Thursday, October 28, 2010

தக்காளிக்காக ஒரு தலாக்!

கொஞ்சநாள் முன்னாடி, ஷாப்பிங் மாலில் நடந்த விவாகரத்து ஒன்றைப் பற்றிப்பார்த்தோம். படிக்காதவங்க இங்க பாருங்க...

தக்காளிக்காக ஒருத்தர் தலாக் சொன்ன சம்பவம் பற்றி இன்றைய கல்ஃப் நியூஸ் பத்திரிகையில வந்திருக்குது. இதெல்லாம் நிஜமாவே பண்றாங்களா, இல்ல விளையாட்டுக்காகப் பண்றாங்களான்னுதான் விளங்கமாட்டேங்குது.

தங்கத்தோட விலையைமாதிரி தக்காளியோட விலையும் அவ்வப்போது ஏறிவருவது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். மாசம் ரெண்டாயிரம் ரியால் சம்பாதிக்கிற அந்த மனிதர், மூணு நாளுக்கொருதடவை ஆறுபேர் கொண்ட தன் குடும்பத்துக்கு, 40 ரியால் செல்வழித்து,ஒரு அட்டைப்பெட்டி நிறையத் தக்காளிகளைத் தன் மனைவி வாங்குவது தன்னுடைய சம்பாத்தியத்துக்குக் கட்டுப்படியாகாதுன்னு அக்கம்பக்கத்தினர் முன்னால் கத்திச் சண்டைபோட்டிருக்கிறார்.

சண்டை கைகலப்பாக, வச்சு வாழமுடியலேன்னா என்னை விவாகரத்து செய்துவிடு என்று மனைவியும் பதிலுக்குச் சொல்ல, பத்தே நிமிஷத்தில் அக்கம்பக்கத்துக்காரங்க முன்னாடியே முடிஞ்சுபோச்சு திருமண வாழ்க்கை. என்ன சொல்ல...இப்படியும் மனிதர்கள்!!!

விபரத்தை Gulf News ல் படிக்க, இங்கே கிளிக்குங்க...

16 comments:

 1. தலாக் செய்திகளாகவே உங்க கண்ணில படுதே!! ;-)))

  இது வெறுமே தக்காளிக்காக நடந்த தலாக்காக உங்களுக்குத் தெரிகிறது போல. எனக்கு, அவர்களின் பல நாள்(வருஷ) மனவேற்றுமை இந்தத் தக்காளிக்கூடையின் மூலம் வெடித்துத் தெறித்துள்ளதாகத் தெரிகிறது.

  அதுபோகட்டும், 2000 ரியால் மாச வருமானத்துல, 400 திர்ஹத்துக்கு தக்காளி மட்டுமே வாங்கி என்னப் பண்ணுவாங்களோ அந்தம்மா? போன பதிவுல ஒரு புள்ளப்பூச்சியப் பத்தி எழுதுனீங்களே, அது இவருதானோ? :-)))))

  ReplyDelete
 2. //தலாக் செய்திகளாகவே உங்க கண்ணில படுதே!! ;-)))//

  அட ஆமால்ல...

  எழுதியிருக்கிற கிட்டத்தட்ட நூத்தி இருவத்தஞ்சு பதிவுகள்ல மூணு விவாகரத்துப்பத்தி...அதுவும் இந்த ஒரே மாசத்துல, ஆச்சர்யம்தான் :)

  //இது வெறுமே தக்காளிக்காக நடந்த தலாக்காக உங்களுக்குத் தெரிகிறது போல. எனக்கு, அவர்களின் பல நாள்(வருஷ) மனவேற்றுமை இந்தத் தக்காளிக்கூடையின் மூலம் வெடித்துத் தெறித்துள்ளதாகத் தெரிகிறது.//

  இது அவங்க வாழ்க்கை...அதை ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலேயிருந்து நாம ஆராய்ச்சி பண்ணி என்ன உண்மையைச் சொல்லப்போறோம்னு, பத்திரிகையில இருக்கிறதை அப்படியே எழுதியிருக்கேன் ஹுசைனம்மா. கல்ஃப் நியூஸ் பாத்தீங்கல்ல?


  //அதுபோகட்டும், 2000 ரியால் மாச வருமானத்துல, 400 திர்ஹத்துக்கு தக்காளி மட்டுமே வாங்கி என்னப் பண்ணுவாங்களோ அந்தம்மா? போன பதிவுல ஒரு புள்ளப்பூச்சியப் பத்தி எழுதுனீங்களே, அது இவருதானோ? :-))))) //

  அவரு அந்தப் புள்ளப்பூச்சியாகவும் இருக்கலாம்...அந்தம்மா தக்காளியை வச்சு சமையல்செய்வதில் எக்ஸ்பர்ட்டாகவும், அவங்க புள்ளைங்க அதை ரசிச்சுச் சாப்பிடுவதில் எக்ஸ்பர்ட்டுகளாகவும் இருக்கலாம். யார் கண்டது? :)

  எதுக்கும், மழைமேகத்துல இந்த மாதம் விவாகரத்துப் பற்றிய பதிவுகள் வரும் மாதம்னு அறிவிச்சிரட்டுமா? ;)

  ReplyDelete
 3. தக்காளிக்காக விவாகரத்தா?!
  என்ன சொல்றதுன்னே தெரில :(

  ReplyDelete
 4. nalla vealai india pondra nalla oluka kattupadu pasam anbu innum eththanaio, eththanio mathangal ulla nam indiavil beedikkaha, saarayathukkaha, innum eththanio, kaha kaha, (paththirikkai parungal) kolaihal nadappathupol nadakkamal thalakkado mudinthuvittathu athuvarai nallathuthan,ithanal iruvarukkum nimmathi, namakku aachariam, namma indiapol thakkali virpavanodu kallathodarbu,panaththai veenaakuhiral ennum ithanaio solli antha pennai kutravaliaha ninaithu kolai seiyamal saudi sattapadi thalak solli pirinthathuku avarhalai valthuhiren. by sulthan

  ReplyDelete
 5. //Balaji saravana said...

  தக்காளிக்காக விவாகரத்தா?!
  என்ன சொல்றதுன்னே தெரில :(//

  வாங்க சரவணன்...எனக்கும்தான் :)

  ReplyDelete
 6. //nalla vealai india pondra nalla oluka kattupadu pasam anbu innum eththanaio, eththanio mathangal ulla nam indiavil beedikkaha, saarayathukkaha, innum eththanio, kaha kaha, (paththirikkai parungal) kolaihal nadappathupol nadakkamal thalakkado mudinthuvittathu athuvarai nallathuthan,ithanal iruvarukkum nimmathi, namakku aachariam,//

  இதேமாதிரி, நம்ம ஊர்ப்பத்திரிகையில செய்தி வந்திருந்தா அதையும் நான் கட்டாயம் போட்டிருப்பேன் சுல்தான். நம்ம ஊர்ல நடந்தா நல்லது அடுத்த ஊர்ல நடந்தா ஆச்சர்யம்னெல்லாம் நினைக்கிற பாகுபாடு எனக்குக் கிடையாது.என்னைப்பொருத்தவரைக்கும் ஜஸ்ட் இது ஒரு செய்தி...

  //namma indiapol thakkali virpavanodu kallathodarbu,panaththai veenaakuhiral ennum ithanaio solli antha pennai kutravaliaha ninaithu kolai seiyamal saudi sattapadi thalak solli pirinthathuku avarhalai valthuhiren. by sulthan //

  முடிஞ்சா,என்னோட வாழ்த்தையும் அவங்களுக்குச் சொல்லிடுங்க சுல்தான் :)

  இதையே தலாக்ன்னு போடாம தக்காளிக்காக விவாகரத்துன்னு போட்டு, ஊரைப் பேரை மாத்தி எழுதியிருந்தா ரசிச்சிட்டுப் போயிருப்பீங்க...இல்லே?

  ReplyDelete
 7. வேடிக்கை மனிதர்கள்.

  ReplyDelete
 8. கல்ஃப் நியூஸ் படிச்சு நாளாச்சு.
  பல நாள் மனஸ்தாபத்தைத் தக்காளி வந்து தீர்த்து வைத்துவிட்டது போல.
  மனசுஒன்றாமல் கூடி இருப்பதைவிட பிரிந்து இருப்பது நல்லது.

  ReplyDelete
 9. //V.Radhakrishnan said...

  வேடிக்கை மனிதர்கள்.//

  :) வாங்க ரங்கன்...நன்றி!

  ReplyDelete
 10. //வல்லிசிம்ஹன் said...

  கல்ஃப் நியூஸ் படிச்சு நாளாச்சு.
  பல நாள் மனஸ்தாபத்தைத் தக்காளி வந்து தீர்த்து வைத்துவிட்டது போல.
  மனசுஒன்றாமல் கூடி இருப்பதைவிட பிரிந்து இருப்பது நல்லது.//

  சரிதான் வல்லிம்மா... நன்றிகள்!

  ReplyDelete
 11. இப்படி எல்லாம் மனிதர்கள்.

  துண்டுக்காகிதம் தக்காளி....இன்னும் என்னெல்லாமோ....

  ReplyDelete
 12. அட தக்காளிக்காகன்னாகூட பரவாயில்லை. ஒண்ணுமே இல்லாமல் பாவம் இந்த தம்பதிகள். சிரிக்கிறதா ... அழுகுறதான்னு தெரியலை!!
  இது இன்று இந்துவில் வந்த செய்தி

  ReplyDelete
 13. தலாக் எனபது இவர்களுக்கு விளையாட்டாகி விட்டது....தலாக் சொல்வது போனிலோ எஸ் எம் எஸ் இலோ முடிந்து போகிற காரியமல்ல..இஸ்லாத்த்தைப் பற்றி அறியாதவர்களும் விளங்காதவர்களுமே இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்..தலாக் சொல்வதற்கு முன்பு ஏகப்பட்ட சட்ட திட்டங்கள் இஸ்லாத்தில் உள்ளன..அதை முழுமையாக அறிந்தவர்கள் தலாக் செய்யாமல் மனைவியுடன் ஒத்துபோய் வாழ்வதே நல்லது என்கிற முடிவுக்கு வருகிறார்கள்..
  நீங்கள் சொன்ன சம்பவம்போல் கிறுக்கர்கள் தலாக்கை உபயோகப் படுத்துவதால்தான் முஸ்லிம் அல்லாத நபர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய புரிதல்கள் இல்லாமல் போய் விடுகிறது.

  ReplyDelete
 14. //மாதேவி said...

  இப்படி எல்லாம் மனிதர்கள்.

  துண்டுக்காகிதம் தக்காளி....இன்னும் என்னெல்லாமோ....//

  மனசுக்குப் பிடிக்கலேன்னா,எல்லாமே தப்பாத்தான் தெரியும்...
  நன்றிகள் மாதேவி!

  ReplyDelete
 15. //தருமி said...

  அட தக்காளிக்காகன்னாகூட பரவாயில்லை. ஒண்ணுமே இல்லாமல் பாவம் இந்த தம்பதிகள். சிரிக்கிறதா ... அழுகுறதான்னு தெரியலை!!
  இது இன்று இந்துவில் வந்த செய்தி//

  என்ன சொல்லன்னு எனக்குத் தெரியல :(

  பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி தருமி ஐயா!

  ReplyDelete
 16. //மர்மயோகி said...

  தலாக் எனபது இவர்களுக்கு விளையாட்டாகி விட்டது....தலாக் சொல்வது போனிலோ எஸ் எம் எஸ் இலோ முடிந்து போகிற காரியமல்ல..இஸ்லாத்த்தைப் பற்றி அறியாதவர்களும் விளங்காதவர்களுமே இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்..தலாக் சொல்வதற்கு முன்பு ஏகப்பட்ட சட்ட திட்டங்கள் இஸ்லாத்தில் உள்ளன..அதை முழுமையாக அறிந்தவர்கள் தலாக் செய்யாமல் மனைவியுடன் ஒத்துபோய் வாழ்வதே நல்லது என்கிற முடிவுக்கு வருகிறார்கள்..
  நீங்கள் சொன்ன சம்பவம்போல் கிறுக்கர்கள் தலாக்கை உபயோகப் படுத்துவதால்தான் முஸ்லிம் அல்லாத நபர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய புரிதல்கள் இல்லாமல் போய் விடுகிறது.//

  வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றிகள் மர்மயோகி அவர்களே!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails