_____________________________________________________________________________________

பிச்சைக்காரன்: தாயே மகாலக்ஷ்மி . கண் தெரியாத எனக்கு ஒரு ரூபா கொடும்மா.

கணவன்: உன்னை மகாலக்ஷ்மின்னு சொல்றான். கண் தெரியாதவன் தான்... சந்தேகமே இல்லை 5 ரூபாயா குடு...

_____________________________________________________________________________________

ரகு : என் மனைவியின் ஞாபகசக்தி அனியாயத்துக்கு மோசமா இருக்கு.

ரவி: ஏன் எல்லாத்தையும் மறந்து தொலைக்கிறாளா?

ரகு: இல்லை... எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கிறா.

_____________________________________________________________________________________


மணி : என் மனைவி எந்த சப்ஜக்ட் கொடுத்தாலும் அதைப்பத்தி அரை மணி நேரம் பேசுவாள்.

குரு: இது என்ன பிரமாதம்? சப்ஜெக்டே இல்லாம என் மனைவி மணிக் கணக்கிலே பேசுவாளே.

_____________________________________________________________________________________


கணவன்: நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்
என் இதய துடிப்பு அதிகரிக்கிறது
ஆயிரம் மடங்கு!

மனைவி (வெட்கத்துடன்) ஏன்?

கணவன்: :) :)
(மனசுக்குள்)சாதரணமா பேய் கடந்து போனா
அப்படிதான் ஆகுமாம்.

_____________________________________________________________________________________

கோபு :நண்பனுக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?

மணி: நண்பனிடம் நீ தான் என் நண்பர்களிலேயே சிறந்தவன்னு சொல்ல முடியும். ஆனால் மனைவியிடம் நீ தான் என் மனைவிகளிலேயே சிறந்தவள்னு சொல்ல முடியுமா?

_____________________________________________________________________________________

பி.கு : மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைகளிருந்து எடுக்கப்பட்டது.

10 comments:

  1. நல்ல நகைச்சுவை, தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. //padma said...

    i object sundara

    hehehe nalla than irukku//

    :) இந்த ஜோக்கெல்லாம் பாத்ததும் எனக்கும் object பண்ணத்தான் தோணிச்சு பத்மா. எதுக்கும் உங்ககிட்டயெல்லாம் பகிர்ந்துகிட்டு, உங்க ரியாக்ஷனெல்லாம் தெரிஞ்சுகிட்டு அப்புறம் பண்ணலாமேன்னுதான்...:)

    நன்றி பத்மா.

    ReplyDelete
  3. //கே.ஆர்.பி.செந்தில் said...

    நல்ல நகைச்சுவை, தொடர்ந்து எழுதுங்கள்//

    வருகைக்கும் நட்பு வட்டத்தில் இணைந்தமைக்கும் நன்றி செந்தில்!

    ReplyDelete
  4. last one வெறித்தனம்....
    சுப்பெர்ரப்பு

    ReplyDelete
  5. அடி உதை வாங்குரதா முடிவே செஞ்சாச்சா.........


    பனிமலர்.

    ReplyDelete
  6. Ha ha ha... hilarious...கோவம் எல்லாம் வரலை... நாம அவங்கள (ரங்க்ஸ்) வாருற மாதிரி அவங்க சான்ஸ் கெடைக்கறப்ப இப்படி செய்யறது தான். As long as just for fun, we can enjoy it. Made my day,thanks Sundara

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails