Tuesday, May 18, 2010

காப்பியும் காந்திஜியும்!


உயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அது இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கைல்ஸ் அப் பள்ளிக்கூடச் சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்காக அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் "கெட்டில்" (Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன்.

உபாத்தியாயர் தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை.

இதன் பலன் என்னவெனில், என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்து விட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும் படி செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை.

குறிப்பு:- காந்திஜியின் சத்தியசோதனை நூலின் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

10 comments:

  1. che coffee paathi etho solli irukeenganu paarth ippadi emaathamapocchu

    ReplyDelete
  2. :) இதத்தான் நானும்

    எதிர்பார்த்தேன் :)

    ReplyDelete
  3. aaha nanthan first emanthana hmm nadakatum

    ReplyDelete
  4. I remember reading this in one of my English lessons in school. I still remember picking up the words 'corporal punishment' in Gandiji's school life.

    ReplyDelete
  5. வித்தியாசமான சிந்தனை...

    ReplyDelete
  6. nanum emaanthuten sundara :)

    goat milk coffee nu ninaichu vanthen :(

    -anu

    ReplyDelete
  7. nice one...நானும் LK மாதிரியே ஏமாந்தேன்...(திருப்தியா இப்போ....).... ஆனா தெரியாத ஒரு புது விசியத்த தெரிஞ்சுகிட்டேன் ..... நன்றி

    ReplyDelete
  8. //நானும் LK மாதிரியே ஏமாந்தேன்...(திருப்தியா இப்போ....)....//

    parama trupthi AT

    ReplyDelete
  9. காந்திஜி காப்பி போட்ட கதையோன்னு வந்தேன்!!

    ReplyDelete
  10. அருமை! அருமை!
    மேதைகள் என்றும் மேதைகளே
    visit my blog
    www.vaalpaiyyan.blogspot.com

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails