Wednesday, October 20, 2010

கு...கு...கு...குளிர்காலம்!


கொளுத்திய வெயில் காலம் போயாச்சு...அப்பாடா, இன்னும் ஐந்தாறு மாசத்துக்கு அட்டகாசமான காலநிலைதான். அப்பப்போ மழைவரும். ஆளை நடுக்கும் பனி வரும். ஆனா, இப்போ, இதமான காற்றும் பதமான வெயிலுமாக இருக்கிறது பாலைவனம். தாவரங்களெல்லாம் தழைத்துப் பூக்களுடன் பொலிவாகக் காட்சியளிக்கிறது.அடுத்த மாதமெல்லாம் குளிரெடுக்க ஆரம்பித்துவிடும். பிரிந்திருக்கும் காதலர்களுக்குக் குளிர் காலம் கொடுமையாய்த் தோன்றுமென்பார்கள். பணியின் நிமித்தமாய்ப் பாலையில் தனித்து வாழுபவர்களுக்கும் அப்படித்தான். ஆனால், இதமான நினைவுகள் இல்லாதவர்களுக்குத்தான் குளிர்காலம் கடுமையாய்த் தெரியுமாம். இது ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு சொல் வழக்கு.

எத்தனை எத்தனையோ இதமும் பதமுமான நினைவுகளை இதயக்கூட்டில் சேமித்துவைத்திருப்பவர்கள் எந்தக் காலநிலையையும் எதிர்கொண்டு சமாளிக்கமுடியுமாம். ஆனால், அந்த நினைவுகளே இன்னும் ஞாபகத்தைக் கூட்டி, சுய இரக்கத்தைப் பெருக்கிவிடுமென்றுதான் தோன்றுகிறது.

இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவண ரோ?எனப்
பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்குஎயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே...

இது குறுந்தொகைப்பாடல்...கார்காலத்தில் திரும்பிவருவேன் என்று சொல்லிப் பொருளீட்டச்சென்ற தலைவன், கார்காலம் வந்தும் வரவில்லை. அதனால் வருந்திய  தலைவியொருத்தி, தன் தோழியைப்பார்த்துச் சொல்கிறாள். இளமையின் இன்பங்களை மறந்துவிட்டுப் பொருள்தேடச்சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. இதையறிந்து, மழையினால் செழித்து மலர்ந்து கிடக்கின்ற முல்லைமலரானது, தன் அரும்புப் பற்களைக்காட்டி எனைக் கேலிசெய்கிறது என்று!


அங்கே தலைவி...இங்கே தலைவன்...

கம்பராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில், கிளிமொழியாள் சீதையை எண்ணி வாடுகிற இராமனைப்பற்றிச் சொல்லுவார் கம்பர்...

'மழை வாடையோடு ஆடி, வலிந்து, உயிர்மேல்
நுழைவாய்; மலர்வாய் நொடியாய் - கொடியே!
இழைவாள் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ?

மழைக்காலத்து வாடைக்காற்றோடு மருவி ஆடுகிற கொடியே, நீ துவண்டுதுவண்டு ஆடுகிற அழகில், வாள்போன்ற நெற்றியையுடைய என் சீதையின் இடையழகை எனக்கு ஞாபகப்படுத்தி, என் உயிரினைத் தளரச்செய்கிறாயே என்று அசைந்தாடும்  கொடியினைக் கடிந்துகொள்கிறானாம் இராமபிரான்.

இப்படிப் பார்க்கிற பொருளெல்லாம் தன் துணையையே நினைவுறுத்த, பொருள்வயிற் பிரிந்து, காத்திருக்கும் காதலர்கள் நெஞ்சம் தளர்ந்துபோகக் காரணமாகிவிடுகிறதாம் கார்காலம்.

மழையும் வாடையுமான குளிர்காலத்தோட கஷ்டத்தைச் சொன்னதில் வருத்தப்பட்ட மனசுக்கு இதமாக,இனி, குளிரின் கொடுமையை இல்லாமல்செய்ய,
குளிர்காலத்துக்கான குறிப்பு ஒண்ணு...

குளிர்காலம் வந்துட்டா, தினமும்


உதட்டில் ரெண்டுதடவை,
கன்னத்தில் ரெண்டுதடவை,
நெற்றியில் ரெண்டுதடவை,
கண்ணிமைகளில் ஒருதடவை,
*
*
*
*
*
*
*
*
*

கோல்ட் க்ரீம் தடவிக்கிட்டா
உடம்புக்கு நல்லது...

இது நான் சொன்னதில்லேங்க...பிரபல அழகுக்கலை நிபுணர் அடிச்சுச்சொன்னது.


அடுத்ததா ஒரு மருத்துவக்குறிப்பு...

இடைவிடாத புயல் மழை, வெளியே இறங்கமுடியாத அளவுக்குக் குளிர். நள்ளிரவில் பல்வலியெடுக்கிறது உங்களுக்கு...என்ன செய்யலாம்?

இது, ஆர்க்டிக் பிரதேசத்து வைத்தியம்...ஆனா,பலன் நிச்சயம்!

கனத்த ஒரு சுத்தியலை எடுத்து, உங்கள் வலதுகைப் பெருவிரலில் நச்சுன்னு ஒரு அடி அடிச்சீங்கன்னா பல்வலி பட்டுன்னு பறந்துபோயிடுமாம். என்ன, யாருமே நம்பாதமாதிரி தெரியுதே....

ஆமாங்க...அடிபட்ட விரல் வலிக்கிற வலியில் மற்ற வலியெல்லாம் மறந்துபோயிடும் பாருங்க :) ...

என்ன, ஆளாளுக்கு சுத்தியலை எங்கேன்னு தேடுறீங்களோ? :)9 comments:

 1. //ஆமாங்க...அடிபட்ட விரல் வலிக்கிற வலியில் மற்ற வலியெல்லாம் மறந்துபோயிடும் பாருங்க :) //
  ரைட்டு :))

  குறுந்தொகை மற்றும் கம்பராமாயண பாடல் & விளக்கம் சூப்பர்!

  //கோல்ட் க்ரீம் தடவிக்கிட்டா
  உடம்புக்கு நல்லது...//

  நல்ல வேலை சுத்தியலால அடிக்கனும்னு சொல்லல :)

  ReplyDelete
 2. serious a arambichu sirika vachu apram azavum vachiteenga :(

  blood in my neck :0

  sudha.R

  ReplyDelete
 3. ரொம்ப சீரியஸ்-ஆ எழுத தொடங்கி...
  நல்ல சிரிக்க வச்சிட்டீங்க...

  //கனத்த ஒரு சுத்தியலை எடுத்து, உங்கள் வலதுகைப் பெருவிரலில் நச்சுன்னு ஒரு அடி அடிச்சீங்கன்னா பல்வலி பட்டுன்னு பறந்துபோயிடுமாம். என்ன, யாருமே நம்பாதமாதிரி தெரியுதே......

  ஆமாங்க...அடிபட்ட விரல் வலிக்கிற வலியில் மற்ற வலியெல்லாம் மறந்துபோயிடும் பாருங்க :) ...

  என்ன, ஆளாளுக்கு சுத்தியலை எங்கேன்னு தேடுறீங்களோ? :) ////

  சிரிச்சு முடியல.... என்னமா ஐடியா தரீங்க...
  இந்த பதிவு எழுதினவங்கள.......ஒன்னு பண்ணனும்
  எதாவது ஒரு நல்ல ஐடியா தாங்க பாப்போம்... :-)))

  ReplyDelete
 4. அன்பு சுந்தரா,கோல்ட் க்ரீம் ஆரம்பிக்கும்போது திசை மாறிவிட்டது கவிதை:)
  கன்னத்தில்,உதட்டில் என்று விட்டு...க்ரீமுக்குப் போய்விட்டீர்கள். அருமை:)))
  சுத்தியலால் அடித்தால் பல்வலி போய்விடுமா. உங்களுக்குப் பல்வலி வரும்போது சொல்லுங்க ,
  நான் கட்டாயம் வந்து உதவி செய்கிறேன்.
  குளிர்காலக் கவிதை அருமை. வாழ்த்துகள்மா.

  ReplyDelete
 5. //சென்ஷி said...

  :)//

  வாங்க சென்ஷி :)

  சிரிச்ச முகத்துக்கு நன்றி!

  ReplyDelete
 6. //குறுந்தொகை மற்றும் கம்பராமாயண பாடல் & விளக்கம் சூப்பர்!

  //கோல்ட் க்ரீம் தடவிக்கிட்டா
  உடம்புக்கு நல்லது...//

  நல்ல வேலை சுத்தியலால அடிக்கனும்னு சொல்லல :) //

  வாங்க சரவணன் :)

  சுத்தியலால அடிக்கடி அடிக்கக்கூடாதுல்ல...அதான் :)

  ReplyDelete
 7. //Anonymous said...

  serious a arambichu sirika vachu apram azavum vachiteenga :(

  blood in my neck :0

  sudha.R//

  வாங்க சுதா :)

  முதல்வருகைக்கு நன்றி!

  கழுத்துக் காயத்துக்கு என்ன பண்ணலாம்னு அடுத்தபதிவு தயாராயிட்டிருக்கு :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails