Sunday, December 12, 2010

காப்பி பேஸ்ட் களவாணிகள்!


கம்ப்யூட்டர் விண்டோவைப் பார்த்துப்பார்த்து கண்ணும் பூத்துப்போச்சு...கழுத்துவலி முதுகுவலின்னு கஷ்டமும் கூடிப்போச்சு. ஆனா, என்னதான் வருத்தம்வந்தாலும், தன்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்து நாலுபேர் பின்னூட்டமிடும்போது, தன்னோட எல்லாவலியும் தீர்ந்துப்போனதுபோல் உணர்வதாகத்தான் சொல்கிறார்கள் அநேகப் பதிவர்கள்.

ஆனா, இப்படி மண்டையைக் குடைந்து மூளையைக் கசக்கி,உணர்வுகளை உருக்கி எழுதப்படுகிற விஷயங்களை உறுத்தலின்றிக் களவாடிப் பேர்வாங்க நினைக்கிறாங்க கள்வர்கள் சிலர். சட்டுன்னு காப்பியெடுத்து பட்டுன்னு பேஸ்ட்பண்ணி பெருமையடையணும்னு அவ்வளவு ஆசை.

எனக்குத்தெரிந்து, முதலில்,சமையல் அட்டகாசங்கள் ஜலீலாவின் பதிவுகள் பிரபல பத்திரிகையொன்றில் அப்படியே திருடி வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தாங்க.அது அநேகருக்குத் தெரிந்திருக்கும். அதேபோல, இன்றைக்கு பதிவுலகில் பாபு என்பவருடைய பதிவைத்திருடி இன்னொரு பிரபல பத்திரிகை வெளியிட்டிருக்கிறதாகப் படிக்கநேர்ந்தது.

சொந்தப்படைப்புகளின்றி, அடுத்தவர்களின் படைப்புகளை இதுமாதிரி எடுத்து வெளியிடும்போது இது இன்னாருடைய படைப்பு என்ற சின்ன ஒரு குறிப்போட வெளியிடலாமே... இதனால் எழுதியவருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.

ஊரான்வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அலுங்காம அடுத்தவன்பொருளை அபகரிப்பதைக்குறிக்கவே இப்படிச்சொல்லுவாங்க. ஜலீலாவோட சமையல் குறிப்பைத் திருடி, தன்னோட சமையல் வலைப்பக்கத்தில் வெளியிருட்டிருந்த ஒருத்தர், தன் தளத்தில் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார், தான் தூத்துக்குடி மண்ணின் மைந்தன் என்று. அவர், பிறந்த மண்ணுக்குப் பெருமைசேர்க்கிற லட்சணம் அப்படி.

போன வாரத்தில் பதிவுலக சகோதரரொருவரின் கவிதைகள் அப்படியே களவாடப்பட்டு வெளியிட்டிருப்பதாகப் படித்துவிட்டு, அந்தத் தளத்துக்குப்போனால், அந்தம்மா அதைவிட அதிபுத்திசாலியாகி, திருட்டு வெளியானதும், தன்னோட வலைப்பக்கத்தை அழைக்கப்பட்டவங்கமட்டும் பார்க்கிறமாதிரி மாற்று ஏற்பாடுசெய்திருந்தாங்க. இன்னார் பெரிய எழுத்தாளர் என்று தன்னோட ஜால்ராக்களை நம்பவைக்க மக்கள் எப்படியெல்லாம் மெனக்கெடுறாங்கபாருங்க.


ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சி ஒன்றில் தான் வாங்கிய குளிர்பானத்தைப் பாதி குடித்துவிட்டு வடிவேலு வைக்க, அது குப்பைத்தொட்டியில் தவறி விழுந்துவிடும். அது தெரியாத வடிவேலு, பக்கத்தில் அதே குளிர்பானத்தைக் குடிச்சிக்கிட்டிருந்த சிங்கமுத்துவைப்பார்த்து கன்னாபின்னான்னு திட்டிருவார். அதுக்கு கடைசியில் சிங்கமுத்து சொல்லுவார், இனிமே காசுகுடுத்து எப்ப குளிர்பானம் வாங்கினாலும்கூட, நீ திட்டினதுதானேய்யா நினைவுவரும்ன்னு அவரோட சண்டை போடுவார்.

அங்கே, அது தன்னோடதாயிருக்குமோ என்ற சந்தேகத்திலேயே அந்தத் திட்டுத் திட்டுவார் வடிவேலு. ஆனா, இங்கே தன்னோடதையே திருடியிருக்காங்கன்னு தெரிஞ்சாலும் என்னசெய்வதென்று திகைத்து நிற்கிறது பதிவுலகம். இதுக்குக் கட்டாயம் ஒரு முடிவு வேணும். இனிமே திருடக்கூடாதுன்னு அவங்க நினைக்கிறமாதிரி தீர்வு ஒண்ணு வேணும்.

இப்படிப்பட்ட திருட்டுகளைத் தடுக்கவும், திறமையுள்ளவர்களின் படைப்புகளுக்கு அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவும் போராடவேண்டியது பதிவர்களாகிய நம் அனைவரின் கடமையுமாகும்.


22 comments:

 1. இது அறிவு செல்வத்தை திருடுவது. நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது.
  அனால் திருடுபவர்கள் வெட்கம் ஏதுமின்றி திரிகிறார்கள் என்பது தான் உண்மை.

  ReplyDelete
 2. ஒன்னுமே பண்ண முடியாது. இப்படி பதிவு எழுத்து மனச தேத்திக்க வேண்டியதுதான். அல்லது ஒரு பதிவுக்கு மேட்டர் தேத்திக்கலாம். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

  காப்பி பேஸ்ட் பண்ணினன்வன் தொடர்ந்து ஜெயிக்க முடியாது. அதனை லூசில் விட்டு விட்டு வேறு வேலை பார்ப்பது நல்லது. இல்லை என்றால் நமது மன நலமும் உடல்நல மும் தான் பாதிக்கப்படும்.

  உங்கள் பதிவு காப்பி பேஸ்ட் செய்யப்பட்டால் அது உங்களுக்கு கிடைத்த மகுடம் என்று நினைத்து கொள்ளுங்கள். நல்ல சரக்குதானே திருடப்படும்?

  ReplyDelete
 3. இந்த பதிவு நீங்க சொந்தமா எழுதுனதா? அல்லது 'காப்பி டைப்' களவாணில நீங்களும் ஒருத்தரா?

  ReplyDelete
 4. சரியான பதிவு. பதிவு திருடர்களுக்கு செருப்படி. உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 5. //போலீஸ் said...

  இந்த பதிவு நீங்க சொந்தமா எழுதுனதா? அல்லது 'காப்பி டைப்' களவாணில நீங்களும் ஒருத்தரா?//

  இந்தப் பதிவோட லேபிள் ல என்ன போட்டிருக்குன்னு கொஞ்சம் பாத்துட்டு எழுதுங்க போலீஸு...அது படிச்சதில் பிடிச்சது.

  இணையத்தில் படிக்கிற எல்லா ஜோக்கிலும் பெயர்கள் இருப்பதில்லை. இருந்தா வெளியிடுவதில் எனக்கு எந்தக் கஷ்டமோ நஷ்டமோ இல்லை.

  ReplyDelete
 6. குறிப்பா சொல்லணும்னா அந்த நகைச்சுவைகள் மின்னஞ்சலில் படித்தது :)

  ReplyDelete
 7. இப்படி திருடுறவங்களையெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது. அப்படி திருடும் ப்ளாக்குகளை பாலோ பண்ணுவதை அநேகர் தவிர்த்தாலே திருந்துவாங்கன்னு நெனைக்கிறேன், ஆனாலும் எந்தளவுக்கு சாத்தியம்னு தெரியல...

  ReplyDelete
 8. //பாரத்... பாரதி... said...

  இது அறிவு செல்வத்தை திருடுவது. நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது.
  அனால் திருடுபவர்கள் வெட்கம் ஏதுமின்றி திரிகிறார்கள் என்பது தான் உண்மை.//

  நிஜம்தான் பாரதி...நன்றி!

  ReplyDelete
 9. சரியாச் சொன்னீங்க சுந்தரா. தலைப்பே போடுது சூடு:)!

  ReplyDelete
 10. //Gopi said...

  உங்கள் பதிவு காப்பி பேஸ்ட் செய்யப்பட்டால் அது உங்களுக்கு கிடைத்த மகுடம் என்று நினைத்து கொள்ளுங்கள். நல்ல சரக்குதானே திருடப்படும்?//

  சொல்றீங்க...ஆனா, படைப்பாளிகள் இதை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான்.

  நன்றிகள் கோபி!

  ReplyDelete
 11. //முகுந்தன் said...

  சரியான பதிவு. பதிவு திருடர்களுக்கு செருப்படி. உங்களுக்கு நன்றி.//

  உங்களுக்கும் நன்றிங்க :)

  ReplyDelete
 12. //ஆமினா said...

  இப்படி திருடுறவங்களையெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது. அப்படி திருடும் ப்ளாக்குகளை பாலோ பண்ணுவதை அநேகர் தவிர்த்தாலே திருந்துவாங்கன்னு நெனைக்கிறேன், ஆனாலும் எந்தளவுக்கு சாத்தியம்னு தெரியல...//

  நன்றி ஆமினா!

  ReplyDelete
 13. //ராமலக்ஷ்மி said...

  சரியாச் சொன்னீங்க சுந்தரா. தலைப்பே போடுது சூடு:)!//

  நன்றி அக்கா!

  ReplyDelete
 14. எவ்வளவு கேவலமான விஷயம்?
  நல்ல பகிர்வு சுந்தரா.

  ReplyDelete
 15. யோசிச்சி ,நேரத்தை விரயம் பண்ணி ,டைப் அடிச்சி , படங்கள் பிடிச்சி ,இல்ல தேடி போடும் வேலையை..இப்பிடி ரெண்டே செகண்டுகளில் காப்பி பேஸ்ட் போடுவது மாதிரி கேவலம் எதுவும் இருக்கா..?

  பிடிச்சிருந்தா இங்கிருந்து எடுத்ததுன்னு ஒரு சின்னதா லிங்க் இல்ல கீழே பேர் போடலாமே..

  இன்னும் தெரியாம எத்தனை காப்பி பேஸ்ட் ஆகி இருக்கோ தெரியல :-(

  ReplyDelete
 16. இப்ப இல்ல இது ரொம்ப நாளாகவே நடக்குது,என்ன புலம்பி என்னவாகப்போகுது?

  ReplyDelete
 17. சுந்தரா சரியான பதிவு போட்டு இருக்கீங்க, தலைப்பே ரொம்ப சூடா இருக்கு இத பார்த்தாவது சில பேர் திருந்தனும் , ஆத்திர பட்டு என்னபா புரயோஜனம்.
  சில ஜென்மஙக்ளுக்கு புரியலையே.

  ReplyDelete
 18. நானும் அடிபட்டுருக்கேங்க!!!!

  ReplyDelete
 19. //இப்படிப்பட்ட திருட்டுகளைத் தடுக்கவும், திறமையுள்ளவர்களின் படைப்புகளுக்கு அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவும் போராடவேண்டியது பதிவர்களாகிய நம் அனைவரின் கடமையுமாகும்.///
  சரியாக சொன்னீர்கள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails