Thursday, December 9, 2010

"ஆ" வெஜ் கட்டிங்!!!

சின்னதிலிருந்து எப்பவுமே இந்த கட்டிங், வெட்டிங்ன்னாலே எனக்கு பயம்தான்.
வளைவா அருவாமணையை வச்சுக்கிட்டு விறுவிறுன்னு காய் நறுக்குற சித்தியையும் பெரியம்மாவையும் அப்போ வச்சகண்ணு வாங்காம பாத்திட்டிருப்பேன்.

எனக்கென்னவோ அந்த ஆயுதத்தைப்பார்த்தா, ஏதோ கொலைகாரப்பறவை ஒண்ணு குத்தவச்சு உக்கார்ந்திருக்கிறமாதிரியே தோணும். அந்த ஆயுதத்தைவச்சு அத்தனை காய்களையும் வெட்டித் த்வம்சம் பண்ற அத்தனைபேரும் என்னைப்பொருத்தவரை வீரிகள்தான் ((வீரனுக்குப் பெண்பால் ;) )இன்னமும்கூட என்வீட்டில் அருவாமணை இல்லாததுக்கும் என்னோட இந்த  பயம்தான் காரணம்.ஏதோ கத்தியும், வெஜிடபிள் சாப்பருமா (chopper) காலத்த ஓட்டிக்கிட்டிருக்கேன்.

என் கல்யாணத்துக்குக் கொஞ்சநாள் முன்னாடி, பத்திரிகை கொண்டுவந்தாங்க என் மாமியார் மாமனாரும், மற்றும் சில உறவுக்காரங்களும். எங்கவீட்டு உறவுக்காரங்களும் வீட்டில் இருந்தாங்க. முட்டைக்கோஸ் பொரியலுக்கு முழுசுமுழுசா மூணு கோஸ்கள் உட்கார்ந்திருக்க, என் பெரியம்மா பொண்ணு, என் தங்கச்சி, முட்டைக்கோஸை நான் நறுக்குறேன்னு சொன்னா.

அதுக்கு நான், ராஜி, நீ ஏதாவது கத்தரிக்காய், உருளைக்கிழங்கு இருந்தா நறுக்கு... முட்டைக்கோஸெல்லாம் உனக்கு ஒத்துவராதுன்னு சொல்ல, ஆஹா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்காக இப்பவே அக்கறையான்னு என்னைக் கலாய்ச்ச அவ, அருவாமணையும் சொளவுமா(முறத்தை எங்க ஊர்ல சொளவுன்னுதான் சொல்லுவோம்) என்கிட்டவந்து உட்கார்ந்தா.

பத்துப்பதினைஞ்சு நிமிஷம்தான் இருக்கும் மொத்த முட்டைக்கோஸையும் சீவித்தள்ளிட்டா. அப்படியே முல்லைப்பூவைக் காம்பிலிருந்து உதிர்த்தமாதிரி எல்லாமே ஒரேமாதிரி சிறுசிறுதுண்டுகளா இருந்தது. அது எப்படின்னு கேட்கிறீங்களா? முட்டைக்கோஸை முழுசா கழுவி எடுத்துக்கிட்டு அருவாமணையால அதை மாறிமாறிக் கொத்திவிட்டுட்டு, அப்புறம் அதே அருவாமணையால அதைச் கொஞ்சம்கொஞ்சமா சீவிவிட்டா, பொடிப்பொடியா உதிருது முட்டைக்கோஸ். இப்படி பக்கம்பக்கமா சீவி பத்துப்பதினைஞ்சு நிமிஷத்துல முடிச்சிட்டா. அன்றைக்கு முட்டைக்கோஸ் பொரியல் சாப்பிட்ட எல்லாரும் நிஜமாவே ஆச்சர்யப்பட்டாங்க.( ஒருவேளை மருமகப்பொண்ணுதான் நறுக்கியிருக்கும்னு மனசுக்குள்ள நினைச்சாங்களோ என்னவோ :))

என்னைப்பயமுறுத்தின அந்த ஆயுதம், என்னமா உட்கார்ந்திருக்குது பாருங்க....

 

இது அதோட புது வெர்ஷன்...


ஆனா, கல்யாணமாகிப்போன ஒரே வாரத்தில், மாமியாரின் கிராமத்தில், எனக்கும் ஒரு கட்டிங் சோதனை வந்திச்சு. அருவாமணையாவது பரவாயில்லை. அங்கே, வளைவா ஒரு அருவா (பாளையருவான்னு சொல்லுவாங்களோ?) மட்டும் குடுத்து, பத்து இருபதுபேர் சமையலுக்கு, வெங்காயம் நறுக்கச்சொன்னாங்க.(என்னை சோதிச்சுப்பாத்தாங்களோ என்னவோ...)

நல்லநாள்லயே நமக்கு இதெல்லாம் ஆகாதே, என்னே எனக்குவந்த சோதனைன்னு நொந்துகிட்டே, என் நாத்தனாரைக்கூப்பிட்டு,வீட்ல கத்தி இருக்கான்னு கேட்டேன். இருக்குது அண்ணின்னு, எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தா அவ. பார்க்கக் கூர்மையா இருந்திச்சு, ஆனா,வெட்டிப்பாத்தா மொட்டையோ மொட்டை.

வீட்ல, கத்தியும் கட்டிங் போர்டுமாக கொஞ்சம்கொஞ்சம் பழகியதுகூட எனக்கு அப்ப மறந்துபோனதுபோல ஆயிருச்சு. மொத்த வெங்காயத்தையும் கஷ்டப்பட்டு, உரிச்சுமட்டும் வச்சேன். என்னைப்பாக்க எனக்கே பாவமா இருந்துச்சு. அதுக்குள்ள ஆபத்பாந்தவியா அங்கவந்த என் அண்ணி, ஏம்மா அவகிட்டபோய் காய் நறுக்கச்சொல்லியிருக்கே...கொஞ்சநாள் அவ எல்லாத்தையும் வேடிக்கைபாக்கட்டும்ன்னுசொல்லி, அதை அவங்க வாங்கி, கடகடன்னு நறுக்கி, என் கண்ணுல கண்ணீர் வரவச்சுட்டாங்க.

அது வெறும் வெங்காயக்கண்ணீர்மட்டும் இல்லைங்க...ஆனந்தம், நன்றி எல்லாம் சேர்ந்த நெகிழ்ச்சிக் கண்ணீரும்தான்.

இப்படியே கடந்துவந்த கட்டிங் சரித்திரத்தில, முழு வாழைக்காயை வெட்டி, மூணு பஜ்ஜிபோட்ட கதையையும், வெள்ளை முள்ளங்கியை வெட்டுறேன்னு கிளம்பி, சிவப்பு முள்ளங்கியாக்கிய சோகக்கதையையும் சொன்னா...வேணாம் உங்க மனசு தாங்காது. அதனால, எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கிறேன் :)

பி.கு :- கொடுமையான ஆயுதங்களைப்பற்றிய இந்தப்பதிவை, முந்திய பதிவில், "அடுத்த சண்டை எப்போ?"ன்னு ஆசையாய்க் கேட்ட பாரத் பாரதிக்கு டெடிகேட் பண்றேன் :) என்னைமாதிரியில்லாம, நீங்கல்லாம் இப்பவே உங்க கட்டிங் 'திறமை'யைக் குறையில்லாம வளர்த்துக்கோங்க மக்கா :) :)

**************
7 comments:

 1. இப்படியே கடந்துவந்த கட்டிங் சரித்திரத்தில, முழு வாழைக்காயை வெட்டி, மூணு பஜ்ஜிபோட்ட கதையையும், வெள்ளை முள்ளங்கியை வெட்டுறேன்னு கிளம்பி, சிவப்பு முள்ளங்கியாக்கிய சோகக்கதையையும் சொன்னா...வேணாம் உங்க மனசு தாங்காது. அதனால, எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கிறேன் :)


  ....... பீலிங்க்ஸ் யார்!

  செம பதிவுங்க.

  ReplyDelete
 2. //இப்படியே கடந்துவந்த கட்டிங் சரித்திரத்தில, முழு வாழைக்காயை வெட்டி, மூணு பஜ்ஜிபோட்ட கதையையும், வெள்ளை முள்ளங்கியை வெட்டுறேன்னு கிளம்பி, சிவப்பு முள்ளங்கியாக்கிய சோகக்கதையையும் சொன்னா...வேணாம் உங்க மனசு தாங்காது//

  அப்ப உங்க வீட்டுக்கு வரணும்னா காய் எல்லாம் வெட்டி எடுத்துட்டு தான் வரணுமோ...ஆனா இதுகெல்லாம் அசர மாட்டோம் ... இன்னும் நெறைய கதை போடுங்க... அடபோங்கப்பா நாங்க எல்லாம் பாக்காத கட்டிங்ஆ இல்ல குக்கிங்ஆ? ஹா ஹா ஹா... நீங்க இன்னும் என் சமையல் பிரதாபம் எல்லாம் படிக்கலையோ... ஹா ஹா ஹ

  ReplyDelete
 3. ஹஹா, இந்த காலத்தில் பலருக்கும் அருவாமனையில் வெட்டத் தெரியாது, அதே போல் தேங்காய் துருவாமனை (எங்கள் வீட்டில் இப்படித்தான் சொல்வோம்) உபயோகப் படுத்தி தேங்காய் துருவத் தெரியாது

  ReplyDelete
 4. நன்றி சித்ரா :)

  நன்றி அப்பாவி...உங்க இட்லி அனுபவங்கள் உலகப் பிரசித்தமாச்சே :)

  ReplyDelete
 5. //LK said...

  ஹஹா, இந்த காலத்தில் பலருக்கும் அருவாமனையில் வெட்டத் தெரியாது, அதே போல் தேங்காய் துருவாமனை (எங்கள் வீட்டில் இப்படித்தான் சொல்வோம்) உபயோகப் படுத்தி தேங்காய் துருவத் தெரியாது//

  என்னைமாதிரி இன்னும் நிறையபேர் இருக்காங்கன்னு சொல்லவரீங்க...

  நன்றி கார்த்திக் :)

  ReplyDelete
 6. சொளவு - ன்னு சொல்றீங்க ! ! அப்ப நீங்க திருநெல்வேலிதான்... அருவாமணையில மீன் அரியறத பார்த்திருக்கிறீங்களா ? நமக்குதான் பயமா இருக்கும்

  ReplyDelete
 7. வாங்க பொன்சந்தர்...

  சரியாத்தான் சொல்லியிருக்கீங்க:)

  மீன் அரிவதையும் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails