Tuesday, August 31, 2010

ஏங்க, கஷ்டத்தை அரைச்சுக் கொழம்பு வைக்கிறீங்க???


"என்னது, இன்னிக்கி குழம்பு ருசி வித்தியாசமா இருக்கு?" என்று கனியத்தை கேட்க,
"வீட்ல கசகசா இல்லாம இருந்திருக்கும்மா... அதனால, வெறும் தேங்கா மட்டும்தான் அரைச்சு ஊத்தினேன்"ன்னு சொன்னாங்க செல்வி அண்ணி.

"அதான பாத்தேன்...மொதல்லயே சொல்லிருந்தா மூக்காண்டி கடைல வாங்கிட்டு வந்திருப்பேன்ல. இப்ப, உங்கப்பா வந்து கொழம்பு நல்லால்லன்னு வையப்போறாக..." என்று அண்ணியைத் திட்டுனாங்க அத்தை. கசகசான்னா என்னம்மான்னு சின்ன வயசில அம்மாகிட்ட கேட்க, கறிக்குழம்புக்கு வறுத்து வச்சதை எடுத்து கையில குடுத்தாங்க அம்மா. சும்மா சாப்பிட்டாக்கூட நல்லாத்தான் இருந்துச்சு அது.

அப்போ நான் கேட்டமாதிரி, இங்கயும் அதென்ன கசகசா ன்னு ஒருத்தர் ரெண்டுபேர் கேட்டாலும், கடுகைவிடச் சின்னதா, வெள்ளை நிறமா இருக்கிற அந்தப் பலசரக்குப்பொருளை நம்மில் அநேகருக்குத் தெரிஞ்சிருக்கும். கறிக்குழம்பு, குருமாவுக்கெல்லாம் அரைச்சு ஊத்தினா ருசி நல்லாயிருக்கும்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்க. ஆனா, அதுவே அளவு கொஞ்சம் அதிகமாயிட்டுன்னா கிறக்கமா வரும்னும் கனியத்தை சொல்லக்கேட்டதுண்டு.

ஆனா, இப்படிப்பட்ட கசகசாவோட இன்னொரு பெயரைக்கேட்டா நீங்க ஆடிப்போயிடுவீங்க.பாப்பி சீட்ஸ் ன்னு ஆங்கிலத்தில் நாம சொல்லுகிற இந்தக் கசகசாவோட இன்னொரு செல்லப் பெயர் ஓபியம் (opium). வளைகுடா நாடுகளிலும் இன்னும் சில நாடுகளிலும் தடைசெய்யப்பட்டிருக்கிற ஒரு பயங்கர போதைப்பொருள்.

இங்கே அதெல்லாம் கிடைக்காது என்று ஊரிலிருந்து, அட்டைப்பெட்டிச் சாமான்களுக்குள் அரைக்கிலோவோ கால்கிலோவோ கொண்டு வரும் அம்மணிகளுக்குத்தான் இந்த எச்சரிக்கை. நான் கொண்டு வரமாட்டேன், யாராவது வரும்போது குடுத்துவிடச்சொல்லுவேன் என்பவர்களுக்கும் கூடுதலாக எச்சரிக்கை...வீணாக யாரையும் வம்புல மாட்டி விட்டுராதீங்க.

சில மாதங்களுக்குமுன் இங்கேயுள்ள தினசரி ஒன்றில் கசகசா கொண்டுவந்து பிடிபட்ட ஒருவரைப்பற்றி, பெரிய போதைக் கடத்தல் மன்னன் ரேஞ்சுக்கு எழுதியிருந்தாங்க. அப்படிப் பிடிபடுபவர்களுக்கு, இங்கே குறைந்தது 20 வருடங்கள் சிறைத்தண்டனையோ அல்லது மரண தண்டனையோ கிடைக்கும்னு சொல்றாங்க.

அதனால, கசகசாவும் வேண்டாம் கஷ்டமும் வேண்டாம். இனிமே, ஈசியாக் கிடைக்கிற முந்திரிப்பருப்பை அரைச்சு ஊத்தி, குருமாவோ குழம்போ வச்சு அசத்திருங்க.

எதுக்கும் சந்தேகம்னா இதையும் பாத்துக்கோங்க...

8 comments:

 1. ஆமாம், வளைகுடா நாடுகளில் கசகசா தடை செய்யப்பட்ட ஒன்று அல்லவா? அதனால் தான் அது கடைகளில் கிடைப்பதும் இல்லை. உண்மையில் கசகசா எனபது பாப்பி எனப்படும் ஒப்பியம் காயின் உள்ளே உள்ள விதைதான்.
  எனவேதான் நாம் நம் நாட்டில் அதனை சிறிய அளவில் பயன்படுத்துவோம்.

  ReplyDelete
 2. அட இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே..!!

  ReplyDelete
 3. எவ்வளவு சொன்னாலும் திருந்தாம இதக் கொண்டு வர்றாங்க!! நாங்கல்லாம் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை, பாதாமுக்கு மாறி ரொம்ப வருஷமாச்சு!! இப்ப இந்தியாவிலகூட எங்க ஊர்ல அதிகம் இதை பயன்படுத்துவதில்லை!!

  ReplyDelete
 4. //LK said...

  ennak kastam ithu //

  நாட்டைவிட்டு வெளியே வந்தா இதுமாதிரி நிறைய கஷ்டம் இருக்குது LK.

  ReplyDelete
 5. //கக்கு - மாணிக்கம் said...

  ஆமாம், வளைகுடா நாடுகளில் கசகசா தடை செய்யப்பட்ட ஒன்று அல்லவா? அதனால் தான் அது கடைகளில் கிடைப்பதும் இல்லை. உண்மையில் கசகசா எனபது பாப்பி எனப்படும் ஒப்பியம் காயின் உள்ளே உள்ள விதைதான்.
  எனவேதான் நாம் நம் நாட்டில் அதனை சிறிய அளவில் பயன்படுத்துவோம்.//

  நிஜம்தாங்க...வருகைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி ஜெய்லானி!

  நன்றி ஹுசைனம்மா!

  ReplyDelete
 7. ஆமாங்க... நான் கூட படிச்சேன்....

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails