Saturday, June 18, 2016

கொசுப் பேச்சுக் கேட்கலாம் வாங்க...

அம்மா கொசு: செல்லம், மாடிவீட்டுப்பக்கம் மறந்துகூடப் போயிராதே...

குட்டிக்கொசு : ஏம்மா, அவங்கல்லாம் ஓடோமாஸ் போடுறவங்களா?

அம்மாகொசு : இல்லடா, அந்த வீட்டுக்காரருக்கு டெங்குக் காய்ச்சலாம்...

                                                                  **********************

ராமு கொசு : நேத்திலேருந்து ஆளையே காணமே...எங்கடா போனே?

சோமு கொசு : கவுன்சிலர் வீட்டு ஏசி கார்ல கொஞ்சநேரம் கண்ணசந்துட்டேனா, அவங்ககூட பழனி வரைக்கும் போகவேண்டியதாப்போச்சு. சும்மா சொல்லக்கூடாதுடா, பழனிக் கொசுவெல்லாம் பக்தர்களைக் கடிச்சுக்கடிச்சு, நம்மளைவிட ரொம்ப சௌக்கியமா ஸ்ட்ராங்கா இருக்குதுங்க.

*********************


கணவன் கொசு: பிள்ளைங்களும் நானும் தொழிலுக்குப் போகும்போது முகத்தைச் சோகமா வச்சிட்டு உட்கார்ந்திருக்காதேன்னு எத்தனைநாள் சொல்றது?

மனவி கொசு : உங்களுக்கென்ன,யாரை வேணுன்னாலும் கடிக்கலாம், எந்த ரத்தத்தை வேணுன்னாலும் குடிக்கலாம். சர்க்கரை வியாதி வந்ததுலேருந்து பத்திய ரத்தம் தேடித்தேடி, எனக்குப் பைத்தியமே பிடிச்சிரும் போலிருக்கு. 

**********************

அண்ணன் கொசு : விடிஞ்சும் விடியாமலும் வெளியில புறப்பட்டுட்டியே, என்னடா வேலை?

தம்பி கொசு : நம்ம ஊர் லயன்ஸ் கிளப் ல ரத்ததானம் பண்றாங்களாம். ரகரகமா ரத்தமெல்லாம் ஒரே இடத்துல கிடைச்சா வேணாம்னா சொல்லுவாங்க,அதான்...

**********************

கொசு கமலா : அந்த கோழிப்பண்ணைக் கொசுவோட கொஞ்சிக்கிட்டுத் திரியாதேன்னு எத்தனைநாள் சொல்றேன்?

கொசு விமலா : ஏண்டி, உனக்கென்ன பொறாமை?

கொசு கமலா : பொறாமையா,அடிபோடீ... பறவைக்காய்ச்சல் வந்திச்சுன்னா, யாரும் பக்கத்துலகூட வரமாட்டாங்க, பாத்துக்கோ...

***********************

மனைவி கொசு(அலைபேசியில்) : ஏங்க கோயிலூர் பக்கம் இலவசமா கொசு மருந்தடிக்கிற வண்டி வந்திருக்காம். அந்தப்பக்கம் போயிராதீங்க.

கணவன் கொசு : அடிப்போடி இவளே...காலைலேருந்து அந்தக் கொசு மருந்து வண்டியிலதான் உக்காந்திருக்கேன். கொஞ்சம் புகைமூட்டமா இருக்கு, மத்தபடி ஒண்ணும் ஆகல.                                                                                                                                                                                                                                                                     :):):):):)

2 comments:

 1. அனைவருக்கும் வணக்கம்

  சுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  ReplyDelete
 2. வணக்கம்
  அமேசான் தமிழ் இது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் OFFERS மற்றும் COUPONS பற்றி தெரிவிக்கும் தளம்
  ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நண்பர்கள் இந்த தளத்தில் கிடைக்கும் கூப்பன் கோடுகளை பயன் படுத்தி, உங்களது பணத்தை மிச்சம் செய்யலாம்
  இந்த தளத்தில் Amazon, Flipkart, Snapdeal, Paytm, Freecharge, Jabong, Redbus, Pizzahut, Yepme மேலும் பல தளங்களின் OFFERS கிடைக்கிறது மேலும் விவரங்களுக்கு
  amazontamil

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails