Tuesday, June 8, 2010

சுட்ட அப்பமும் சொட்டைத்தலையும்!


இயேசு கிறிஸ்துவின் சீடரான சீமோன் பேதுருவுக்கு(St Peter) முன்நெற்றியிலும்,
பி்ன்னந்தலையிலும் சில கற்றை முடிகளைத்தவிர, தலையின் மீதிப்பாகமெல்லாம் வழுக்கையாக இருக்குமாம். அதற்கான காரணம் என்ன என்பதற்காக, ஜெர்மனி நாட்டில் சொல்லப்படுகிற நகைச்சுவைக் கதை இது...

இயேசுவும் பேதுருவும் நடைப்பயணமாக ஒரு ஊருக்குச்சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் ஒரு பண்ணைவீட்டைக் கண்டார்கள். இளைப்பாறுவதற்காக இருவரும் அந்தப் பண்ணைக்குள் நுழைந்தார்கள். அந்தப் பண்ணைவீட்டுப் பெண்மணி உணவுக்காக ஈஸ்ட் சேர்க்கப்பட்ட மாவினால் அப்பத்தைத் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

இயேசுகிறிஸ்து வீட்டிற்கு வெளியே இளைப்பாறியவேளையில், உணவுக்கு ஏதேனும் வாங்கிவர பண்ணை வீட்டிற்குள் சென்றாராம் பேதுரு. நல்லமனம் படைத்த அந்தவீட்டுப் பெண்மணி பேதுருவிடம் சுடச்சுட மூன்று அப்பங்களைக் கொடுத்தாள். கிடைத்த அப்பத்தை அப்படியே பகிர்ந்துகொள்ள விரும்பாத பேதுரு, சுயநலம் மேலிட,ஒரு அப்பத்தைத் தன் தொப்பிக்குள் வைத்துக்கொண்டு, இரண்டு அப்பங்களில் ஒன்றை இயேசுவுக்குக் கொடுத்துவிட்டுத் தான் ஒன்றை உண்ணத்தொடங்கினார்.

தொப்பிக்குள் வைத்த அப்பம் வேலையைக்காட்டத்தொடங்கியது. சூடான அப்பத்தினால் வெந்துபோனது பேதுருவின் தலை. ஆனாலும், இயேசுகிறிஸ்துவின் முன்னால் தன் சுயநலம் வெளிப்பட்டுவிடுமே என்று அஞ்சி, அதனை வெளிக்காட்டாமல் பொறுத்துக்கொண்டார் அவர்.

தொப்பிக்கு வெளியிலிருந்த ஒருசில கற்றைகளைத்தவிர,மிச்சப்பகுதியெல்லாம் முடிஉதிர்ந்துபோக, அப்பத்தின்மேல் கொண்ட ஆசையால்,வாழ்நாளின் எஞ்சிய பகுதியை சொட்டைத்தலையுடன் கழித்தாராம் சீமோன் பேதுரு.

5 comments:

  1. கதை நல்லாயிருக்கு சுந்தரா.
    வீட்டு அப்பம் ஓட்டை சுட்டது னு
    சொல்வாங்க இங்கே
    தலையை சுட்டது போல அங்கே!

    ReplyDelete
  2. அடப்பாவமே !!, இப்படியும் ஒரு கதையா ..

    ReplyDelete
  3. இப்பத்தான் கேள்விப்படறேன். கதை நல்லாருக்குங்க.

    ReplyDelete
  4. முதல்முறை கேள்விப்படுறேன்.

    ReplyDelete
  5. நல்ல படிப்பினை கதை... நான் முதல் முறை கேக்கறேன்...நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails