Monday, November 29, 2010

அவங்களுக்கு.....தலைக்கு "மேல" வேலையிருக்குதாம்!!!



என் தோழியோட அப்பா அம்மாவுக்கு எழுவது வயசுக்குமேல் இருக்கும். அவங்களுக்குக் கல்யாணமான புதுசில் அவங்களோட ஓய்வு நேரத்தை எப்படிக் கழிச்சாங்கன்னு அவங்க சொல்ல அத்தனைபேரும் விழுந்துவிழுந்து சிரிச்சோம்...

கல்யாணமான புதுசுல, அதை வாங்கித்தாங்க இதை வாங்கித்தாங்கன்னு அவுகள ஒருநாளும் பிடுங்கி எடுத்ததில்ல...ஆனா,அவுக தலையிலிருக்கிற வெள்ளை முடிகளை ஒண்ணொண்ணாத் தேடித்தேடிப் பிடுங்கியெடுப்பேன்" என்று சொல்லி வெள்ளையாச் சிரிச்சாங்க என் தோழியின் அம்மா.

அப்பா,உங்களுக்கு சின்ன வயசிலயே அவ்வளவு வெள்ளை முடியா இருக்கும் என்று நான் கேட்க, "அதிகமா இருந்தாத்தான் அப்புடியே விட்டிருப்பேனே...ஆனா அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கிறதைத் தேடிப் பிடுங்குறேன்னு சொல்லி, ஆறேழு வருஷத்துல தேடினாக்கூட கறுப்பு முடி கிடைக்காதுங்கிற அளவுக்கு ஆக்கிட்டா உங்கம்மா என்று சொல்லி, குறும்பாகச் சிரிச்சாங்க தோழியின் அப்பா.

இருக்கிறதைப் பிடுங்கியெடுத்தா, இன்னும் அதிகமாகும்னு அப்ப தெரியல...இப்பத்தான் தெரியுதுன்னு சொல்லி தன் கணவரைப்பார்த்துச் சிரிச்சாங்க தோழியின் அம்மா.

பத்துவருஷத்துக்குமேலிருக்கும்...அப்போ,நான் துபாய்க்கு வந்த புதுசு. தோழிகூட வெளியே போனபோது, கண்ணில் பட்ட அந்தக் காட்சியில் அதிர்ந்துபோய்விட்டேன். "அச்சச்சோ, அங்க பாருங்களேன்...அந்தப்பொண்ணுக்கு தலையில ஏதோ பெரிய அடி பட்டிருக்குன்னு நினைக்கிறேன். சுத்திக் கட்டுபோட்டிருக்கு பாருங்க..." என்று நான் பதறிப்போய்ச்சொல்ல, பக்கத்திலிருந்த என் தோழி பதற்றமே இல்லாம சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

என்னடா இது, கொஞ்சங்கூட வருத்தப்படாம சிரிக்கிறாங்களேன்னு பார்த்தா, "ஐயோ, இது அடியுமில்லை, காயமுமில்லை...அவங்க, பார்லர்ல போயி,தலைக்கு ஹென்னா போட்டிருக்காங்க. அதனால தலையைச் சுத்தி அது வழியாம 'பேக்' பண்ணியிருக்காங்க என்று சொல்ல, மறுபடியும் அந்த வித்தையைத் திரும்பிநின்று பார்த்தேன்.

வெள்ளை முடியை மறைக்க வகை வகையா ஹேர்டை உபயோகிச்சு இப்ப டை அடிக்கிற அளவுக்குக்கூட முடியில்லாமப்போச்சு என்று வருத்தப்படுறவங்க அநேகம்பேரை இப்ப பார்க்கமுடிகிறது.ரஜினி கூட ஒரு நிகழ்ச்சியில சொன்னார், ஒவ்வொரு ஹேர் டையா மாத்திமாத்தி அடிச்சுப்பார்த்து, கடைசியில நமக்கு ஹேர் டை ஒத்துக்கலேன்னு தெரிஞ்சப்ப, தலைமுடியில பாதி போயிருச்சுன்னு.


என் பெரியம்மாவோட கதையும் அதுமாதிரிதான்...லேசா நரை தெரியிறப்போ, கண்மையைத் தடவி காப்பாத்திக்கிட்டிருந்தேன். அப்புறம் மருதாணியைத் தடவுன்னு சொன்னாங்க. மருதாணி தடவிக்கிட்டா மறுநாளே ஜலதோஷம் பிடிச்சுக்கிட, வைத்தியம் பாத்துக்கிட்டு வருத்தத்தோட இருந்தப்ப,செயற்கையாக் கிடைக்கிற கலர் பத்திச் சொன்னாங்க. அடுத்ததா அதை அடிச்சுக்க ஆரம்பிச்சேன். விட்டேனாபார்ன்னு வந்துசேர்ந்திச்சு அலர்ஜி.அத்தோட முடியும் குறைய ஆரம்பிச்சிருச்சு.

அத்தோட விட்டேன் அத்தனை முயற்சியையும். இப்பப்பாரு, மாசத்துக்கொருதடவை கலர் பண்ணிக்கிட்டு உங்க பெரியப்பா சின்னப்பையன் மாதிரி இருக்கார் நான் அவருக்கு அக்கா மாதிரி இருக்கேன் என்று ஆதங்கத்தோட அலுத்துக்குவாங்க அவங்க.

அலுத்துக்காதீங்க பெரியம்மா... முதுமையும் நரையும்கூட அழகுதான். அது உங்க அனுபவத்தோட வெளிப்பாடு. அன்னை தெரசாவும் அழகுதான், அப்துல்கலாமும் அழகுதான். ஆனா, அவங்கல்லாம் டை அடிச்சோ மேக்கப் போட்டோ அவங்க அழகை வெளிப்படுத்திக்கல. அவங்களோட அன்பாலயும் அறிவாலயும்தான் அழகாத் தெரியிறாங்க.
அதுமாதிரி, நம்ம அன்பு,பண்பு, அறிவு இதைவச்சு நம்ம அழகை வெளிப்படுத்திக்கிட்டாப்போதும்னு அவங்ககிட்ட ஆறுதலாச் சொல்லிட்டுவந்தேன்.

ஆனாலும், முன்னால தெரியிற ஒண்ணுரெண்டு நரைமுடியை என்னசெய்யலாம்னு கண்ணாடி என்னைக் கேட்டுக்கிட்டே இருக்குது. என்ன சொல்லட்டும்???

12 comments:

  1. //அவங்களோட அன்பாலயும் அறிவாலயும்தான் அழகாத் தெரியிறாங்க.//

    ம்ம். சரியே :)!

    //ஆனாலும், முன்னால தெரியிற ஒண்ணுரெண்டு நரைமுடியை என்னசெய்யலாம்னு கண்ணாடி என்னைக் கேட்டுக்கிட்டே இருக்குது. என்ன சொல்லட்டும்???//

    :))!

    அருமையான பதிவு சுந்தரா!!

    ReplyDelete
  2. இப்பப்பாரு, மாசத்துக்கொருதடவை கலர் பண்ணிக்கிட்டு உங்க பெரியப்பா சின்னப்பையன் மாதிரி இருக்கார் நான் அவருக்கு அக்கா மாதிரி இருக்கேன் என்று ஆதங்கத்தோட அலுத்துக்குவாங்க அவங்க.

    ...... :-) ரசித்து கொண்டே அலுத்துக்கிறது என்பது இதுதானோ? அழகு.

    ReplyDelete
  3. முன்னால தெரியிற ஒண்ணுரெண்டு நரைமுடியை என்னசெய்யலாம்னு கண்ணாடி என்னைக் கேட்டுக்கிட்டே இருக்குது. என்ன சொல்லட்டும்???

    அப்படியே விட்டுவிடுங்க,முதல் மூப்பு முதல் நரை அழகோ அழகு.எனக்கு ஒன்றிரண்டு இப்பதான் தெரிய ஆரம்பித்து இருக்கு.

    ReplyDelete
  4. அருமையான பதிவு..தொடரட்டும்.

    ReplyDelete
  5. இயற்கையே நல்லது

    ReplyDelete
  6. கருப்பு அடித்தால் பரவாயில்லை இங்கு வெளி நாடுகளில் கலர் கலராயல்ல்வா அடிக்கி ரார்கள். கண்ணராவி

    ReplyDelete
  7. //மாசத்துக்கொருதடவை கலர் பண்ணிக்கிட்டு உங்க பெரியப்பா சின்னப்பையன் மாதிரி இருக்கார் நான் அவருக்கு அக்கா மாதிரி இருக்கேன் //

    :))

    //முன்னால தெரியிற ஒண்ணுரெண்டு நரைமுடியை என்னசெய்யலாம்//

    ஒன்னு ரெண்டு தான சகோ! விட்டுடுங்க ;)

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு சுந்தரா.
    நிறைய பேர் இப்படி கூறுவதை நானும் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  9. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

    ReplyDelete
  10. நன்றி அக்கா :)

    நன்றி சித்ரா (அதைச் சொல்லும்போது, முகத்தில் பெருமையைப் பாஎக்கணுமே) :)

    நன்றி ஆசியா...அப்படியே விட்டுர்றேன் :)

    ReplyDelete
  11. நன்றி பாரதி ( இனிமே பாரதி மட்டும்தான் :))

    நன்றி கார்த்திக், நிஜம்தான்.

    ஆமா நிலாமதி, இங்கயும் நிறையபேர் அடிச்சுக்கிறாங்க:)

    ReplyDelete
  12. விட்டாச்சு சரவணன் :)

    கேட்டதைத்தான் நானும் சொன்னேன் அம்பிகா :)

    வருகைக்கு நன்றி தமிழுலகம்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails