Wednesday, October 13, 2010

இன்ஸ்டன்ட் விவாகரத்து!!!


ஆயிரம் பிரச்சனைகள் மனசில் அழுத்திக்கிட்டிருந்தாலும், குழந்தைகளுக்காகவும், கவுரவத்திற்காகவும் கடனே என்று பலர் கட்டாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, எடுத்தேன் கவுத்தேன்னு, எதையும் விசாரிக்காம, ஷாப்பிங் மால்ல விவாகரத்து செஞ்சு பேப்பரில் வந்திருக்காங்க இவங்க...

விவாகரத்துக்கள் மலிந்துபோன இந்தக் காலகட்டத்திலும் இந்த விவாகரத்து, கொஞ்சம் வித்தியாசமானதுதான்.

மதீனாவிலுள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால். கூட்டம் நிறைந்திருந்த அந்த மாலுக்கு வெளியே,மனைவியைக் கூட்டிச்செல்லக் காரில் காத்திருந்திருக்கிறார் அந்த சவுதி அரேபியக் கணவர். மாலிலிருந்து வெளியே வந்த தன் மனைவி இளைஞனொருவனிடமிருந்து ஒரு துண்டுச்சீட்டை வாங்கிக் கைப்பைக்குள் போட்டதைப் பார்த்துவிட்டு, காருக்குள் ஏறியதும் மனைவியின் கைப்பையைப் பிடுங்கிப்பார்க்க, அலைபேசி எண் எழுதப்பட்ட அந்தக் காகிதம் அவர் கையில் சிக்கியிருக்கிறது.

உடனே,மனைவியைக் காரிலிருந்து இறங்கச்சொன்ன அவர், ஷாப்பிங் மாலில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்புச் செய்வதற்காக வைத்திருந்த ஒலிபெருக்கியில், அங்கிருந்த மக்களை விளித்து, தன் மனைவியைத் தான் விவாகரத்துச் செய்துவிட்டதாக அறிவித்துவிட்டு, கண்ணீருடன் நின்ற மனைவியை அங்கேயே கைகழுவிட்டுத் தான் மட்டும் காரில் போய்ட்டாராம்.

சாமான் வாங்கன்னு ஷாப்பிங் மாலுக்கு வந்தா, முந்திவந்த விதி, அந்தப் பொண்ணுக்கு விவாகரத்தே வாங்கிக் கொடுத்திருச்சு. என்ன கொடுமை பாருங்க...


குறிப்பு:-இந்தச் செய்தியைஆங்கிலத்தில் படிக்கணுமா..."அழுத்துங்க இங்கே"

18 comments:

  1. அடப்பாவமே, இப்படியா ஓபன்னா ஃபோன் நம்பர் வாங்குறது? பொண்ணுக்கு விவரம் பத்தாது போல!!

    ReplyDelete
  2. இப்படி எல்லாம் நடக்குதா....?

    ReplyDelete
  3. விசாரிக்காமல் இப்படி கூட,பாவம் அந்தப்பெண் உண்மை என்ன என்று யாருக்கு தெரியும்?

    ReplyDelete
  4. வருத்தமான நிகழ்வு. விசாரிக்கக் கூட செய்யாமல்....
    :-((

    ReplyDelete
  5. திட்டம் போட்டுதான் செஞ்சாரோ! பெண்களே இனிமேல் மால் பக்கம் செல்லாதீர்கள் ;)

    ReplyDelete
  6. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது ஒருபுறம். எதையும் விசாரிக்காமல் ஒருவன் மடத்தனமாக இவ்வாறு செய்வதற்கு எந்த அடிப்படையுமில்லை என்பது இன்னொரு புறம். இது உண்மையாக இருக்குமானால் அந்தப் பெண் இப்படிப்பட்டவனோடு வாழ்வதைவிட, விவாகரத்து பெற்றதே மேல்!

    ReplyDelete
  7. அடப்பாவமே இப்படிக்கூடவா நடக்குது.......எல்லாம் காலத்தின் கோலம்.......

    ReplyDelete
  8. அடப்பாவமே இப்படி நடக்குமா.?

    ReplyDelete
  9. //ஹுஸைனம்மா said...

    அடப்பாவமே, இப்படியா ஓபன்னா ஃபோன் நம்பர் வாங்குறது? பொண்ணுக்கு விவரம் பத்தாது போல!!//

    :)வாங்க ஹுசைனம்மா...நன்றி!

    ReplyDelete
  10. //சங்கவி said...

    இப்படி எல்லாம் நடக்குதா....?//

    நடந்ததாத்தான் சொல்றாங்க...

    வருகைக்கு நன்றி சங்கவி!

    ReplyDelete
  11. //LK said...

    enna solla :(//

    வருகைக்கு நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  12. //asiya omar said...

    விசாரிக்காமல் இப்படி கூட,பாவம் அந்தப்பெண் உண்மை என்ன என்று யாருக்கு தெரியும்?//

    பாவம்தான்...

    வருகைக்கு நன்றி ஆசியா!

    ReplyDelete
  13. //அம்பிகா said...

    வருத்தமான நிகழ்வு. விசாரிக்கக் கூட செய்யாமல்....
    :-((//

    ஆத்திரத்தில் அறிவிழத்தல்ங்கிறது இதுதான்...

    நன்றி அம்பிகா!

    ReplyDelete
  14. // V.Radhakrishnan said...

    திட்டம் போட்டுதான் செஞ்சாரோ! பெண்களே இனிமேல் மால் பக்கம் செல்லாதீர்கள் ;)//

    நல்ல தீர்வுதான்...

    ஆனா, ஊர்ல உள்ள மால்களையெல்லாம் இழுத்துமூடவேண்டிவருமே :)

    நன்றி ரங்கன்!

    ReplyDelete
  15. அஸ்மா said...

    //இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது ஒருபுறம். எதையும் விசாரிக்காமல் ஒருவன் மடத்தனமாக இவ்வாறு செய்வதற்கு எந்த அடிப்படையுமில்லை என்பது இன்னொரு புறம். இது உண்மையாக இருக்குமானால் அந்தப் பெண் இப்படிப்பட்டவனோடு வாழ்வதைவிட, விவாகரத்து பெற்றதே மேல்!//

    வாங்க அஸ்மா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  16. //நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

    அடப்பாவமே இப்படிக்கூடவா நடக்குது.......எல்லாம் காலத்தின் கோலம்.......//

    ஆத்திரக்காரனுக்கு (அவசரக்காரனுக்கும்)புத்தி மட்டுன்னு சொல்லுவாங்களே...அதுதான் இது :)

    நன்றி நித்திலம்!

    ReplyDelete
  17. //தியாவின் பேனா said...

    அடப்பாவமே இப்படி நடக்குமா.?//

    ம், கலிகாலம் :)

    நன்றி தியா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails