Saturday, June 26, 2010

அரபுநாட்டு அப்பாவும் அன்பு மகனும்



பெர்லினுக்குப் படிக்கப்போன அரபுநாட்டு மாணவனொருவன் அங்கேயிருந்து அவங்க அப்பாவுக்கு ஒரு மெயில் பண்ணினாராம்.அதுதான் இது...

அப்பா,

பெர்லின் நகரம் மிக அழகாக இருக்கிறது.மக்களும் நல்லவர்களாக இருக்கிறார்கள். எனக்கு இங்கே ரொம்பப் பிடித்திருக்கிறது. ஆனால், ஒரே ஒரு விஷயம்மட்டும் என்னை மிகவும் வெட்கப்பட வைக்கிறது. அது என்னன்னா, இங்கே என்னுடன் படிப்பவர்களும், ஆசிரியர்களும்கூட ரயிலில்தான் கல்லூரிக்கு வருகிறார்கள். நான் மட்டும்தான் தங்க மெர்சிடீஸ் பென்ஸ் காரில் கல்லூரிக்குப் போகிறேன். இது ஒன்றைத்தவிர எனக்கு இங்கு வேறு ஏதும் பிரச்சனையில்லை.

இப்படிக்கு

மகன் நாசர்



மகனின் கடித்தத்தைப் பார்த்து வருத்தப்பட்ட தந்தை, அடுத்த சில நாட்களிலேயே ஒரு பதில் கடிதம் எழுதினாராம். அதையும் படிங்க...



அன்பு மகனுக்கு

உன் வங்கிக் கணக்கிற்கு இருபது மில்லியன் டாலர் அனுப்பிவைத்திருக்கிறேன். நீ வெட்கப்படுவதை விட்டுவிட்டு, அங்கே உனக்காக சொந்தமாக ஒரு ரயிலும் வாங்கிக்கொள்.

இப்படிக்கு

உன் அப்பா.


இவரல்லவோ தந்தைன்னு வியந்துபோயிருப்பீங்களே...ம்ம்ம்...இதுதான் அரபிகளின் தனித்தன்மை :)

14 comments:

  1. அப்பான்னா இப்படிபட்ட அப்பால்ல வேணும். நல்ல அப்பா..!!

    ReplyDelete
  2. சரியாச் சொன்னீங்க சுந்தர்.

    ReplyDelete
  3. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க. அருமை பாஸ்.

    ReplyDelete
  4. yalla Appakkalum ithu poul rail vanga panam kuduthal.....riksha iluthu kalekter Aakkura Appavaiyum soulppa...

    ReplyDelete
  5. நன்றாக உள்ளது.
    தொடருங்கள், தொடர்கிறோம்.

    ReplyDelete
  6. //இதுதான் அரபிகளின் தனித்தன்மை :) //சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்.ஜோக் என்றாலும் அரபிகளின் இயல்பே இப்படித்தான் இருக்கின்றது.

    ReplyDelete
  7. நான் அந்த பையனா பிறக்காம போயிட்டேனே!

    ReplyDelete
  8. இதே நானா இருந்தா அப்ப்படியா மகனே , நீயும் அவர்களுடன் ரயில் செல் என்பேன்.

    ஆனால் அரபிகள் ஹிஹி

    ReplyDelete
  9. சுல்தான்June 27, 2010 at 11:47 AM

    எல்லாப் பெருந்தன்மையும், தனித்தன்மையும் இன்னும் 30 வருசத்துக்குத்தான். அதுக்குப் பின்னே எல்லா பெட்ரோலும் காலி ஆகிட்டா சைக்கிள்ல கூட போக முடியாது. அரபிகளுக்கு எண்ணையை விட்டா பாலைவன மண்ணு மட்டுமே மிச்சம்.

    ReplyDelete
  10. சூப்பர்! இது கற்பனையா தெரியல, உண்மையாவே நடந்திருக்கும் வாய்ப்புகளே அதிகம்!

    ReplyDelete
  11. is it correct, is recession over in Gulf countries.

    ReplyDelete
  12. PADITHTHATHUM ORE SIRIPPUTHAAN!

    ReplyDelete
  13. சூப்பர் அப்பா சூப்பர் மகன்...சூப்பர் ரயிலும் கூட ... ஹும் எங்க அப்பாகிட்டே படிக்கற காலத்துல ஒரு ரயில் பொம்மை கூட தேத்த முடியாது....

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails