Wednesday, May 26, 2010

ஐ நா சபையின் கேள்வியும், அர்த்தம் புரியாத நாடுகளும்!!!




"உலகின் பிறபகுதிகளில் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டுக்கான தீர்வுகள் என்ன என்பதுபற்றிய உங்களுடைய நேர்மையான கருத்தைச் சொல்லுங்கள்"

- என்ற கேள்வியுடன், உலகம் முழுவதிலும் கருத்தாய்வு நடத்தியது ஐ நா சபை.
ஆனால், அந்த ஆய்வு தோல்வியில் முடிந்ததாம்.

அதற்கான காரணங்கள் என்னன்னா, அந்தக் கேள்வியிலிருந்த வார்த்தைகளுக்கே அர்த்தம் விளங்கலியாம் உலகநாடுகள் சிலவற்றிற்கு.

'உணவு' என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லையாம் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு,

'நேர்மை' என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லையாம் இந்தியாவுக்கு,

'தட்டுப்பாடு' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையாம் பல ஐரோப்பிய நாடுகளுக்கு,

'கருத்து' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையாம் சீனர்களுக்கு,

'தீர்வு' என்ற வார்த்தைக்கே அர்த்தம் விளங்கவில்லையாம்,மத்தியக்கிழக்கு நாட்டினருக்கு, (மிடில் ஈஸ்ட்)

'தயவுசெய்து' என்ற வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லையாம் தென் அமெரிக்காவுக்கு,

அதுமட்டுமில்லாமல்,

'உலகின் பிற பகுதிகள்'ன்னா என்னன்னே தெரியலியாம் அமெரிக்காவுக்கு!!!

இது எப்படியிருக்கு :)

இது ஆங்கிலத்தில்வந்த ஒரு மின்னஞ்சலின் மொழிமாற்றம்.

எனக்குப் புரிஞ்ச அளவுக்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.

உங்களுக்கும் புரிஞ்சா சிரிங்க, முடிஞ்சா கொஞ்சம் யோசியுங்க.

10 comments:

  1. நகைச்சுவையாக இருந்தாலும் பொருள் பொதிந்த ஒன்று

    ReplyDelete
  2. நானும் உண்மையிலேயே நடந்த ஆய்வுன்னு நெனச்சு படிக்க ஆரம்பிச்சேன் பாருங்க!!

    //'உலகின் பிற பகுதிகள்'ன்னா என்னன்னே தெரியலியாம் அமெரிக்காவுக்கு//

    இதான் கிளாஸ்!! அமெரிக்காவின் மீதான பெரிய குற்றச்சாட்டே இதுதானே!

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு சுந்தரா.

    ReplyDelete
  4. வாங்க LK...

    தொடர்ச்சியான உங்கள் உடனடிப் பின்னூட்டங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  5. @@@ஹுஸைனம்மா said...

    நானும் உண்மையிலேயே நடந்த ஆய்வுன்னு நெனச்சு படிக்க ஆரம்பிச்சேன் பாருங்க!!

    //'உலகின் பிற பகுதிகள்'ன்னா என்னன்னே தெரியலியாம் அமெரிக்காவுக்கு//

    இதான் கிளாஸ்!! அமெரிக்காவின் மீதான பெரிய குற்றச்சாட்டே இதுதானே! //

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  6. மொத்தத்தில் எதுக்கு மீட்டிங் என்றே தெரியலாம் எல்லாருக்கும் . இது ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரிந்த உண்மை. சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் வைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  7. அன்பு சுந்தரா

    தங்களுக்கு விருது இங்கே

    http://sandanamullai.blogspot.com/2010/05/blog-post_27.html

    ReplyDelete
  8. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும்

    நன்றி ஹுசைனம்மா!

    நன்றி ராமலக்ஷ்மியக்கா!

    ReplyDelete
  10. நன்றிகள் ஜெய்லானி!

    நன்றிகள் இளம்தூயவன்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails