Monday, October 25, 2010

இந்தப் புள்ள(ப்பூச்சி)யும் பாவம்தான்...கல்யாணமாகி நாலுமாசம்தாங்க ஆச்சு...தலைநகரத்தில் தனிக்குடித்தனம்...


போனவாரம்,அம்மா வீட்டுக்குப்போகணும்னு ஆசையாச் சொன்னா...

கழுத, காசு போனாப்போகுதுன்னு கால்டாக்சி புடிச்சு, அத்தனைபேருக்கும்,அதாங்க,அவங்கவீட்டு நாய்க்கு உட்பட பிடிச்சதெல்லாம் வாங்கிக்கிட்டு அழைச்சிட்டுப்போனேன்.

இந்தவாரம், எங்க அம்மாவைப் பாத்துட்டுவரலாம்னு நான் சொன்னேன். எட்டாம் நம்பர் பஸ்சைப்பிடிச்சுப் போயிட்டு,சட்டுபுட்டுன்னு திரும்பிவாங்கன்னு பதில்சொல்றா.

*******************

நேத்து, புதுப்புடவை கட்டியிருக்கேன். நல்லாருக்கான்னு சொல்லுங்கன்னு வந்து நின்னா...

'உன்னோட கலருக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்மா'ன்னு இயல்பாச் சொன்னேன்.

என்னோட கலருக்கு...? கறுப்பா இருக்கேன்னுதானே இப்படிக் குத்திக்காட்டுறீங்கன்னு சொல்லி கண்ணைக் கசக்கினது மட்டுமில்லாம, என்னோட மொத்தக் குடும்பத்தையும் இழுத்து, அத்தனைபேரும் அவலட்சணம்னு ஒத்த வரியில தீர்ப்பு சொல்லிட்டுப்போயிட்டா...


*******************

அன்னிக்கி, டி.வி யைப் பாத்துக்கிட்டே அப்பிடியே கொஞ்சம் கண்ணசந்துட்டேன். ஏங்க தூங்குறீங்களான்னு கேட்டுட்டே உலுக்கி எழுப்பினா. என்னவோ ஏதோன்னு எழுந்து உக்கார்ந்தா,கனவுல நமீதாவோட டூயட் பாடுறீங்களோன்னு நெனச்சேன் என்று சொல்லிட்டு நமட்டுச் சிரிப்புச்சிரிச்சா...

சரி, நல்லமூடுல இருக்காளேன்னு நினைச்சுக்கிட்டு, கம்ப்யூட்டர் முன்னால உக்கார்ந்துகிட்டிருந்தவளை, என்னம்மா தூக்கம்வரலியான்னு சும்மாத்தான் கேட்டேன்.

பாத்தாத்தெரியல...பார்வை நல்லாத்தானே இருக்கு? கேக்குறாரு பாரு கேள்வின்னு கெத்தா சொல்லிட்டு, ஆணாதிக்கவாதிகளை அடக்குவது எப்படிங்கிற இடுகைக்கு நல்லதா ஒரு பாயிண்ட் நினைச்சுவச்சிருந்தேன்...இப்ப எல்லாம் மறந்துபோச்சுன்னு,எண்டரைத் தட்டிக்கிட்டே எல்லாப்பழியையும் எம்மேலபோட்டுட்டு, மறுபடியும் அண்ணாந்து பாத்து ஆணியவாதிகளைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டா.


******************

சம்பளம் வந்திருக்குமே,கொண்டாங்க கவரைன்னு கேட்டா...

அப்படியே எடுத்து அலுங்காமக் குடுத்தேன்.

உன்னோட சம்பளக் கவரைக் காட்டுன்னு, ஒருநாளாவது கேட்டுரணும்னு நானும் நாலுமாசமா நினைச்சு,கொஞ்சங்கொஞ்சமா தைரியத்தைக் கூட்டிக்கிட்டு பக்கத்திலபோய் நின்னேன். ஆனா, கிட்டப்போய் நின்னதும் வாயில காத்துமட்டுமே வந்து தொலைக்க, 'சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா அம்மா கையில கொடுத்துப்போடு சின்னக்கண்ணுன்னு' அடிக்குரல்ல அந்தக்காலப் பாட்டை முணுமுணுத்துக்கிட்டே அங்கயிருந்து நகர்ந்துவந்துட்டேன்.


*********************

என்னங்க,வர்ற தீபாவளியன்னிக்கி, நான் காலைல அஞ்சுமணிக்கே எந்திரிச்சு, வாசல்ல ரங்கோலி போடப்போறேன்னு சொன்னா...

சரிம்மா, நல்லவிஷயம்தானே,போடுன்னேன்.

ஆனா,அதுக்குமுன்னாடி,நீங்க நாலுமணிக்கே எந்திரிச்சு ஹீட்டரை ஆன் பண்ணிட்டு,காஃபியும் போட்டுவச்சிரணுன்னு அடுத்ததாச் சொன்னா. அன்னிக்கித் தூக்கமும் பாழான்னு,அம்மியிலபோயி முட்டிக்கலாம்போல இருந்திச்சு..ஆனாலும், அவமுன்னால வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன்.


*******************

தீபாவளிக்குத் துணியெடுக்க, தி.நகர் போவோம்னு சொன்னா. சரி, தலதீபாவளியாச்சே...
சேலை துணிமணியோட, சின்னதா,தங்கத்துலயும் ஏதாவது வாங்கிக்குடுக்கணும்னு மனசுல நினைச்சுக்கிட்டு, சரிம்மா போவோம்ன்னேன்.

பச்சப்புள்ள பஞ்சுமுட்டாய்க்கு ஆசப்படுறமாதிரி, பாக்கிற சேலையெல்லாம் நல்லாருக்குன்னு சொன்னா. மனசு நோகக்கூடாதேன்னு நானும் மறுக்காம தலையாட்டினேன். கடைசியில பத்துப்பதினோரு சேலைக்கு பில்போடச்சொல்லிட்டு, காசிருக்கில்லே என்று,கரிசனமாவேற கேட்டா.

கடைசியில,ரெண்டு பிக் ஷாப்பரையும் தூக்கமுடியாம கையில தூக்கிக்கிட்டு, இனிமே உங்களுக்குத் துணியெடுப்போம் வாங்கன்னு சொன்னா. இருக்கிற பதினஞ்சு ரூவா பஸ்சுக்குத்தான் சரியாவரும்னு நினைச்சிக்கிட்டே, தலையை வலிக்குது, வாம்மா வீட்டுக்குப் போவோம்னு, வலிய அவளை இழுத்துட்டுவந்தேன்.


*********************


ஆமா,,,இப்ப நீங்க ஏதோ எங்கிட்ட கேட்டமாதிரி இருந்திச்சே...

என்னது?? தங்கமா....???

உங்களுக்கெல்லாம்,என்னப்பாத்தாப் பாவமாவே இல்லயாங்க?????

*********************

20 comments:

 1. ஹா ஹா.. கலக்கல் சகோ!

  //அம்மியிலபோயி முட்டிக்கலாம்போல இருந்திச்சு.//

  செம சூப்பர்..

  //அவமுன்னால வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன்//

  தன்மானச் சிங்கம்ல :)

  எங்கள மாதிரி பேச்சுலருக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்ததுக்கு மிக்க நன்றி ;)

  ReplyDelete
 2. நீங்க ரொ!!!!!!!!!!!!!!ம்ப பாவம் சார்!இருந்தாலும்,தங்கம் வாங்கிறது இந்தக் காலத்துல நல்ல விஷயம் தானே,சார்???????????!!!!!!!

  ReplyDelete
 3. //சேலை துணிமணியோட, சின்னதா,தங்கத்துலயும் ஏதாவது வாங்கிக்குடுக்கணும்//

  அச்சச்சோ, மறந்துட்டார்போல இருக்குன்னு நீங்களா நெனச்சுக்கிட்டு ஞாபகப்படுத்தி பாருங்க,.. தங்கத்துக்கே தங்கமான்னு சமாளிபிகேஷன் வரும் :-))))))))

  ReplyDelete
 4. சுவாரஸ்யமும் ஹாஸ்யமும் கலந்த நடை!

  ரசனையான பதிவு!

  ReplyDelete
 5. //Balaji saravana said...

  எங்கள மாதிரி பேச்சுலருக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்ததுக்கு மிக்க நன்றி ;)//

  பின்னே, இதுகூட செய்யலன்னா எப்பிடி... :)

  நன்றி சரவணன்!

  ReplyDelete
 6. //vaarththai said...

  :)
  ROFL//

  வாங்க வார்த்தை :)

  முதல் வருகைக்கும் சிரிச்சு ரசிச்சதுக்கும் நன்றி!

  ReplyDelete
 7. //YOGA.S.Fr said...

  நீங்க ரொ!!!!!!!!!!!!!!ம்ப பாவம் சார்!இருந்தாலும்,தங்கம் வாங்கிறது இந்தக் காலத்துல நல்ல விஷயம் தானே,சார்???????????!!!!!!!//

  ரொம்ப நல்லதுதான் சார் :)

  ஆனா, பாக்கெட்ல இருந்த பணத்தையெல்லாம் துடைச்சு எடுத்திட்டா எப்படி சார்???

  முதன்முதல்ல வந்திருக்கீங்க...நன்றி யோகா!

  ReplyDelete
 8. //நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

  ம்ம்ம்ம்ம்ம் All in the game na!!!!!!ha haa....//

  :) வாங்க நித்திலம்...நன்றி!

  ReplyDelete
 9. கலக்கல் ,ஆனால் பாவமாத்தான் இருக்கு.சொல்லலாம்னால் பயத்துல காத்து தான் வருது.

  ReplyDelete
 10. தமிழ் கற்க வேண்டின் தங்கள் பதிவுகளைப் படித்தால் போதும் என்று புரிகிறது. இனி இத்தளத்தைப் பார்வை இடுவது முக்கிய வேலை. அருமையான் பதிவு..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ஹா ஹா :-))ஆனாலும் நாயகனோட தைரியத்த பாராட்டியே ஆகணுங்க.. (சும்மா தாங்க கலாட்டா பண்றேன்)
  மனைவி மனசு நோகாம நல்ல பாத்துக்கறார் .. அதெல்லாம் சரி..
  அடுத்த முறையாவது, உஷாரா அவருக்கு முதல்ல டிரஸ் வாங்கிட்டு....
  அப்புறம்...சேலை பாக்க போக சொல்லுங்க.... (எப்புடி ஏன் ஐடியா? )

  ReplyDelete
 12. //அமைதிச்சாரல் said...

  //சேலை துணிமணியோட, சின்னதா,தங்கத்துலயும் ஏதாவது வாங்கிக்குடுக்கணும்//

  அச்சச்சோ, மறந்துட்டார்போல இருக்குன்னு நீங்களா நெனச்சுக்கிட்டு ஞாபகப்படுத்தி பாருங்க,.. தங்கத்துக்கே தங்கமான்னு சமாளிபிகேஷன் வரும் :-))))))))//

  அட ஆமாங்க :) நீங்களும் அனுபவப்பட்டிருக்கீங்க போலிருக்குதே :)

  நன்றி சாரல்!

  ReplyDelete
 13. //ப்ரியமுடன் வசந்த் said...

  சுவாரஸ்யமும் ஹாஸ்யமும் கலந்த நடை!

  ரசனையான பதிவு!//

  வாங்க வசந்த்...நன்றி!

  ReplyDelete
 14. //asiya omar said...

  கலக்கல் ,ஆனால் பாவமாத்தான் இருக்கு.சொல்லலாம்னால் பயத்துல காத்து தான் வருது.//

  அது சரி :)

  நன்றி ஆசியா!

  ReplyDelete
 15. //ஆதிரா said...

  தமிழ் கற்க வேண்டின் தங்கள் பதிவுகளைப் படித்தால் போதும் என்று புரிகிறது. இனி இத்தளத்தைப் பார்வை இடுவது முக்கிய வேலை. அருமையான் பதிவு..வாழ்த்துக்கள்.//

  இது...இந்தப் பதிவுக்குப் போட்ட பின்னூட்டம் தானா???

  ஆனா,இனி, அடிக்கடி வரப்போவதற்கு என் அன்பும் நன்றிகளும் ஆதிரா :)

  ReplyDelete
 16. //Ananthi said...

  ஹா ஹா :-))ஆனாலும் நாயகனோட தைரியத்த பாராட்டியே ஆகணுங்க.. (சும்மா தாங்க கலாட்டா பண்றேன்)
  மனைவி மனசு நோகாம நல்ல பாத்துக்கறார் .. அதெல்லாம் சரி..
  அடுத்த முறையாவது, உஷாரா அவருக்கு முதல்ல டிரஸ் வாங்கிட்டு....
  அப்புறம்...சேலை பாக்க போக சொல்லுங்க.... (எப்புடி ஏன் ஐடியா? )//

  :) ஐடியா நல்லாருக்கு ஆனந்தி...

  ஆனா, அடுத்த தீபாவளிக்குள்ள ஓரளவுக்குத் தேறிடமாட்டாரா என்ன...:)

  ReplyDelete
 17. அழகிய நகைச்சுவைகள். பெண்களுக்கு இதுவே வேலையாகப் போய்விட்டது ;)

  ReplyDelete
 18. இப்படி மொத்தமா எல்லாப்பெண்களையும் குறைசொல்லக்கூடாது :)

  நன்றி ரங்கன்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails