Tuesday, December 21, 2010

செஞ்சுபாருங்க....சூப்பர் பிரெயின் யோகா!!!


சாதாரணமாகச் செயல்படுகிற மூளையைச் சூப்பர் பவர் மூளையாக வேலைசெய்யவைக்கணுமா? மனதை ஒருமுகப்படுத்தி, படிப்பில் நல்லமதிப்பெண்கள் வாங்கணுமா? வலதுபக்க மூளை இடதுபக்க மூளை இரண்டையும் செயல்படவைக்கணுமா?

ஞாபகசக்தியை அதிகப்படுத்தணுமா? மன அழுத்தத்தைக் குறைத்து, மூளைத்திறனை வெளிப்படுத்தி, வெற்றிகளை அடையணுமா? Autism, Alzheimer போன்ற நோய்களிலிருந்து எளிதில் விடுபடணுமா?

ரொம்ப சிம்பிள்...எளிதான இந்த சூப்பர் பிரெயின் யோகாவைச் செய்தால் மேலேசொன்னதெல்லாம் எல்லாம்  எளிதில் நடக்கும்.

இங்க பாருங்க...Super brain yoga வை இவங்க எப்படிச்செய்றாங்கன்னு :)



இதையே, சட்டுன்னு காதைப்பிடிச்சுப் பட்டுன்னு பத்து தோப்புக்கரணம் போடுன்னு வீட்ல யாராவதுசொன்னா, நாம போடவாபோறோம்? ஆனா, அதையே சூப்பர் பிரெயின் யோகான்னு சொல்லி, அடுத்த நாட்டுக்காரன் சொல்லிக்கொடுத்தாதான் , ஆஹா நம்ம வித்தையே நமக்கே கத்துக்குடுக்கிறாங்களேன்னு ஆச்சரியப்படுவதோடு மட்டுமில்லாம, நாமளும் செஞ்சுபார்ப்போமேன்னு ஒரு நினைப்பும் மனசுல வருது...இல்லே?

இந்த யோகாவை, அதாங்க தோப்புக்கரணத்தை, பிள்ளையாரை நினைச்சுக்கிட்டும் போடலாம், பள்ளிக்கூட நாட்களை நினைச்சுக்கிட்டும் போடலாம். எப்படிப்போட்டாலும் இது நிச்சயம் பலன்கொடுக்கும். ஆக, மூளையின் சிறப்பான செயல்பாடு மூணே நிமிஷங்களில் கிடைக்குதுன்னா, இதை வேணாம்னு சொல்லமுடியுமா என்ன?  :)



7 comments:

  1. நம்ம முன்னோர்கள் சும்மாவா செய்யச் சொன்னாங்க?! எல்லா விஷயத்திலையும் ஏதோ உண்மைகள் ஒளிஞ்சுக்கிட்டு தான் இருக்கு.
    நாம தான் அதை செய்யாமல் தவற விட்டிருக்கிறோம். தேடிக் கண்டுபிடிச்சு சொன்னதுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  2. பிள்ளையாருக்கு ஐஸ் வைக்க சொல்றாங்க ;)

    ReplyDelete
  3. பெரியவங்களா கொக்கா???

    காரணம் இல்லாம எதையும் சொல்லமாட்டாங்கன்னு இதுல இருந்தே தெரியுது

    ReplyDelete
  4. உபயோகமான தகவல் (வீடியோ). இந்தியா இந்தவிதத்தில் முதலே முன்னேறி விட்ட நாடு சார்

    ReplyDelete
  5. ஷேர் பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ். எவ்வளவு பெரிய பயிற்சியை எவ்வளவு எளிமையான பழக்கமாக மாற்றியுள்ளார்கள் நம் முன்னோர்கள்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails