Sunday, October 31, 2010

தொடரும் குழந்தைகள் கடத்தல்!


படம்: நன்றி தினமலர்


பஸ்ஸில் போகும்போது மூன்றுவயதுப் பெண்குழந்தை கடத்தல், வாசலில் விளையாடிக்கிட்டிருந்த இரண்டுவயதுக் குழந்தை கடத்தல், புதையலுக்குப் பலியிடுவதற்காகப் பெண் குழந்தை கடத்தல், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக் குழந்தைகள் கடத்தல்ன்னு மாறிமாறிச் செய்திகளைப் பார்க்கிறோம் செய்தித்தாள்களில்.

நேற்றைய செய்தியாக, கோவையில் துணிக்கடை அதிபரொருவரின் இரண்டு குழந்தைகளைக் கடத்தி வாய்க்காலில் தள்ளிவிட்டுக் கொடூரமாய்க் கொன்றிருக்கிறான் அவர்கள் பள்ளிக்குச்செல்லும் தனியார் வாகனத்தில் பணிபுரிந்த வாகன ஓட்டுனர் ஒருவன்.

மேலே படத்தில் காணப்படுகிற பத்துவயதுப் பெண்குழந்தையும், ஏழுவயதுப் பையனும் சந்தில் இருக்கிற வீட்டிலிருந்து, மெயின் ரோட்டுக்குவந்து, வழக்கமாகப் பள்ளிக்குச்செல்லும் அந்த வாகனத்துக்குக் காத்திருந்தபோது, அந்த வாகனத்தைப்போலவே இன்னொரு வாகனத்தைக்கொண்டுவந்து, பிள்ளைகளை அதில் ஏற்றிச்சென்று கொலைசெய்திருக்கிறான் அந்தக் கொடூரன்.

தொடர்ச்சியாக இதுபோல் எத்தனையோ நடந்தும்,இனிமேல் இதுபோல் சம்பவங்கள் நிகழாத அளவுக்குப் பெரிய தண்டனைகளோ,எச்சரிக்கை முயற்சிகளோ எடுத்தமாதிரித் தெரியவில்லை. இதுமாதிரிக் கொடூர சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரபுநாடுகளில் வழங்கப்படுவதுபோல, உடனடியாகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் குற்றங்களின் சதவீதம் குறையலாம்.

அதுமட்டுமன்றி, பிள்ளைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர் இன்னும் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. பிள்ளைகளை வீட்டிலிருந்து அனுப்புவதோடு கடமை முடிந்தது என்று எண்ணாமல், பிள்ளைகள் சரியான வாகனத்தில் ஏறுகிறார்களா என்றும் பள்ளிசென்று பத்திரமாய்ச்சேர்ந்தார்களா என்றும் கவனிக்கவேண்டியது அவசியம்.அதுமட்டுமின்றி, இதுமாதிரி சம்பவங்கள் நேரக்கூடுமென்ற எச்சரிக்கை உணர்வையும், அப்படிப்பட்ட சமயங்களில் செயலாற்றவேண்டிய விதம்பற்றியும் அவர்களுக்கு விளங்கவைத்தல் அவசியம்.

வாகனத்தின் பதிவு எண், வாகன ஓட்டியின் செல்ஃபோன் நம்பர் இதையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டால், அதை அவ்வப்போது அதை பயன்படுத்திக்கொள்ளமுடியும். இதையெல்லாம் விட, தனியார் வாகனங்களைத் தவிர்த்து, பள்ளி வாகனத்தில்மட்டுமே பிள்ளைகளை அனுப்புவது அதைவிடச் சிறந்தது.

நம் எதிர்கால சந்ததிக்கு எதைச் சேர்த்துவைக்கிறோமோ இல்லையோ, அவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலையும், பத்திரமான வாழ்க்கையையும் ஏற்படுத்தித்தருவது பெற்றோராகிய நம் தலையாய கடமை.அதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் இன்றே செய்து எதிர்காலத்தில் இதுமாதிரி சம்பவங்கள் நிகழாமல் பாதுகாப்பது மிகமிக அவசியம்.

6 comments:

 1. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்

  ReplyDelete
 2. இதில் பெற்றோர் கவனைக்குறை எனபதை விட மனித மனம் குழந்தகளைக் கூட கொடூரமாக கொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பணக்காரர்களிடம் தேவைக்கதிகமான வெறுப்பு மனபான்மை கொள்ளும் சூழல் வளர்த்துவருவதும், உழப்பை நம்பாமல் சடுதியில் எதையும் பெற வேண்டும் என்ற மோகவுமே!!!

  ReplyDelete
 3. //அரபுநாடுகளில் வழங்கப்படுவதுபோல, உடனடியாகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் குற்றங்களின் சதவீதம் குறையலாம்.//

  உண்மை தான் சகோ.. ஆனா இங்க தான் மனித உரிமை மீறல் அப்படின்னு வெத்து கோசம் போடுவாங்களே.. :(

  ReplyDelete
 4. //ers said...

  உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்//

  நன்றி ers!

  ReplyDelete
 5. //J.P Josephine Baba said...

  இதில் பெற்றோர் கவனைக்குறை எனபதை விட மனித மனம் குழந்தகளைக் கூட கொடூரமாக கொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பணக்காரர்களிடம் தேவைக்கதிகமான வெறுப்பு மனபான்மை கொள்ளும் சூழல் வளர்த்துவருவதும், உழப்பை நம்பாமல் சடுதியில் எதையும் பெற வேண்டும் என்ற மோகவுமே!!!//

  நிஜம்தான் ஜோஸஃபின்...வருகைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 6. //Balaji saravana said...

  //அரபுநாடுகளில் வழங்கப்படுவதுபோல, உடனடியாகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் குற்றங்களின் சதவீதம் குறையலாம்.//

  உண்மை தான் சகோ.. ஆனா இங்க தான் மனித உரிமை மீறல் அப்படின்னு வெத்து கோசம் போடுவாங்களே.. :(//

  நிஜம்தான் சரவணன்...மக்கள் மாறியே ஆகவேண்டிய நேரம் இது.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails