Wednesday, November 3, 2010

யாருக்கு வேணும் இந்த ஈயம் பித்தளையெல்லாம்???


முதலாவதா நான் பண்ணின தப்பு என்னன்னு சொல்லியே ஆகணும்...

உள்ளூர்ல, அதாவது துபாயில,லேண்ட்லைன்ல ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டா அது முழுக்க முழுக்க ஃப்ரீங்கிறதால, ஆள் அகப்பட்டா அரைமணி நேரத்திலிருந்து ஆறுமணி நேரம்வரைக்கும்கூடப் பேசுவாங்க நம்ம மக்கள். அப்படியொரு பிறவிகிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்ட சம்பவம் இது.

வேற ஒண்ணும் குத்தமாச் சொல்லலீங்க...உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்ன்னு சொன்னேன். அவ்வளவுதான். அதுக்கு அந்த அம்மா, நாங்கல்லாம் தீபாவளி கொண்டாட மாட்டோம். அது இன்னார் கொண்டுவந்து,  கொண்டாடுகிற பண்டிகை...தையில தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவோம்,போகியில பழசைக் கழிச்சு, பொங்கலும் கொண்டாடுவோம். மத்தபடி இந்தப் பண்டிகையெல்லாம் எங்களுக்குக் கிடையாதுன்னு அவங்க கருத்தைச் சொன்னதோடு விட்டிருக்கலாம் அவங்க.

ஆமா, நீங்க ஏன் இதையெல்லாம் கொண்டாடுறீங்கன்னு கேட்டதுதான் தாமதம், எனக்கு எங்கேயிருந்தோ வந்திருச்சு எரிச்சல். அட, நீங்க எந்த விதமாவும் கொண்டாடுங்க... ஆனா, மனுஷனுக்கு மனுஷன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிற எல்லாப் பண்டிகையும் நான் கொண்டாடுவேன்னு சட்டுன்னு சொல்லிட்டுப் பட்டுன்னு ஃபோனை வச்சிட்டேன்.

அட, உட்டாங்களா அவங்க? மறுபடியும் ஃபோனைப்போட்டு, இவ்வளவு நாள் கொண்டாடுனீங்க, சரி...இனிமே வேண்டாம், இதெல்லாம் அந்த ஈயத்தோட ஆளுமை என்று அவங்க பாணியில் எடுத்துவிட, எந்தச் சுவற்றில் முட்டலாம்னு இருந்திச்சு எனக்கு. நம்ம நாட்டு எல்லையைக்கடந்து, வெளியே வந்துட்டா, அவரவரின் சுயம் தொலைந்து, இந்தியன் என்ற ஒரே இயம் இருக்கிறதைத்தான் அதிகமான மக்களிடம் பார்க்கமுடியும்.

ரம்ஜானுக்குப் பிரியாணி சாப்பிடக் கூப்பிட்டவங்க, தீபாவளிக்கு நம்ம வீட்டு அதிரசத்தையும், முறுக்கையும் ஆசையாச் சாப்பிடுவாங்க. அதுமாதிரி, கிறிஸ்துமசையும், பொங்கலையும் கூட்டமாய்ச்சேர்ந்து கடற்கரையில் கொண்டாடும் பக்குவமும்கூட இங்கிருக்கிற மக்களுக்கு இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, இதுமாதிரி ஒண்ணுரெண்டுபேரோட கலாட்டாவைப் பார்க்கும்போது, நாடு கடத்தியும் நல்லபுத்தி வரலியே இவங்களுக்கு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

பொதுவாக, நம்ம ஊர்ல கூட, ஓரளவுக்கு கல்வியறிவு வள்ர்ந்தபின்னால், முன்னமாதிரி, ஜாதி வித்தியாசம் பார்த்து, வாசல்ல நிக்கவச்சுப் பேசி அனுப்புறதோ, பின் வாசல்ல கூப்பிட்டுப் பழங்கஞ்சி ஊற்றுவதோகூட இப்போதெல்லாம் இல்லையென்றே நினைக்கிறேன். மொதல்ல யார் என்ன ஜாதியின்னு, பள்ளிக்கூடத்துல கேட்கும்போது மட்டுமே தெரியும்னு நினைக்கிறேன். அதுமட்டுமன்றி, காதல் கல்யாணங்கள் அதிகரித்திருப்பதால் ஜாதி வித்தியாசங்கள் முன்னைவிடக் குறைந்திருக்கிறதென்றே தோன்றுகிறது.

என்னோட வீட்டுச் சாப்பாட்டை நான் சாப்பிடுறேன். என்னோட கொள்கைகளை நான் கடைப்பிடிக்கிறேன்.என்னுடைய விருப்பங்களை யார்மேலயும் திணிச்சதில்லை. அதுக்காக அடுத்தவங்க கொள்கைகளை நான் ஏத்துக்கணும்னு எதிர்பார்க்கிறது தவறில்லையா?

இதையெல்லாம் யோசிக்காம, நான் இன்னார் இது என் இயம் என்றெல்லாம் பேசுவதற்குமுன், எல்லாருக்கும் பொதுவா மனித நேயம்னு ஒண்ணு இருக்கு.. .அதைக் கடைப்பிடிச்சாலே எல்லா ஏற்றத்தாழ்வும் மறைஞ்சுபோயிடும் என்பதை எல்லாரும் நினைவில் வச்சுக்கணும். இதையெல்லாம் விட்டுட்டு, அகப்பட்டவங்க மேலேயெல்லாம் ஈயத்தைக் காய்ச்சி ஊத்தினா, அப்புறம்...ஆத்திரம்தான் மிஞ்சும்.

எல்லாருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!! (( வேணும்ங்கிறவங்க எடுத்துக்கங்க  :) ))

27 comments:

 1. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நன்றி சங்கவி... என்னோட வாழ்த்தையும் எடுத்துக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன் :)

  ReplyDelete
 3. நான் எடுத்துக்கிட்டேன் சுந்தரா.

  சிலசமயம் எனக்கும் இப்படியெல்லாம் தோணிப் போகுது. முதல்லே மனுசனா இருக்கக் கத்துக்கலை பாருங்க இவுங்கன்னு.

  ஒவ்வொரு வெளிநாட்டிலும் நம் மக்கள் தொகைக்கேத்தபடி ரெண்டு, மூணு, அஞ்சுன்ற எண்ணிக்கையில் இவுங்க இருக்காங்க.

  போயிட்டுப் போகுது. விடுங்க.


  ஹேப்பி தீபாவளி.

  ReplyDelete
 4. தீபாவளி வாழ்த்துக்கள் சுந்தரா..

  ReplyDelete
 5. ஹா ஹா! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. //நம்ம நாட்டு எல்லையைக்கடந்து, வெளியே வந்துட்டா, அவரவரின் சுயம் தொலைந்து, இந்தியன் என்ற ஒரே இயம் இருக்கிறதைத்தான் அதிகமான மக்களிடம் பார்க்கமுடியும். //

  இது நல்லாயிருக்கே! ஆனால் நான் அதையும் தாண்டி:)

  ReplyDelete
 7. சுந்தரா! சரவெடிப் பதிவு.
  மனசிலிருந்ததைத் தைரியமா சொல்லவும்
  ஒரு தெளிவு வேணும்.
  மத்தவங்களைத் தொந்தரவு செய்யாத எந்தக் கொண்டாட்டமும் நல்லதுதான்.நல்ல வேளையாக நமக்கு நல்ல நட்புகள் கிடைப்பதால் பகிர்தல் சுலபமாகிறது.
  உங்களுக்கும் இன்னும் எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. :))
  இந்த ஈயக்கொசு தொல்லை அங்கயுமா ?

  ReplyDelete
 9. ////நம்ம நாட்டு எல்லையைக்கடந்து, வெளியே வந்துட்டா, அவரவரின் சுயம் தொலைந்து, இந்தியன் என்ற ஒரே இயம் இருக்கிறதைத்தான் அதிகமான மக்களிடம் பார்க்கமுடியும். //

  உண்மைதான் .
  எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்...!! :-))

  ReplyDelete
 10. //துளசி கோபால் said...

  நான் எடுத்துக்கிட்டேன் சுந்தரா.

  சிலசமயம் எனக்கும் இப்படியெல்லாம் தோணிப் போகுது. முதல்லே மனுசனா இருக்கக் கத்துக்கலை பாருங்க இவுங்கன்னு.

  ஒவ்வொரு வெளிநாட்டிலும் நம் மக்கள் தொகைக்கேத்தபடி ரெண்டு, மூணு, அஞ்சுன்ற எண்ணிக்கையில் இவுங்க இருக்காங்க.

  போயிட்டுப் போகுது. விடுங்க.


  ஹேப்பி தீபாவளி.//

  வாங்க துளசி அம்மா...மிக்க மகிழ்ச்சி:)

  //போயிட்டுப் போகுது. விடுங்க.//

  'ங்க' வை மட்டும் எடுத்துட்டு வாசிச்சா, எங்கம்மா சொல்ற மாதிரியே இருக்குது. எங்கம்மாவும் உங்களைமாதிரியே டீச்சர்தான்(டீச்சர்களின் பாணி தனிதான் :)

  ReplyDelete
 11. //அமைதிச்சாரல் said...

  தீபாவளி வாழ்த்துக்கள் சுந்தரா..//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சாரல்!

  ReplyDelete
 12. //V.Radhakrishnan said...

  ஹா ஹா! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.//

  உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ரங்கன் :)

  ReplyDelete
 13. //ராஜ நடராஜன் said...

  //நம்ம நாட்டு எல்லையைக்கடந்து, வெளியே வந்துட்டா, அவரவரின் சுயம் தொலைந்து, இந்தியன் என்ற ஒரே இயம் இருக்கிறதைத்தான் அதிகமான மக்களிடம் பார்க்கமுடியும். //

  இது நல்லாயிருக்கே! ஆனால் நான் அதையும் தாண்டி:)//

  ரொம்ப நல்லது ராஜநடராஜன் :)

  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 14. //வல்லிசிம்ஹன் said...

  சுந்தரா! சரவெடிப் பதிவு.
  மனசிலிருந்ததைத் தைரியமா சொல்லவும்
  ஒரு தெளிவு வேணும்.
  மத்தவங்களைத் தொந்தரவு செய்யாத எந்தக் கொண்டாட்டமும் நல்லதுதான்.நல்ல வேளையாக நமக்கு நல்ல நட்புகள் கிடைப்பதால் பகிர்தல் சுலபமாகிறது.
  உங்களுக்கும் இன்னும் எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.//

  நன்றி வல்லிம்மா :)

  உங்களுக்கும் என் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. //விஜி said...

  :))
  இந்த ஈயக்கொசு தொல்லை அங்கயுமா ?//

  என்ன செய்ய விஜி :(
  இந்தக் கொசுக்களுக்கு எல்லையே கிடையாதுபோலிருக்குதே.

  ReplyDelete
 16. //ஜெய்லானி said...

  ////நம்ம நாட்டு எல்லையைக்கடந்து, வெளியே வந்துட்டா, அவரவரின் சுயம் தொலைந்து, இந்தியன் என்ற ஒரே இயம் இருக்கிறதைத்தான் அதிகமான மக்களிடம் பார்க்கமுடியும். //

  உண்மைதான் .
  எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்...!! :-))//

  வாங்க ஜெய்லானி :)

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 17. ///என்னோட வீட்டுச் சாப்பாட்டை நான் சாப்பிடுறேன். என்னோட கொள்கைகளை நான் கடைப்பிடிக்கிறேன்.என்னுடைய விருப்பங்களை யார்மேலயும் திணிச்சதில்லை. அதுக்காக அடுத்தவங்க கொள்கைகளை நான் ஏத்துக்கணும்னு எதிர்பார்க்கிறது தவறில்லையா?////

  ஹா ஹா ஹா.. ரொம்ப கரெக்ட்...!! :-))))

  இந்த மாதிரி சில தத்துவ சிகாமணிக கிட்ட நானும் மாட்டி இருக்கேன்..

  நிறைய பேர் அடுத்தவர் என்ன நினப்பாங்கன்ற எண்ணமே இல்லாம...

  நம்ம காதுல ரத்தம் வர வரைக்கும் அட்வைஸ் பண்ணுவாங்க.. நம்ம கேட்டோமன்னு யோசிச்சு முடிக்கறதுக்குள்ள மூணு மணி நேரம் ஆகி போகும்.. ஸூஊஊஊ.... இதெல்லாம் திருந்தாத ஜென்மங்க.

  உங்களுக்கு என் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 18. //இந்த மாதிரி சில தத்துவ சிகாமணிக கிட்ட நானும் மாட்டி இருக்கேன்..//

  :) வாங்க ஆனந்தி, நீங்களுமா??!

  உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. வாழ்த்திற்கு நன்றிங்க.. :-))

  ஆமா ஆமா.. :D

  ReplyDelete
 20. enna enna aassu, rompp aathangka pathivu

  ReplyDelete
 21. விடுங்க நாகரீகம் இல்லாத மனுஷங்க!

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. தனபால்November 4, 2010 at 3:44 PM

  நல்ல பதிவு.

  ///உள்ளூர்ல, அதாவது துபாயில,லேண்ட்லைன்ல ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டா அது முழுக்க முழுக்க ஃப்ரீங்கிறதால,///

  என்னது !!!!!!!!!!!!!!துபாயில லேண்ட்லைன்ல ஃப்ரீயாவே பேசலாமா??? ஆச்சர்யமா இருக்கே. எப்படி அவங்களுக்கெல்லாம் கட்டுபடி ஆகுதோ ???

  அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. //Jaleela Kamal said...

  vassu veLasittiingka//

  வாங்க ஜலீலா :) நன்றி!

  ReplyDelete
 24. //kavisiva said...

  விடுங்க நாகரீகம் இல்லாத மனுஷங்க!

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!//

  வாங்க கவிசிவா :)

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 25. //தனபால் said...

  நல்ல பதிவு.

  ///உள்ளூர்ல, அதாவது துபாயில,லேண்ட்லைன்ல ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டா அது முழுக்க முழுக்க ஃப்ரீங்கிறதால,///

  என்னது !!!!!!!!!!!!!!துபாயில லேண்ட்லைன்ல ஃப்ரீயாவே பேசலாமா??? ஆச்சர்யமா இருக்கே. எப்படி அவங்களுக்கெல்லாம் கட்டுபடி ஆகுதோ ???

  அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

  ஆமாங்க, இங்க லேண்ட்லைன் டூ லேண்ட்லைன் ஃப்ரீதான்...

  வருகைக்கு மிக்க நன்றி தனபால்!

  ReplyDelete
 26. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails