Saturday, September 25, 2010

மாத்தி யோசிக்கணும்!



கண்பார்வையில்லாத ஒரு சிறுவன், "எனக்கு ரெண்டு கண்ணும் தெரியாது...உதவி செய்யுங்க"ன்னு ஒரு பலகையில் எழுதிப் பக்கத்தில் வச்சிட்டு,பிச்சையெடுத்துகிட்டிருந்தான். காலுக்குப் பக்கத்திலிருந்த அவனுடைய தொப்பியில், ஒன்றிரண்டு சில்லரை நாணயங்கள் மட்டுமே கிடந்தன.

அப்ப, அங்கே வந்த ஒரு மனிதன், எழுதிவச்சிருந்த பலகையையும்,கண்ணில்லாத அந்தச் சிறுவனையும் பார்த்தான். தன்னிடமிருந்த சில நாணயங்களை அந்தப் பையனின் தொப்பியில் போட்டுவிட்டு, அந்தப் பலகையிலிருந்த வாசகங்களை அழிச்சிட்டு, வேறு வாக்கியத்தை எழுதிவச்சிட்டுப் போனான்.

கொஞ்ச நேரத்திலேயே சிறுவனின் தொப்பி நிறையுமளவுக்குக் காசு சேர்ந்துவிட்டது. கடந்துபோன எல்லாரும் அந்த வாக்கியத்தைப் பாத்துட்டு, தன்னாலியன்ற சில்லரையைப் போட்டுடுப் போனாங்க.

மாலையில், பலகையில் மாத்தி எழுதிவச்சிட்டுப்போன அந்த மனிதன், என்னதான் நடந்திருக்கும்னு பார்க்க ஆர்வத்தோட வந்தான். நிறைஞ்சிருந்த தொப்பியைப் பார்த்து சந்தோஷமாயிருந்தது அவனுக்கு.அவனது காலடிச் சத்தத்தை வச்சே, காலையில் வந்து பலகையில் ஏதோ மாத்தி எழுதிவைத்த மனிதன்தான் அவன்னு கண்டுபிடிச்சிட்டான் அந்த சிறுவன்.

ஐயா,பலகையிலிருந்ததை அழிச்சு எழுதினது நீங்கதானே? நீங்க என்ன எழுதி வச்சீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமான்னு கேட்டான். அதற்கு அந்த மனிதன் சொன்னான்,நீ எழுதியிருந்ததையே நான் கொஞ்சம் வித்தியாசமா எழுதி வச்சேன். அது என்னன்னா, "இன்றைய நாள் மிகவும் அழகானது.ஆனால்,அதை என் கண்களால் காணமுடியாது" ன்னு எழுதினேன் என்று சொன்னானாம்.

இரண்டுக்குமே அர்த்தம் ஒண்ணுதான்னாலும், இரண்டாவது எழுதப்பட்ட வாக்கியம், பார்க்கிற ஒவ்வொருவரிடத்திலும், கிடைத்திருக்கிற இன்றைய நாளை நல்லபடியாக அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தையும், அதை அனுபவிக்கமுடியாத அந்தச் சிறுவன்மேல் இயல்பாகவே ஒரு இரக்கத்தை உண்டுபண்ணுவதாகவும் இருக்கிறதல்லவா?

இதிலிருந்து நாம தெரிஞ்சிக்கவேண்டிய ரெண்டு விஷயம் என்னன்னா...

ஒண்ணு, புதுமையா சிந்திக்கணும்.

இன்னொண்ணு, அதை சிறப்பான முறையில சொல்லத்தெரியணும்.

ரெண்டும் தெரிஞ்சிட்டா, வெற்றி நம் காலடியில்தான்.


6 comments:

  1. நல்ல சிந்தனை..
    இதை ஒரு குறும்படமா எடுத்துருப்பாங்க..நல்லா இருக்கும்.
    மன்னிச்சுக்கங்க அந்த குறும்படத்தோட லிங்க் கிடைக்கல...

    ReplyDelete
  2. //துளசி கோபால் said...

    அருமை.//

    வாங்க டீச்சர் :)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. // LK said...

    nice//

    நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  4. //Balaji saravana said...

    நல்ல சிந்தனை..
    இதை ஒரு குறும்படமா எடுத்துருப்பாங்க..நல்லா இருக்கும்.
    மன்னிச்சுக்கங்க அந்த குறும்படத்தோட லிங்க் கிடைக்கல...//

    வாங்க சரவணா...

    இது நான் மின்னஞ்சலில் படிச்ச கதை. லிங்க் கிடைச்சா கொடுங்க.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails