Sunday, December 5, 2010

இது, ரகசியமாய்ச் செய்யவேண்டிய விஷயம்!

இதை யாரும் செய்யலாம்...எப்பவும் செய்யலாம். ஆனா, சுத்திலும் யாரும் இல்லைன்னு உறுதிபண்ணிக்கிட்டுச் செய்யணும். ஏன்னா, உங்களப் பாத்த அதிர்ச்சியில, யாராச்சும்,பயத்தில நடுங்கிப்போகவோ,இல்லைன்னா, உங்களுக்கு புத்தி தடுமாறிப்போச்சுன்னு நினைக்கவோ சான்ஸ் இருக்குது.

முப்பது வயசுக்குமேல ஆயிட்டாலே முகத்தசைகள்ல சுருக்கம், தொய்வு ஏற்பட ஆரம்பிச்சிடும்னு சொல்லுவாங்க. நல்ல ரத்த ஓட்டம் கிடைச்சா இதெல்லாம் கொஞ்சம் தள்ளிப்போடமுடியும்னும் சொல்றாங்க. குறிப்பா, கணினியில் நீண்டநேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு, கழுத்துக்குமேல போதுமான ரத்தஓட்டம் இல்லாம, கண்களில் சோர்வும், கழுத்தில் வலியும் ஏற்படும். தலைப்பகுதிக்கு ரத்தஓட்டத்தை ஏற்படுத்தும் இந்தப் பயிற்சி, அதற்கெல்லாம் நல்ல தீர்வாக இருக்கும்.

இதை சிங்காசனம்ன்னு சொல்லுவாங்க. அதாவது கண்ணை உருட்டி, நாக்கை வெளியே நீட்டிக்கிட்டு செய்யும்போது சிங்கம் மாதிரி இருக்குமாம். இந்தப் பயிற்சியைச்  செய்யும்போது, நீங்களே கண்ணாடியைப் பார்த்துக்கிட்டு, சிங்கமாத் தெரியுதா, அசிங்கமாத் தெரியுதான்னு முடிவு பண்ணிக்கிடுங்க :)

இப்ப சிங்காசனத்துக்கு வருவோம்...

வஜ்ராசனத்தில், அதாங்க முட்டிக்கால்போட்டு, மடக்கிய கால்களின்மேல் உட்கார்ந்துக்கோங்க.

கைகளைக் கால்முட்டியின்மேல் வைத்து, நிமிர்ந்து உட்காருங்க.

கண்களை நல்ல அகலமாத் திறங்க.

முடிஞ்ச அளவுக்கு, காற்றை நாசியில் உள்ளிழுத்துக்கோங்க.

சில வினாடிகளுக்கப்புறம், வாயைத் திறந்து, நாக்கை முடிஞ்ச அளவுக்கு வெளியே நீட்டியபடியே வேகமா,காற்றை வெளியே விடுங்க.

உங்களால முடிஞ்சவரைக்கும் அப்படியே இருங்க...விட்டுவிட்டு மூணு தடவை செய்யுங்க.




படத்திலிருப்பதுதான் சிங்கமுத்ரா...கண்களை அகல விரித்து, நாக்கை நீட்டி, முகத்தசைகளுக்குக் கொடுக்கும் பயிற்சி


இந்தப் பயிற்சியில் முகத்தசைகள் அத்தனையும் வேலை செய்வதால் நல்ல ரத்தஓட்டம் ஏற்படுவதோடு, தொண்டைப்பகுதிக்கும்,கண்களுக்கும் கூட ரொம்ப நல்லது.

அடிக்கடி செய்து, உங்களை நீங்களே பயமுறுத்திக்கணும்னு அவசியம் இல்லை. ஒருநாளைக்கு ரெண்டு தடவை போதும்.

இது, முகத்திலிருக்கிற  90 தசைகள் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால இதன் அவசியம் உணர்ந்தவங்க கட்டாயம் செய்யுங்க. செய்யுமிடத்தில், எதிரே கண்ணாடி இருந்தா ரொம்ப நல்லது.(கண்ணாடிக்கெல்லாம் சேதாரம் வராது ...நம்புங்க )

இந்த சிங்காசனத்தை, ஒரு விளையாட்டுப்பிள்ளை நின்னுக்கிட்டு செய்ய  ட்ரை பண்ற குட்டி வீடியோ இது. பார்த்து ரசிச்சுக்கோங்க :)








                                                              *****************

13 comments:

  1. தேவையான ஒன்று

    ReplyDelete
  2. நீங்க சொன்னீங்கன்னு செஞ்சிப்பார்த்தேன் பார்கில இருக்கும் போது .. ஒரு பிலிபைனியும் , இலங்கை பொண்ணும் சண்டைக்கு வந்துட்டாங்க .. கேட்டா நான் அவங்களை பார்த்து ஜொள் விடரேனாம் அவ்வ்வ்வ்..!! :-))

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு. வீடியோ இணைப்பு அருமை..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சண்டைக்குவந்ததோடு விட்டாங்களேன்னு சந்தோஷப்படுங்க ஜெய்லானி :)

    ஆர்வக்கோளாறுல அவசியமான விஷயத்தையெல்லாம் கவனிக்காமவிட்டுரக்கூடாது.

    ReplyDelete
  5. தகவலுக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  6. என்னங்க இப்படி? குழந்தையை சிங்ககுட்டின்னு நினைச்சுக்கிட்டேன்:-))))

    ReplyDelete
  7. this kid looking cute

    good post too.

    ReplyDelete
  8. வாங்க கக்கு மாணிக்கம்,

    வாங்க சரவணன்

    நன்றிகள்!

    ReplyDelete
  9. நன்றி சித்ரா!

    நன்றி துளசி அம்மா :)

    நன்றி வளர்மதி!

    ReplyDelete
  10. நன்றி கார்த்திக்!

    நன்றி பாரத்!

    ReplyDelete
  11. சிலவருஷங்களுக்கு முன்னே இந்த ஆசனத்தை எனக்கு மூச்சுப்பயிற்சிக்காக சிபாரிசு செஞ்சாங்க. கண்ணாடில பாத்துட்டு,'அய்யோ, அம்மா'ன்னு ஓடிவந்துட்டேன் :-)))))

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails