Wednesday, September 1, 2010

நான் வளர்ர்ர்கிறேனே மம்மீ!!!

அந்தக்காலத்துல, வளரணும் வளரணும்னு வாசல் நிலைப்படியில் தொங்கியும் ஒட்டகச்சிவிங்கி டானிக் வாங்கிக் குடிச்சும் வளர்ந்ததென்னவோ கொஞ்சமாத்தான். ஆனா, வயசு பதினாலு ஆகிறதுக்குள்ள, இந்தப்புள்ள வளர்ந்திருக்கிற வளர்த்தி, ஆறடி ஒம்போது அங்குலமாம்.

பேரு எலிஸானி சில்வா. பொறந்தது பிரேஸில் நாட்டுல. பொறந்த தேதி 1995 செப்டெம்பர் 27. அப்பா அம்மால்லாம் நார்மலான வளர்த்திதானாம். ஆனா, தன்னோட பதினோராவது வயசிலிருந்து வேகவேகமா வளந்த இந்தப்பொண்ணு, தன்னோட அதிக வளர்த்தி காரணமாகவே பள்ளிப்படிப்பை இழந்திருக்கிறது.

பள்ளிக்கூடத்து இருக்கையிலேயும், ஸ்கூல் பஸ்ஸிலேயும் உயரம் காரணமாக உட்கார முடியாம மூட்டுகளில் வலியுடன் கஷ்டப்பட்ட இந்தப்பெண்ணுக்கு, தன்னுடைய அதீத உயரத்தால் ஏற்படும் அசௌகரியங்களாலும் மன அழுத்தத்தாலும் தொடர் தலைவலியும் ஏற்படுகிறதாம். இதோட இலவச இணைப்பாக, ஏன்னு தெரியாமலேயே கோபமும், கவலையும் வந்து படுத்தியெடுக்குதாம்.

பாவம், வளந்தாலும் கஷ்டம்,வளரவேமுடியாம குறுகினாலும் கஷ்டம்.

ஆனா, படிப்புப்போனாலும், மாடலிங் மூலமாக முன்னேறணும்ங்கிறது இந்தப்பெண்ணோட ஆசை. அதுக்காக இப்பவே பூனை நடையெல்லாம் நடந்து பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சிடுச்சாம். இந்த மாசம் இருபதாம் தேதி மணப்பெண் அலங்கார ஆடைகளுக்கான ஷோவில் மேடையேறப்போகுதாம். அப்ப நம்மவீட்டு டீவியிலும் வந்து நிக்கும் பாருங்க.



அப்பா,அம்மா மற்றும் உடன்பிறப்புகளுடன்...

4 comments:

  1. அந்த பொண்ணு காம்ப்ளான் குடிக்குதோ? இரட்டிப்பு வளர்ச்சியாமே!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி. உயரம் கஷ்டம் தான்...

    ReplyDelete
  3. பொண்ணு காம்ப்ளான் குடிக்குதோ

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails