Tuesday, November 22, 2011

முக பாலீஷ்!


சமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். வழக்கத்துக்குமாறாக, அன்றைக்குக் கூட்டமும் குறைவாக இருக்க, என்னதான் அதுவென்று அறிந்துகொள்ளுகிற ஆவலில், ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் விசாரித்தேன். ஆஸ்பத்திரி மேலிருந்த விசுவாசத்தில் அதைப்பற்றி ரொம்ப விளக்கமாகச் சொன்னது அந்தப்பெண்.

விஷயம் என்னன்னா, முகத்தில் நீண்டநாள் தழும்புகள், முகச் சுருக்கங்கள் மற்றும் பருத்தழும்புகளைப் போக்குவதற்காக, நம்ம வீட்டில் மொசைக் மற்றும் மார்பிளுக்குப் பாலீஷ் போடுவோமே அதுமாதிரி, மயக்க மருந்து அல்லது வலி தெரியாமலிருக்க மருந்து கொடுத்துட்டு, உப்புக்காகிதம், அதாங்க sand paper அல்லது அதுமாதிரியான ஏதாவது சொரசொரப்பான கருவியைக்கொண்டு முகத்தின் மேல்தோலைத் தேச்சு எடுத்துருவாங்களாம். தோலை உரிச்சு எடுத்தா எப்படியிருக்குமோ அப்படி ஆயிருமாம் முகம். அதாவது சிவந்த நிறத்தில் உள்தோல் தெரிய ஆரம்பிக்குமாம்.

பின்னர் மருந்தெல்லாம்கொடுத்துக் குணப்படுத்தி, பழையமாதிரி புதுத்தோல் வளரப் பல மாதங்களாகும். ஆனால்,புதிதாக வளருகிற தோல் தழும்புகள் ஏதுமில்லாமல் இருக்குமாம். அந்தப் பொண்ணு சொல்லும்போதே எனக்கு பயம் வந்தது. கேட்டுவிட்டுக் கொஞ்சநேரத்தில் டாக்டரிடம் போனபோது, அந்த டாக்டரோட முகத்திலும், முன்பு பார்த்ததைவிட ஏகப்பட்ட வித்தியாசம். அந்த வைத்தியத்தைத் டாக்டர் தன்னோட சொந்த முகத்துக்கும் செய்து பார்த்திருக்கிறாரோ என்று நினைத்தபடியே வெளியில் வந்தேன்.

வெளியில் வந்ததும் மகளிடம், அந்த ரிசப்ஷன் பெண் சொன்ன அதே ட்ரீட்மென்ட்டை டாக்டர் தன்னோட முகத்துக்கும் செய்திருக்கிறார்னு நினைக்கிறேன் என்றேன். அதற்கு அவள் சொன்ன பதில், சாலையென்றும் பார்க்காமல் சட்டென்று வாய்விட்டுச் சிரிக்கவைத்துவிட்டது.

"முகத்தோட ஒரு பக்கத்தைக் கொஞ்சம் அதிகமாத் தேச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்."டாக்டருக்கு முகம் கொஞ்சம் கோணலாகிப்போச்சு இப்போ..." என்றாள் அவள்.

Dermabrasion பற்றிய தகவல்கள் இணையத்திலும் நிறைய இருக்கிறது. விக்கியார் என்ன சொல்கிறார்னு தெரிஞ்சிக்க இங்கே பாருங்க...


10 comments:

 1. நானும் இங்கிருக்கும் மருத்துவமனைகளில் இதுபோன்ற விளம்பரங்களைப் பார்த்திருந்தாலும் அது எப்படி என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். செய்முறையைக் கேட்கும்போதே பகீர் என்கிறதே. இயற்கையான அழகைப் பராமரித்தாலே போதும். அப்புறம் ஏதாவது பிரச்சனை வந்தால் உள்ளதும் போச்சுன்னு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். பகிர்வுக்கு நன்றி சுந்தரா.

  ReplyDelete
 2. சுந்தரா.....அந்த டாக்டர் உங்க குறும்பைக் கேக்கணுமே !

  ReplyDelete
 3. //கீதா said...
  நானும் இங்கிருக்கும் மருத்துவமனைகளில் இதுபோன்ற விளம்பரங்களைப் பார்த்திருந்தாலும் அது எப்படி என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். செய்முறையைக் கேட்கும்போதே பகீர் என்கிறதே. இயற்கையான அழகைப் பராமரித்தாலே போதும். அப்புறம் ஏதாவது பிரச்சனை வந்தால் உள்ளதும் போச்சுன்னு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். பகிர்வுக்கு நன்றி சுந்தரா.//

  வாங்க கீதா :) நன்றி!

  ReplyDelete
 4. nalla irukku!!
  naan itthanai kodi thanthutten..
  neenga enaaku ethana kodi tharaporinga???

  ReplyDelete
 5. அய்யய்யோ படிக்கவே பயமா இருக்குதே.
  இது எங்கே போய் முடியும்னு தெரியலையே >

  ReplyDelete
 6. intha kalathirkku thevayana nalla pathivu ithu

  ReplyDelete
 7. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html

  ReplyDelete
 8. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 9. இயற்கை மீறிய அழகு ஆபத்துகளை விளைவிக்கும் உண்மையதான்
  உங்களின் வரும் முன் காப்போம் யோசனை அருமை ...........(பயபடாதீங்க எங்களுக்கு அறிவுறுத்தியதை சொன்னேன் )

  ReplyDelete
 10. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

  http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_16.html

  நட்புடன்

  வெங்கட்.
  புது தில்லி.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails