Sunday, May 23, 2010

ஹர்ஷினியின் கடைசி வார்த்தைகள்


"At the airport and blah =_= Only thing to look forward to is the rain'"

விமானத்தில் ஏறுமுன் கடைசியாக,தன்னுடைய அலைபேசிவாயிலாக ட்விட்டரில் ஹர்ஷினி பதிவு செய்த வார்த்தைகள் இதுதான்.மழையை எதிர்பார்த்து மங்களூருக்குப்போன பதினெட்டு வயதுப் பூ, நெருப்பில் கருகிப்போனது கண்ணீர்க்கதை.

ஹர்ஷினி பூஞ்சா...என் மகளுடைய பள்ளியில் சென்ற வருடம் படித்துமுடித்த பெண். சிலுசிலுவென்று அந்தப்பெண்ணின் பேச்சும்கூட மழைமாதிரிதான் இருக்கும் என்றுசொல்லி மறுகுகிறாள் என் மகள். அப்பா அம்மாவுடன் உறவினரின் கல்யாணத்துக்கு ஊர்வந்த குடும்பம் மொத்தமாக அழிந்துபோயிருக்கிறது.

படத்தில் பெற்றோருடன் நடுவிலிருப்பது ஹர்ஷினி...

இதேமாதிரி என் மகனின் பள்ளியில் படித்து, தற்போது ப்ளஸ் 2 முடித்து, நம் ஊரில் கம்ப்யூட்டர் படிப்புக்காக வந்த அக்ஷய் போலார், தன் அம்மாவுடனும் பாட்டியுடனும் அதே விமானத்தில் பயணித்து இறந்துபோயிருக்கிறான். எங்கே திரும்பினாலும் குழந்தைகள் பெரியவர்களென்று எல்லோரிடமும் இதே பேச்சுதான்.

ஆண்டு விடுமுறைக்குப்போக ஆவலாயிருந்தவர்கள் மனதிலெல்லாம் மருட்சி நிறைந்திருக்கிறது. உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்யப்போகிறோமோ என்று.

கடைசியாக நண்பரொருவர் சொன்ன வார்த்தைகள் மனதைத் தைத்தது.
கொத்துக்கொத்தாக இறந்துபோனவர்கள் பலர்,இங்கே இருந்தபோதும் உறவுகளுக்காக உழைத்தார்கள், இப்போது செத்தும் பல லட்சங்களாக அவர்களின் பாக்கெட்டை நிறைக்கப்போகிறார்கள். பணமிருக்கும்வரைக்கும் உறவுகளின் மனதில் அவர்களின் நினைவிருக்குமென்று.

படம் : நன்றி Gulf News.

16 comments:

  1. கொடுமையான விஷயம். நெஞ்சை உருக்குகிறது

    ReplyDelete
  2. நிஜமாய் இறைவன் இருக்கின்றானா???

    ReplyDelete
  3. யார் மனதில் என்ன விருப்பங்கள் எல்லாம் இருந்தனவோ? அவர்களுடன் அந்த ஆசைகளும் கருகி விட்டனவே! கொடுமை.

    ReplyDelete
  4. அந்தக்குடும்பத்தை பார்க்கும் பொழுது மனசு பதறுது.இதே மாதிரி எத்தனை எத்தனை கொடுமை,இறைவா இது என்ன வேதனை?

    ReplyDelete
  5. அதிர்ச்சியான செய்தி.

    ReplyDelete
  6. நெஞ்சை உருக்குகிறது

    ReplyDelete
  7. அறியாதவர்கள் எனும்போதே மனம் பதறுகிறது. அறிந்த நண்பர்களும் இதில் உண்டு என்றால் பெரும்சோகம்தான்.

    ReplyDelete
  8. இறைவா யாருக்கும் வேண்டாம் இத்தகைய மரணம்
    இதையும் தாங்கும் இதயம் இப்போது எனக்கில்லை.

    ReplyDelete
  9. \\அறியாதவர்கள் எனும்போதே மனம் பதறுகிறது. அறிந்த நண்பர்களும் இதில் உண்டு என்றால் பெரும்சோகம்தான்.\\
    :-(((

    ReplyDelete
  10. வந்து கருத்துச்சொன்ன அனைவருக்கும் என் வணக்கங்கள்!

    நன்றி LK!
    நன்றி செந்தில்!
    முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கௌசல்யா,நன்றிஆசியா!

    ReplyDelete
  11. வாங்க ஜலீலா, நன்றி!

    நன்றி அனாமிகா!(முதல் வருகைக்கும்)

    நன்றிகள் ஜெய்லானி, நட்பு வட்டத்தில் இணைந்ததற்கும்!

    ReplyDelete
  12. வாங்க ஹுசைனம்மா,

    வாங்க அம்பிகா,

    முதல் வருகைக்கு நன்றிகள் இளம்தூயவன்!

    ReplyDelete
  13. வார்த்தைகள் இல்லை ஏதும் சொல்ல:(!

    ReplyDelete
  14. கேக்கவே கஷ்டமா இருக்கு...அந்த கொழந்தைக மனசுல எத்தனை கனவு இருந்திருக்கும்... பாவம்...ச்சே

    ReplyDelete
  15. மிகவும் வேதனையாய் இருக்கிறது. :(

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails